For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடுத்தர மக்கள் வசிப்பது கஷ்டம் என்று நினைக்கும் இந்திய நகரங்கள்!!!

By Maha
|

அனைவரும் வெளிநாடுகளை விட, இந்தியாவில் அனைத்தும் விலை மலிவாக கிடைக்கும் என்று நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறு நினைப்பது தான் தவறு. அவ்வாறு நினைப்பவர்கள், இந்தியாவில் வந்து தங்கினால் தான், இந்தியாவில் விலை மலிவாக உள்ளதா அல்லது இல்லையா என்பது தெரியும்.

ஏனெனில் இன்றைய காலத்தில் இந்தியாவில் விற்கும் காய்கறிகள், போக்குவரத்து செலவுகள், குடியிருப்பு வீடுகள், படிப்பு செலவுகள் போன்றவற்றை பார்த்தால், வாயில் தான் கை வைக்க வேண்டும். அந்த அளவில் அனைத்தின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் உழைத்து வேலை செய்து கிடைக்கும் வருமானத்தின் அளவு மட்டும் அப்படியே உள்ளது. உதாரணமாக, பெங்களூரில் ஒரு அறை கொண்ட வீட்டில் தங்குவதற்கு குறைந்தது 6-7 ஆயிரம் தேவைப்படுகிறது. ஆனால் வாங்கும் சம்பளமோ, 6-10 ஆயிரமாகத் தான் இருக்கும்.

இந்த நிலையில் இந்தியாவில் ஒருசில நகரங்களில், இந்த மாதிரியான வருமானத்தைக் கொண்டு சுத்தமாக வாழ முடியாது. அத்தகைய நகரங்கள் எவையென்று பட்டியலிட்டுள்ளோம். அதைப் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டெல்லி

டெல்லி

இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் வசிப்பது அவ்வளவு எளிதல்ல. இங்கு தான் பெரிய சில்லரை விற்பனை தொழில் மற்றும் நிலத்தின் விலை ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே இருக்கும்.

மும்பை

மும்பை

மும்பை கனவுகளின் நகரம் மட்டுமல்ல, நடுத்தர மக்கள் வசிப்பதற்கு கஷ்டமான ஒரு நகரமும் கூட.

பெங்களூர்

பெங்களூர்

ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பெங்களூரில் வாழ்வதும் மிகவும் சிரமமே. தற்போது பெங்களூரில் வாழும் மக்களின், வாங்கும் சம்பளத்தை விட, செலவழிக்கும் பணத்தின் அளவே அதிகம்.

சென்னை

சென்னை

சென்னையிலும் ஐடி நிறுவனம் அதிகம் உள்ளது. அத்தகைய சென்னையும் இந்தியாவில் இருக்கும் நடுத்தர மக்கள் வாழ்வதற்கு சற்று கஷ்டத்தைக் கொடுக்கும் நகரங்களில் ஒன்றாகும்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஆந்திராவின் தலைநகரமான ஹைதராபாத், சென்னைக்கு அடுத்தபடியாக ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள நகரமாகும். இங்கு ஐடி ஊழியர்களைத் தவிர மற்றவர்கள் வாழ்வது எளிதானது அல்ல.

பூனே

பூனே

மஹாராட்டிராவில் உள்ள பெரிய நகரம் தான் பூனே. இங்கு கல்வி வசதிகள் மிகவும் சூப்பராக இருக்கும். அதே சமயம் அதற்கு செலவழிக்க நேரிடும் பணமும் அதைவிட சூப்பராக இருக்கும்.

கொல்கத்தா

கொல்கத்தா

அனைவரும் கொல்கத்தாவில் அனைத்தும் விலை மலிவாக நினைப்பார்கள். ஆனால் உண்மையில், இந்தியாவிலேயே அதிக செலவாகும் நகரங்களுள் இரண்டாவது நகரம் இது தான். இங்கு நடுத்தர மக்கள் வசிப்பது நிச்சயம் மிகவும் கஷ்டமே.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூர்

அரசர்களின் நகரமான ஜெய்ப்பூரும், நடுத்தர மக்கள் வாழ்வதற்கு கஷ்டமான ஒரு நகரம் தான்.

கோவா

கோவா

மிகவும் குளிர்ச்சியான மற்றும் அழகான சுற்றுலாத் தளமான கோவாவில் வாழ்வதும் கடினமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

The Most Expensive Cities Of India

When compared to other first world countries like the USA, India is comparatively cheaper. There are many people who think that India is a cheap country to stay in. There are few cities in India which are insanely expensive. Take a look at the list of top 9 most expensive cities in India.
Story first published: Wednesday, May 29, 2013, 16:27 [IST]
Desktop Bottom Promotion