Latest Updates
-
செப்டம்பர் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்! -
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவில் பங்கு கொண்ட பிரபலங்கள்!!!
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவானது செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது. இந்த விழாவில் பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. தற்போது கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் இந்த நூற்றாண்டு விழாவிற்கு பல்வேறு நடிகர் நடிகைகள் பங்குகொள்கின்றனர். குறிப்பாக இந்த விழாவினை தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜெயலலிதா தான் குத்து விளக்கேற்றி ஆரம்பித்தார்.
நான்கு நாட்கள் நடைபெறும் விழாவில் இதுவரை பல்வேறு பிரபலங்கள் வந்திருந்தனர். அதில் நடிகர்களில் ரஜினிகாந்த், கமலஹாசன், எஸ்.பி.பாலசுப்ரமணியம், மோகன்லால் போன்றோரும், நடிகைகளில் அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ், மீனா, சிம்ரன், த்ரிஷா, கார்த்திகா நாயர் போன்றோர் குறிப்பிடத்தக்கவர்கள். அதுமட்டுமின்றி, நடிகர் விஜய், விக்ரம் போன்றோரும் வந்திருந்தனர்.
இப்போது அந்த இந்தியா சினிமாவின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்ட பிரபலங்களின் படங்கள் உங்கள் பார்வைக்காக...

அம்பிகா மற்றும் கார்த்திகா நாயர்
நூற்றாண்டு விழாவில் அம்பிகா கோல்டன் பார்டர் வைத்த வெள்ளை நிற புடவை மற்றும் ப்ரீ ஹேர் விட்டும், கார்த்திகா எம்பிராய்டரி புடவைக்கு, அக்கால ஃபேஷனான முக்கால் கை கொண்ட ஜாக்கெட் அணிந்து வந்திருந்தார்.

பூர்ணிமா பாக்யராஜ்
நடிகை பூர்ணிமா பாக்யராஜ் அழகான சிவப்பு நிற புடவையில் சிம்பிளாக வந்திருந்தார்.

மீனா
நடிகை மீனா கோல்டன் நிற பட்டுப்புடவைக்கு, க்யூட்டான ஹேர் ஸ்டைல் போட்டு வந்திருந்தார்.

சிம்ரன்
இடுப்பால் அனைவரையும் மயக்கிய நடிகை சிம்ரன் காஞ்சிப் பட்டுப்புடவைக்கு, கொண்டை போட்டு வந்திருந்தார். ஆனால் இவர் மிகவும் மோசமாக லுக்கில் இருந்தார்.

த்ரிஷா
த்ரிஷா எப்போதுமே க்யூட் தான். அவர் இந்த நூற்றாண்டு விழாவிற்கு மயிர் பச்சை மற்றும் சிவப்பு கலந்த கல் வேலைப்பாடுகள் செய்யப்பட்ட புடவையில் கலக்கலாக வந்திருந்தார்.

சுஹாசினி, ஊர்வசி, ரேகா
அக்காலத்தில் மிகவும் பிரபலமான நடிகைகள் இவர்கள் மூவரும். ஒரே ஷேட் கொண்ட சந்தன நிறத்தில் ஆடைகளை அணிந்து ஒரே மாதிரியான ஹேர் ஸ்டைலில் வந்திருந்தார்கள்.

அமலா பால்
இது நூற்றாண்டு விழாவில் அமலா பால் கருப்பு நிற உடையில், நடனம் ஆடும் போது எடுத்தது.

ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் எந்த ஒரு விழாவிலும் அதிகம் பங்கு கொள்ளமாட்டார். ஆனால் அவ்வாறு வந்தால், அவர் எப்போதும் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் தான் வருவார். அப்படி தான் இந்த விழாவிற்கும் வெள்ளை நிற வேஷ்டி சட்டையில் வந்திருந்தார்.

கமலஹாசன்
நடிகர் கமலஹாசன் விழாவின் இரண்டு நாட்கள் வந்திருந்தார். அப்போது எந்த ஒரு பந்தாவும் இல்லாமல், சாதாரண உடையிலேயே வந்து, முதல்வரிடம் விருதைப் பெற்றார்.

மோகன்லால்
மோகன்லால் மலையாள நடிகர் என்பதை தனது ஆடையிலேயே வெளிப்படுத்தியிருந்தார். அதிலும் சந்தன நிற குர்தா அணிந்து, அதற்கு வெள்ளை நிற வேஷ்டியில் பக்கா மலையாளியாக வந்தார்.

விக்ரம், விஜய் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ்
இந்திய சினிமா நூற்றாண்டு விழாவில் விக்ரம், விஜய் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் ஒரே வரிசையில் அருகருகே அமர்ந்திருந்த போது எடுத்த படம்.



Click it and Unblock the Notifications
