Latest Updates
-
குரு சுக்கிர சேர்க்கையால் உருவாகும் திருஷ்டி யோகம்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்.. -
இந்த 4 ராசி பெண்கள் தங்கத்துக்காக உயிரையும் கொடுப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
ராகி இட்லியும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 17 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தேவையற்ற செலவுகள் தேடிவருமாம்...! -
பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாட்டின் மாம்பழ நகரம் எது? ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறது தெரியுமா? -
கஜலக்ஷ்மி ராஜயோகம் 2026: இந்த 4 ராசிகளுக்கு செல்வமும், வெற்றியும் குவியப்போகுதாம்...உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் கொத்தமல்லி இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க... வீட்ல எல்லொரும் 2 இட்லி அதிகமா சாப்பிடுவாங்க...! -
உயர் இரத்த அழுத்தம் இருக்கா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க.. -
2026 IPL போட்டிகளில் விளையாடப்போகும் டாப் 10 வயதான வீரர்கள்... யாரெல்லாம் விளையாடப்போறாங்க பாருங்க...!
உலக நாயகன் கமலஹாசனின் சில சிறப்புத் தோற்றங்கள்!!!
இன்று நடிகர் கமலஹாசன், தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1954 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7 ஆம் தேதி பிறந்த இவர், தமிழ் சினிமா உலகில் 53 வருடங்களாக உள்ளார். அதுமட்டுமின்றி, இவரது நடிப்புக்கு இணை எவரும் வர முடியாது. ஏனெனில் இவர் ஒவ்வொரு படத்திலும் பல்வேறு கெட்டப்புகளில் வந்து கலக்குவார். அதுமட்டுமல்லாமல் 4 தேசிய விருதுகள், 19 ஃபிலிம் பேர் விருதுகள் என பல இந்திய விருதுகளைப் பெற்றுள்ளார்.
மேலும் இவர் சினிமா திரையுலகில் பணியாற்றியதற்காக இந்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி சிறப்பித்துள்ளது. அதுமட்டுமின்றி, உலக நாயகன் என்ற பட்டப்பெயரையும் பெற்றுள்ளார். இத்தகைய சிறப்பு வாய்ந்த மனிதராக விளக்கும் பத்மஸ்ரீ கமலஹாசன், நடிகர் மட்டுமின்றி, இயக்குநர், தயாரிப்பாளர், பாடகர், நடன இயக்குநர் என பல திறமைகளைக் கொண்டவர். இவரது திறமையால் இன்று ஹாலிவுட் செல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளார்.
இத்தகைய பெருமைகளைக் கொண்ட மற்றும் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கமலஹாசனின் சில மறக்க முடியாத மற்றும் தற்போதைய போட்டோக்கள் உங்கள் பார்வைக்காக...

சிறிய வயதில் நடிகர் கமல்
இது நடிகர் கமலஹாசன் சிறு வயதில் 'களத்தூர் கண்ணம்மா' என்ற படத்தில் நடித்த போது எடுத்தது.

யாராலும் மறக்க முடியாத கமல்
இது களத்தூர் கண்ணம்மாவில் "அம்மாவும் நீயே, அப்பாவும் நீயே..." என்ற பாடலின் போது எடுத்தது.

சற்று பெரிய வயதில்
இது கமலஹாசன் சற்று பெரிய பையன் ஆன பின்னர் எடுத்த போட்டோ.

இளம் வயதில் கமல்
உண்மையிலேயே கமலஹாசன் இளம் வயதில் செம அழகாக உள்ளார் தானே! இதிலும் அவரது மீசையின் ஸ்டைல் சூப்பரோ சூப்பர். ஒருவேளை அக்காலத்தில் இது தான் ஃபேஷனோ!

சப்பானி கமல்
இது பதினாறு வயதினிலே படத்தில், நடிகர் கமல் தனது நெருங்கிய நண்பரான சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் உடன் சேர்ந்து நடித்த படம். இந்த படத்தில் இவர் மேற்கொண்ட கதாபாத்திரத்திற்கு வேறு யாரும் பொருத்தமாக இருக்க முடியாது. அந்த அளவில் இந்த படத்தில் கமலுக்கு மேக் அப் மற்றும் நடிப்பு இருந்தது.

இந்தியன் தாத்தா
கமல் நடித்த படத்திலேயே மறக்க முடியாத மற்றும் இன்றும் விரும்பி பார்க்கும் வண்ணம் உள்ள ஒரு படம் என்றால் அது 'இந்தியன்' திரைப்படம் தான். இந்த படத்தில் நடிகர் கமல் இரட்டை வேடம் போட்டு கலக்கினார்.

விருமாண்டி கமல்
விருமாண்டி படத்தின் ஹைலைட்டே, நடிகர் கமல் இந்த படத்திற்கு வைத்திருந்த அந்த மீசை தான். இந்த மாதிரியான மீசை இவரை தவிர யாருக்கு நன்றாக இருக்காது என்று தான் சொல்ல வேண்டும்.

போலீஸ் கமல்
இது 'வேட்டையாடு விளையாடு' படத்தில் போலீஸ் வேடம் போட்ட போது எடுத்தது. கமலுக்கு பொருந்தாக வேடம் இவ்வுலகில் உண்டோ என்று கேட்கும் அளவில், இவருக்கு அனைத்து கதாபாத்திரங்களுமே பொருத்தமாக உள்ளது.

அமைதி கதாபாத்திரம்
உன்னைப் போல் ஒருவன் படத்தில் கமல் மேற்கொண்ட ஸ்டைல் அருமையோ அருமை. அதிலும் அவர் வைத்துள்ள தாடி மற்றும் மீசை அவருக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தைத் தருகிறது.

விஸ்வரூப கமல்
நடிகர் கமல் இயக்கி நடித்த படத்திலேயே விஸ்வரூபம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் இந்த படத்தில் கமல் திருநங்கை குணம் கொண்டவர் போன்று நடித்திருந்தது, பலே பலே என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் அந்த படத்தில் அவர் ஆடிய நடனம் சூப்பரோ சூப்பர்.

வெள்ளை நிற குர்தா
நடிகர் கமலஹாசன் வெள்ளை நிற குர்தாவில் க்யூட்டாக உள்ளார்.

மகள் ஸ்ருதியுடன் கமல்
இது மகள் ஸ்ருதியுடன் எடுத்த போட்டோ. இதில் கமல் சற்று முதுமை தோற்றம் வெளிப்பட்டாலும், இவர் போட்டிருந்த ஆடைகள் அவரை அழகாக வெளிப்படுத்துகின்றன.

சில்வர் நிற சட்டை மற்றும் கருப்பு கோட்
இது சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் உலக நாயகன் கமலஹாசன் சில்வர் நிற சட்டைக்கு கருப்பு நிற கோட் போட்டு வந்த போது எடுத்தது.

ட்ரான்ஸ்பரண்ட் சட்டை
எவ்வளவு தான் வயதானாலும் கமலுக்கு அனைத்து உடைகளுமே பொருத்தமாக இருக்கும். அதற்கு உதாரணம் தான், இந்த எம்பிராய்டரி வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ட்ரான்ஸ்பரண்ட் சட்டை.

ரஜினியுடன் கமல்
மற்றவர்களுக்கு இவர்கள் இருவரும் எதிரிகளைப் போன்று வெளிப்பட்டாலும், உண்மையில் இருவரும் நெருங்கிய நல்ல நண்பர்கள்.

ஊதா நிற சட்டை
கமலின் ஸ்டைலே ஸ்டைல் தான். இவருக்கு ட்ரெஸ்ஸிங் சென்ஸ் மிகவும் அதிகம். இதனால் தான் இவ்வளவு வயதான பின்னரும், சரியான ட்ரெஸ்ஸிங் சென்ஸால் இளமை தோற்றத்தில் வெளிப்படுகிறார். அதற்கு இந்த போட்டோ ஒரு உதாரணம்.

கம்பீர தோற்றம்
கமல் இதில் அழகான கருப்பு நிற சட்டைக்கு, கருப்பு கண்ணாடி போட்டிருப்பது, கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கிறது. முக்கியமாக இது கமலின் லேட்டஸ்ட் போட்டோவில் ஒன்று.

ப்ரௌன் கோட் சூட்
கமல் இந்த ப்ரௌன் கோட் சூட்டில் டக்கராக உள்ளார். இதுவும் சமீபத்தில் எடுத்ததே.

பர்ஃபெக்ட் லுக்
கமலஹாசனைப் பார்த்தால் 59 வயதானவர் போன்றே தெரியமாட்டார். வேண்டுமெனில் இவரது இளமையின் வெளிபாட்டை இந்த படத்தில் பாருங்கள்.

உலக நாயகன்
59 வயதிலும் கம்பீர தோற்றத்தையும், இளமைத் துள்ளலையும் கொண்ட உலக நாயகனாக பத்மஸ்ரீ கமலஹாசனுக்கு தமிழ் போல்ட் ஸ்கையின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.



Click it and Unblock the Notifications











