Latest Updates
-
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க..
இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்கள்!!!
மும்பையில் இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2013(India International Jewellery Week 2013 or IIJW 2013) துவங்கிவிட்ட நிலையில், அந்த ஃபேஷன் ஷோவில் பல பிரபலங்கள் மிகவும் அழகாக ராம்ப் வாக் நடந்தனர். இதுவரை நடந்த ஃபேஷன் வீக்கில், ஒன்று அல்லது இரண்டு பிரபலங்கள் தான் ராம்ப் வாக் நடப்பார்கள். ஆனால் இந்த ஜூவல்லரி வீக் 2013 ஆம் ஆண்டின் முதல் நாளில் 5 பிரபலங்கள் ராம்ப் வாக் நடந்தனர்.
அதில் ராஞ்சனா கதாநாயகியான சோனம் கபூர், சோனாக்ஷி சின்ஹா, முக்தா கோட்சே மற்றும் அம்ரிதா ராவ் போன்றோர் மிகவும் அழகான நெக்லேஸ் மற்றும் ப்ரேஸ்லெட் போன்றவற்றை அணிந்து, அழகான ராம்ப் வாக்கை நடந்தனர். மேலும் இந்த மேடை பெண்களுக்கு மட்டும் என்று நினைத்தால், அது தவறு. ஏனெனில் இந்த மேடையில் பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், சோனாக்ஷியுடன் ராம்ப் நடந்தார்.
இப்போது இந்திய சர்வதேச ஜூவல்லரி வீக் 2013 (IIJW 2013) ஆம் ஆண்டின் முதல் நாளில் ராம்ப் வாக் நடந்த பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

சோனம் கபூர்
சோனம் கபூர் அழகான ஸ்ராப்லெஸ் அடர் நீல நிற நீளமான கவுன் அணிந்து, நிரவ் மோடியின் வைர நெக்லேஸ் அணிந்து, அழகான இளவரசி போன்று ராம்ப் வாக் நடந்தார்.

சோனாக்ஷி சின்ஹா
சோனாக்ஷி சின்ஹா டீப் V-நெக் நீல ஊதா நிற கவுன் அணிந்து, கீதாஞ்சலி ஜெம்ஸின், டயமண்ட் நெக்லேஸ் அணிந்து, ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் நடந்தார்.

அம்ரிதா ராவ்
அம்ரிதா, அக்னியின் தங்க நகைகளை அணிந்து, லெஹெங்கா உடையில், பாரம்பரிய தோற்றத்தில் ஜூவல்லரி வீக் 2013 இல் நடந்தார்.

மஹிமா சவுதாரி
நீண்ட நாட்களுக்குப் பிறகு மஹிமாவைப் பார்க்கிறோம். இந்த நடிகை, ஜூவல்லரி வீக்கின் முதல் நாளில் ஷோபா ஸ்ரிங்கர் நகைகளை அணிந்து நடந்தார்.

ஈவ்லின் ஷர்மா
சிவப்பு நிற மார்டன் உடைக்கு, ஈவ்லின் முத்து மற்றும் வைரம் பதித்த நகைகளை அணிந்து, கெஹ்னாவிற்காக ராம்ப் வாக் நடந்தார்.

அக்ஷய் குமார்
மிகவும் அழகான பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார், கருப்பு நிற பத்தானியில், சோனாக்ஷி சின்ஹாவுடன் ராம்ப் வாக் நடந்தார்.

முக்தா கோட்சே
முக்தா சிவப்பு நிற வெல்வெட் லெஹெங்கா அணிந்து, அபாலாவின் மரகதம் பதித்த தங்க நகைகளை அணிந்து ராம்ப் வாக் மேற்கொண்டார்.

அனில் கபூர் மற்றும் ஹூமா குரேஷி
அனில் கபூர் மற்றும் ஹூமா குரேஷி, ஆரோ தங்கத்திற்காக ராம்ப் வாக் நடந்தனர்.



Click it and Unblock the Notifications
