Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
தீர்வு கிடைக்காத 8 பிரச்சனைகள்!!!
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பிரச்சனை இருக்கும். அந்த பிரச்சனையை போக்க நிறைய வழிகள் இருக்கும். சிலருக்கு பிரச்சனையை போக்க பல நாட்கள் போராடுவார்கள். ஆனால் கடந்த மாதம் அனைவருக்கும் பொதுவான பிரச்சனை ஒன்று இருந்தது. அது தான் மாயன் காலண்டர் உலகம் அழியப் போகிறது என்று சொன்னது. ஆனால் ஏதோ புண்ணியத்தால், உலகம் அழியவில்லை, அனைவரும் நல்ல படியாக 2013 ஆம் ஆண்டு காலடி எடுத்து வைத்துள்ளோம்.
இருப்பினும் ஒருசில பொதுவான பிரச்சனைகளுக்கு இன்று வரைக்கும் தீர்வு கிடைக்கவில்லை. அத்தகைய பிரச்சனைகளைப் பார்த்தால், அவ்வளவு பெரியதாக இருக்காது. ஆனால் இன்னும் நாளுக்கு நாள் நடக்கும், அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கவில்லை. இந்த வருடமாவது இந்த பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல தீர்வை கண்டுபிடித்து, சரிசெய்ய முயற்சிப்போம். இப்போது அந்த பிரச்சனைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம். இத்தகைய பிரச்சனைகளுக்கு உங்களால் தீர்வு கொடுக்க முடியும் என்றால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சாம்பெயின் மூடி
மதுபானங்களுள் மிகவும் விலைமதிப்பு இருக்கும் சாம்பெயின் பாட்டிலின் மூடியை கார்க் இல்லாமல் திறக்க முடியுமா? மிகவும் கஷ்டம் தானே. ஒருவேளை கையில் சாம்பெயின் பாட்டில் இருக்க, ஆனால் கார்க் இல்லாவிட்டால், எப்படி திறப்போம்? பின் இது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாகிவிடும்.

ஃபேஸ் புக் PDA
ஃபேஸ் புக்கில் இருக்கும் போக்ஸ் (pokes), ஹக் (hug) போன்றவற்றால் ஏற்படும் தொல்லைகள். இதில் கொடுமை என்னவென்றால், அத்தகைய செயல்களை யார், யாருக்கு வேண்டுமானாலும் அனுப்பலாம். இந்த மாதிரியான செயல்களை உடனே நிறுத்துவதற்கு தீர்வு தான் என்ன?

புதிய டெக்னாலஜி
எப்படியோ 6 மாத சம்பளத்தை சேமித்து கஷ்டப்பட்டு ஸ்மார்ட் போன் வாங்கிவிட்டோம் என இருக்கும் போது, வாங்கிய அடுத்த வாரமே அதனுடைய அடுத்த வெர்ஷன் வந்துவிடும். இப்போது வாங்கிய புது மொபைல் பழையதாகிவிடுவது.

டின் பானங்கள்
டின்னில் விற்கும் கூல்டிரிங்ஸை வாங்கி குடிக்க ஆசைப்பட்டு வாங்கியப் பின், அதை திறக்கும் ஹூக் உடைந்துவிட்டால், அதை திறப்பது எவ்வளவு கடினமாக இருக்கும்.

சிக்கன் சாண்விட்ச்
கடைகளில் விற்கும் சிக்கன் சாண்விட்ச்சை பார்க்கும் போது, அதை வாங்கி அதிலுள்ள சிக்கனின் ருசியை சுவைக்க வேண்டும் என்று நினைத்து வாங்கி சாப்பிடுவோம். ஆனால் பில சமயங்களில் சிக்கன் சாண்விட்ச்சில் சிக்கனுக்கு பதிலாக, பிரட்டையும், சிக்கனின் மணத்தையும் மட்டுமே பார்க்க முடியும்!

மைக்ரோசாப்ட் வோர்ட் (Microsoft Word)
சாப்ட்வேரிலேயே மிகவும் தாங்க முடியாத சாப்ட்வேர் என்று சொன்னால், அது மைக்ரோசாப்ட் வோர்ட் தான். ஏனெனில் எத்தனை முறை மொழியை UK ஆங்கிலத்தில் வைத்தாலும், கம்ப்யூட்டரை மீண்டும் ஆன் செய்யும் போது, பழைய நிலையான US ஆங்கிலத்திலேயே இருக்கும்.

டச் ஸ்கிரீன் போன்
சொந்த ஊரான கிராமத்திற்கு அவசரமாக செல்ல வேண்டும் என்று, மேடு பள்ளங்களாக இருக்கும் ரோட்டில் பயணம் செய்யும் போது, நாம் டச் ஸ்கிரீன் போனை பயன்படுத்தி, அலுவலக அதிகாரிக்கு மெசேஜ் டைப் செய்து அனுப்பும் போது, டச் ஸ்கிரீன் அதன் சென்சிட்டிவ் டச்சை வெளிப்படுத்தும் வாயிலாக, அதிகாரிக்கு பதிலாக வீட்டில் இருக்கும் மனைவிக்கு அனுப்பிவிடுவது.

வாட்டர் மார்க்
சில கம்பெனிகள் மிகவும் அழகான, சற்று வித்தியாசமான போட்டோக்களை நெட்டில் போட்டிருப்பார்கள். அவ்வாறு நெட்டில் போடும் போது அதன் அழகை கெடுப்பது போன்று, அந்த படத்தின் மீது கம்பெனிகளின் பெயர்களை வாட்டர் மார்க் செய்து கொள்கின்றனர். இதனால் அந்த போட்டோவின் அழகே கெட்டதாக மாறுவதோடு, யாராலும் அதனை பயன்படுத்த முடியாதவாறு போகிறது.



Click it and Unblock the Notifications
