உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!

By Maha

உலகில் அனைத்து நகரங்களும் கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. ஒவ்வொரு நகரங்களும் ஒவ்வொன்றிற்கு புகழ் பெற்றதாக இருக்கும். அந்த வகையில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில் உள்ள சில நகரங்களும் உள்ளன. இத்தகைய நகரங்களில் எங்கு பார்த்தாலும் கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் ஒவ்வொன்றும் இருக்கும். இங்கு 'கலை' என்பது திரைப்படம், தியேட்டர், ஓவியம், எழுத்தாற்றல், இசை போன்றவற்றை குறிப்பதாகும்.

இத்தகையவற்றில் சில நகரங்கள் மிகவும் பிரபலமாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் உள்ளன. மேலும் இத்தகைய நகரங்களுக்கு கலைதிறன் அதிகம் கொண்ட கலைஞர்கள் சென்றால், அவர்களது கலைத்திறன் வளர்வதோடு, நன்கு புகழ் பெற்றவர்களாகவும் வாழ முடியும். உதாரணமாக, பாரிஸ், ரோம் போன்றவற்றில் அழகான கட்டடக்கலை மற்றும் பல கலை அருங்காட்சியங்கள் உள்ளன.

அந்த வகையில் சில கலைநயம் அதிகம் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அவைகள் என்னவென்று பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரிஸ்

பாரிஸ்

உலகிலேயே மிகவும் அழகிய நகரம் என்று பெயரெடுத்த நகரம் தான், பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ். இங்கு பல கட்டடக்கலைச் சிறப்பு வாய்ந்த பல அழகிய கட்டடங்கள் உள்ளது.

நியூயார்க்

நியூயார்க்

அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரம் என்றால் அது நியூயார்க் தான். இங்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லை. மேலும் இங்குள்ள நியூயார்க் யூனிவர்சிட்டி ஆப் சினிமா மிகவும் பிரபலமானது.

புனே

புனே

இந்தியாவில் உள்ள புனே/பூனே இந்தியாவின் ஒன்பதாவது மிகப் பெரிய நகரமாகும். இங்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு பாரம்பரிய இசை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

பெர்லின்

பெர்லின்

ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினும் மிகப் பெரிய நகரம். இந்நகரத்தில் உள்ள சுவர் இடிந்து விழுந்த பின், இது கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்ததாக பாரிஸூக்கு அடுத்ததாக உள்ளது. அதிலும் இங்கு ஓவிய கலைஞர்கள், சிறந்த இசைக்கலைஞர்கள் பலர் உள்ளனர்.

புளோரன்ஸ்

புளோரன்ஸ்

புளோரன்ஸ் நகரத்தில் நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன. அதுவும் அவை அனைத்தும் கலைத்திறம் வாய்ந்தவையே.

கொல்கத்தா

கொல்கத்தா

மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தா, இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இந்த நகரம் கலாச்சாரம், வணிகம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு மையமாக விளங்குகிறது. மேலும் இங்கும் கட்டடக்கலையானது மாபெரும் வளர்ச்சியுற்றது.

சிகாகோ

சிகாகோ

அமெரிக்காவின், இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகரம் தான் சிகாகோ. இது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமாகும். மேலும் இது கட்டடக்கலை, சுற்றுலா, விளையாட்டு, பூங்கா போன்றவற்றில் சிறந்ததாக விளங்குகிறது.

லண்டன்

லண்டன்

உலகில் உள்ள அனைவருக்குமே லண்டன் மிகவும் பிடித்த நகரமாகும். ஏனெனில் இங்கு கலை, கலாச்சாரம், பல கற்பனையான அருங்காட்சியகம் போன்றவை நிறைந்து அழகாக, கண்ணுக்கு இனிமையைத் தரும் நகரமாக உள்ளது. மேலும் இங்குள்ள கட்டடங்கள், பாலங்கள் அனைத்தும் அழகான கலைநயத்துடன் கட்டப்பட்டவையாக இருக்கும்.

ரோம்

ரோம்

கலைஞர்களின் சிறந்த நகரமாக இருக்கும் நகரம் தான் ரோம். இங்கு ஒவ்வொரு தெரு முனைகளில் அழகான சர்ச்களை காணலாம். மேலும் இந்த நகரமே பண்டைய காலத்தின் பாரம்பரியம், கலைகள், இலக்கியங்கள், கட்டக்கலை போன்றவற்றை உணர்த்துபவையாக அழகாக அமைந்திருக்கும்.

மும்பை

மும்பை

மும்பை பெரிய நகரம் மட்டுமின்றி, இங்கு பழம்பெரும் பிருத்வி தியேட்டர் மற்றும் காலா கோடா போன்ற பல புகழ்பெற்ற கலை காட்சியகங்கள் உள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion