Latest Updates
-
1 கப் அவல் இருந்தா ஈவ்னிங் டைம்ல இந்த பக்கோடாவை செஞ்சு பாருங்க - மொறுமொறுனு சூப்பரா இருக்கும் -
சாணக்கிய நீதி படி இந்த 6 குணங்களில் ஒன்று உங்களுக்கு இருந்தாலும் உங்களுக்கு ஆயுள் ரொம்ப கம்மியாம் - ஜாக்கிரதை -
உருளைக்கிழங்கை இந்த மாதிரி கல்யாண வீட்டு ஸ்டைல் பால் கறி செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
ஜூன் 28-ல் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சேமியா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 13 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு நினைத்தது பலிக்கும் நாளாக இருக்குமாம் -
ஜூன் 17-ல் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. -
சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
இனிமே டீ குடிக்கும் போது இந்த 5 உணவுகளை தெரியாம கூட சாப்பிடாதீங்க - இல்லனா உங்களுக்குத்தான் ஆபத்து -
இதுல உங்க கை எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்க உண்மையான குணத்தை சொல்றோம்..
பெண்கள் காபி குடிக்கும் நேரங்களில் விவாதிக்கும் விஷயங்கள்!!!
பெண்கள் என்றாலே பேச்சுதான். பேசாமல் இருக்கும் பெண்களை பார்ப்பது கடினம்தான். இரு பெண்கள் பேசத் தொடங்கி விட்டால் அதில் எல்லா தலைப்புகளிலும் விவாதங்கள் இருக்கும்.அவர்களின் விவாதங்கள் சில நேரங்களில் பயனுள்ளதாகவும் சில நேரங்களில் பயனற்றதாகவும் இருக்கும்.
பெண்கள் அனைவருமே தனித்தன்மை வாய்ந்த பண்புகளை உடையவர்கள். உடைகள், நடவடிக்கைகள், அன்றாட பேச்சுகள் போன்ற அனைத்திலுமே வேறுபட்டு இருப்பவர்கள். ஆண்கள் அனைவருமே அரசியல், விளையாட்டு மற்றும் டேடிங் போன்றவற்றை விவதிப்பதர்க்கே விரும்புவார்கள். ஆனால், பெண்கள் சற்று வித்தியாசமானவர்கள். காபி நேரங்களில் அல்லது வேலை நேரங்களிலும் அரட்டை அடிப்பதில் பெண்களுக்கே முதல் இடம். அவர்களது விவாதங்கள் சிறிய பொருள்களில் இருந்து ஆகாயம் வரையிலான பொருள்கள் வரை இருக்கும். ஒரு பெண்ணிடம் காபி நேரத்தில் நீங்கள் எதை பற்றி விவாதிக்க விரும்புகின்றீர்கள் என்று கேட்டால், " எதைப்பற்றிவேண்டுமானாலும்" என்ற பதில் தான் வரும். பெண்களின் பேச்சு அவ்வளவு எதார்த்தமான ஒன்றாகும்.
சில சமயங்களில் பெண்கள் எதை பற்றி விததிகின்றார்கள் என்ற கேள்விக்கு பதிலளிப்பது கடினமாகக்கூட இருக்கும். எவருமே சரியான பதிலை அளிக்க முடியாது. ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு விருப்பங்கள் இருக்கும். சிலர்க்கு அரசியல் மிகவும் பிடிக்கும் ஆனால் ஒரு சிலருக்கு பிடிக்காது. பெண்களுக்கு நாகரிகத்தில் அதிக விருப்பம் இருக்கும். எனினும், அதனை பற்றி சிறிதளவே தெரிந்திருக்கக் கூடும். காபி நேரங்களில் பெண்கள் விவாதிக்கும் தலைப்புகள் பல வகைப்படும். அவை அரசியல், மதம், நாகரீகம், பிரபலங்களின் பற்றிய வம்புகள், வரலாறு, படங்கள், புத்தகங்கள் என சொல்லிக்கொண்டே போகலாம். பெண்கள் விவாதங்களில் கார சாரம் நிறைந்திருக்கும். ஆண்கள் இதனை கவனித்து தங்களது அறிவை வளர்த்துக்கொள்ளலாம். பெண்கள் விவாதிக்கும் சில விஷயங்கள் உங்களுக்காக இதோ.

ஸ்கிரிப்ட் தயார் செய்யக்கூடாது
காபி நேரங்களில் பெண்களுடனான விவாதத்தின் போது, இது தான் பேச வேண்டும் என்று எதையும் முன்பே திட்டமிடக் கூடாது. திட்டமிடுதல் நேரத்தையும் சக்தியையும் வீணாக்கும். ஒருவேளை முன்னதாகவே ஏதாவது திட்டமிட்டிருந்தால், அது எந்த பலனையும் அளிக்காது. ஆகவே விவாதங்களை அதன் போக்கிற்கு விட்டுவிட வேண்டும். இப்படிதான் இருக்கும் பெண்களின் விவாதங்கள்.

சினிமா
காபி நேரங்களில் பெண்கள் விவாதிக்க விரும்பும் முக்கிய தலைப்பு இதுதான். தனது விருப்பமான பிரபலங்கள் பற்றியும், அவரை பற்றிய தனது எண்ணங்களையும் விவாதிக்க விரும்புவார்கள். குறிப்பாக ஹீரோயின் பற்றியும் விவாதிக்க மறக்க மாட்டார்கள். அவள் போட்டிக்கும் டிரெஸ்ஸை பார்த்தாயா நன்றாகவே இல்லை!!. மேலும் தனக்கு விருப்பமான ஹீரோ பற்றியும் புகழ்ந்து கூறுவார்கள்.

காதல்
பெண்களின் விவாதங்கள் காதலை பற்றி பேசாமல் நிறைவேறாது. பொது இடங்களில் பேசாமல் இருந்தாலும் காதல் பற்றிய பேச்சு அவர்களுக்கு விருப்பமானதாகவே இருக்கும். இரு பெண்கள் தீவிரமாக பேசிக்கொண்டிருந்தால், கண்டிப்பாக காதலை பற்றி தான் இருக்கும். அதனால், அவர்கள் விவாதத்தில் குறுக்கிடாதீர்கள்.

சுற்றுலா மற்றும் விடுமுறை நாட்கள்
ஒரு சில பெண்களுக்கு பயணம் செய்வது மிகவும் பிடிக்கும் ஆனால், ஒரு சிலர்க்கோ அது பிடிக்காது. எனினும், அவர் கணவர் சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தால் அது தான் அன்றைய சூடான விவாதமாக இருக்கும். பெண்கள் உலகத்தில் உள்ள எல்லா இடங்களை பற்றியும் பேசுவார்கள் குறிப்பாக அவர்கள் தேனிலவிற்கு சென்று வந்த இடத்தை பற்றி விவரிக்க விரும்புவார்கள்.

கனவுகள்
கனவுகள் இல்லாத பெண்களா? நம்பமுடியவில்லைதானே!! எல்லா பெண்களுக்கும் சில கனவுகள் இருக்கும் அல்லது சில அச்சுறுத்தல்கள் இருக்கும். பெண்கள் காபி நேரங்களில் தனகளது கனவுகள் பற்றி விவாதிக்க பெரிதும் விரும்புவார்கள். சில சமயங்களில் சம்பந்தமில்லாத கனவாகக் கூட இருக்கும். அதனால் என்ன? நாங்கள் பெண்கள் அதனால் விவாதிப்போம்.

பொழுதுபோக்குகள்
பெரும்பாலான பெண்களுக்கு பொழுதுபோக்குகள் இருக்கும். அந்த ஓய்வு நேரங்களில் அவர்கள் விதவிதமானவற்றை செய்ய விரும்புவார்கள். ஒரே பொழுதுபோக்கு உள்ள பெண்கள் என்றால் விவாதிக்க நேரம் போதாது. ஒரு சில பெண்கள் விவாதிப்பதோடு மட்டுமல்லாது அதனை பெரிதாக்கி தொழிலாகவும் செய்ய விரும்புவார்கள். ஆம், உண்மையாகவே பொழுதுபோக்கை வியாபாரமாக மாற்றக்கூடிய திறன் பெண்களுக்கு உண்டு.

நண்பர்கள்
நண்பர்களை பற்றிய பேச்சு காபி நேரங்களில் தவறாமல் இருக்கக்கூடிய ஒன்றாகும். ஆண்களைப் போலவே பெண்களும் நண்பர்களிடம் அன்பாக இருப்பார்கள். அவர்களது விவாதங்களில் சில நேரங்களில் உற்ற நண்பர்களை பற்றியோ அல்லது நண்பர்களை பற்றிய வம்புகளோ இருக்கும். எதைப்பற்றி இருந்தாலும் அதற்கு முடிவு என்பதே கிடையாது. பெண்கள் விவாதிப்பதை பெரிதும் ரசிக்கலாம். வெவ்வேறு தலைப்புகளில் பெண்கள் விவாதிப்பதை கண்டு ரசியுங்கள்.



Click it and Unblock the Notifications