Latest Updates
-
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வரலாற்றில் மிகவும் பிரபலமான ஆசிரியர்கள்!!!
உலகில் உள்ள ஒவ்வொரு நாடுகளிலும் ஆசிரியர் தினத்தின் தேதி வேறுபடும். அத்தகைய ஆசிரியர் தினமானது அந்த நாடுகளில் உள்ள மிகவும் சிறந்த கல்வியாளரை அல்லது கல்வியில் மாற்றங்கள் கொண்ட வந்தவர்களை கவுரவிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதிலும் கல்வியில் மிகவும் சிறந்த மற்றும் தன் இறுதி காலம் வரை நல்ல ஆசிரியராக இருந்த, இந்திய நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாக இருந்த டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளைத் தான், ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றோம்.
அப்படி வரலாற்றில் நிறைய ஆசிரியர்கள் உள்ளனர். மேலும் அத்தகைய ஆசிரியர்கள் அனைவரும், தம்மிடம் பாடம் கற்றுக் கொண்ட மாணவர்கள் அனைவரும் பெருமைக் கொள்ளும் வகையில் மிகச்சிறந்த முறையில் கற்றுக் கொடுத்தனர். இப்போது அந்த வரலாற்றில் மிகவும் பிரபலமான சில ஆசிரியர்களைப் பார்ப்போம்.

டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்
இவரது பிறந்த நாளைத் தான் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம். இவர் மெட்ராஸ் மாநிலக் கல்லூரில் ஆசிரியராக பணியாற்றினார். நமது நாட்டின் இரண்டாவது ஜனாதிபதியாகவும் இருந்தார்.

அலெக்ஸாண்ட்ரா கிரகாம் பெல்
டெலிபோனைக் கண்டுபிடித்த அலெக்ஸாண்ட்ரா கிரகாம் பெல், பாஸ்டன் என்னும் காதுகேளாதோர் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி, அவர்களுக்கு நல்ல முறையில் கல்வியை கற்றுக் கொடுத்தவர்.

பண்டிட் ரவி சங்கர்
இந்தியாவில் மிகவும் பிரபலமான ஆசிரியர்களில் ஒருவர் தான் பண்டிட் ரவி சங்கர். இவர் மிகச் சிறந்த ஒரு சிதார் மேதை. இவர் இசை ஆசிரியரக பணியாற்றி, பல வித்துவான்களை உருவாக்கியவர்.

ஸ்டிங் (Sting)
மிகவும் பிரபலமான இசையமைப்பாளரான ஸ்டிங் என்பவர், ஆரம்பத்தில் லண்டனில் உள்ள செயிண்ட் கேத்ரீன் கான்வென்ட் பள்ளியில் ஆங்கிலம், இசை மற்றும் உதை பந்தாட்ட ஆசிரியராக பணியாற்றினார். இவரும் மிகச்சிறந்த ஆசிரியராக இருந்தார்.

ராபர்ட் புரோஸ்ட் (Robert Frost)
மிகவும் பிரபலமான கவிஞரான ராபர்ட் புரோஸ்ட், நியூ ஹாம்ப்ஷையர் டெர்ரியில் உள்ள பிங்கெர்டன் அகாடமியில் ஒரு ஆசிரியராக பணியாற்றினார். இந்த பல்கலைகழகத்தில் இவருக்கு ஒரு ஹென் மேன் என்ற பெயரும் உண்டு. ஏனெனில் இவருக்கு கோழி என்றால் பயமாம்.

சில்வஸ்டர் ஸ்டலோன் (Sylvester Stallone)
மிகவும் பிரபலமான அமெரிக்க கதாநாயகனான சில்வஸ்டர் ஸ்டலோனும் ஒரு ஆசிரியர் தான். அதிலும் இவர் சுவிச்சர்லாந்தில் உள்ள அமெரிக்க கல்லூரியில் ஒரு உடற்பயிற்சி ஆசிரியராக பணியாற்றினார்.

ஸ்டீபன் கிங் (Stephen King)
வரலாற்றில் புகழ்பெற்ற ஆசிரியர்களுள் ஒருவர் தான் ஸ்டீபன் கிங். இந்த பிரபலமான ஆசிரியர் மைனேவின் ஹாம்ப்டெனில் உள்ள ஹாம்ப்டென் அகாடமியில் ஒரு ஆசிரியராக பணியாற்றினார். மேலும் இது சலீம்ஸ் லாட் (Salem's Lot) என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார்.



Click it and Unblock the Notifications