Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
பூரியில் நடக்கும் ஜெகநாத் ரத யாத்திரையின் படங்கள்!!!
ஒவ்வொரு வருடமும் ஒரிஸ்ஸா/ஒடிசா மாநிலத்தின் பூரி நகரில் அமைந்துள்ள ஜெகநாதர் கோவிலில் தேர் திருவிழாவானது நடைபெறும். அந்த ரத யாத்திரையான தேர் திருவிழாவானது இன்று தொடங்கிவிட்டது. ஒரிஸ்ஸாவிலேயே மிகவும் பெரிய திருவிழா என்றால் அது இந்த ரத யாத்திரை தான். இந்த ரத யாத்திரை உலகில் மிகவும் பிரபலமான, பலரும் பங்கேற்க நினைக்கும் ஒரு பெரிய யாத்திரையாகும். இந்த ஜெகநாதர் கோவிலில் இருந்து இழுக்கப்படும் தேரானது குண்டிச்சா கோவிலுக்கு கொண்டு செல்லப்படும்.
ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் ரத யாத்திரையானது நடைபெறும். இந்த ரத யாத்திரையில் ஜெகநாதரான கிருஷ்ணர், அவரது சகோதரர் பாலபத்ரர் மற்றும் சகோதரி சுபத்திரா தேவியுடன் தேரில் வீதி உலா செல்வார். அதாவது, இந்த ரத யாத்திரையின் மூன்று தேர்கள் இழுக்கப்படும். இதில் மூவருக்கும் ஒவ்வொரு வண்ணங்களில் தேர்களானது பூக்களால் அலங்கரிக்கப்படும். அவை ஜெகநாதர் தேரானது மஞ்சள் சிவப்பு நிறத்திலும், பாலபத்ரர் தேரானது பச்சை சிவப்பு நிறத்திலும் மற்றும் சுபத்திரா தேவியின் தேரானது சிவப்பு கறுப்பு நிறத்திலும் இருக்கும்.
ஏழு நாட்கள் நடைபெறும் இந்த தேர் திருவிழாவில், கிருஷ்ணர் அவரது சகோதர, சகோதரியுடன் வீதிகளில் வலம் வருவார். மேலும் தேர்களில் சிலைகளானது வைக்கப்பட்டப் பின்னர், தேர் செல்லும் வழியானது தங்க துடைப்பத்தால் பெருக்கப்பட்டு, சந்தன நீரை செல்லும் வழிகளில் தெளித்து, பின்னரே ரதங்களை இழுப்பார்கள்.
இப்போது இன்று ஆரம்பித்த பூரி ஜெகநாதர் ரத யாத்திரையின் படங்கள் உங்களின் பார்வைக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஜெகநாதர் சிலை
இது தான் பூரி ஜெகநாதர் கோவிலின் தேரில் அமர்ந்திருக்கும் ஜெகநாதர் சிலை.

ஜெகநாதர் கோவில் உள்ள மூவர்
இது ஜெகநாதர் கோவில் உள்ள மூவர் சிலைகள். இந்த படத்தில் வலது பக்கத்தில் ஜெகநாதரும், நடுவில் சுபத்திரா தேவியும் மற்றும் இடது பக்கத்தில் பாலபத்ரர் என்னும் பலராமரும் உள்ளனர்.

மூன்று தேர்கள்
இது மூன்று சிலைகளும் தேரில் வைத்தப் பின்னர் எடுத்தப் படம். மேலும் இதில் மஞ்சள் சிவப்பு நிற தேரில் ஜெகநாதரும், பச்சை சிவப்பில் பாலபத்ரரும் மற்றும் சிவப்பு கறுப்பு தேரில் சுபத்திரா தேவியும் உள்ளனர்.

தயாராக இருக்கும் தேர்கள்
இது தான் ஜெகநாதர் கோவிலில், குண்டிச்சா கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கும் மூன்று தேர்கள்.

வங்கத்தில்...
இந்த திருவிழா நன்கு சூடு பிடித்துவிட்டது என்பதன் எதிரொலியாக வங்கத்தில் உள்ள சிறு குழந்தைகள் சிறிய தேர்களை அலங்கரித்து, அதில் அந்த மூவரின் சிலைகளை வைத்து இழுத்து செல்கின்றனர்.

சுபத்திரா தேவி
இது மரத்தாலான சுபத்திரா தேவியின் பெரிய சிலையை ரதத்திற்கு எடுத்துச் செல்லும் போது எடுத்தப் படம்.

மக்கள் கூட்டம்
இது அலங்கரிக்கப்பட்ட ரதத்தில், சிலைகளை வைக்க வந்த மக்கள் கூட்டம்.

ஜெகநாதரை ரதத்திற்கு எடுத்துச் செல்லுதல்
இந்த படம் ஜெகநாதரை, பக்தர்கள் முழு பலத்தையும் செலுத்தி, ரதத்தில் அமர்த்த முயற்சிக்கும் போது எடுத்தப் படம்.

ஜெகநாதர் ரதம்
இந்த சிவப்பு மற்றும் மஞ்சள் கலந்த ரதம் தான் ஜெகநாதரின் ரதம்.



Click it and Unblock the Notifications
