Latest Updates
-
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம் -
அக்டோபரில் வக்ரமடையும் சுக்கிரன்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
October 2026 Horoscope: அக்டோபர் மாதத்தில் ராஜவாழ்க்கை வாழப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன? -
முட்டையை ஒரே மாதிரி செய்யாம.. ஒருடைம் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
உடுப்பி ஸ்டைல் கற்பூரவல்லி தம்பிலி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சளி, காய்ச்சல் டக்குனு காணாம போயிரும் -
October Matha Rasipalan 2026: அக்டோபரில் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 4 ராசி ஆண்கள் அழகான பெண்களை விட அறிவான பெண்களைத்தான் விரும்புவார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 உருளைக்கிழங்கும், வேர்க்கடலையும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸ் ட்ரை பண்ணி பாருங்க.. -
சூப்பர் எல் நினோவால் இந்தியாவில் நிகழப்போகும் 15800 உயிரிழப்புகள் - எந்தெந்த நாடுகள் ஆபத்தில் இருக்கு தெரியுமா
உலகில் உள்ள சில இரகசியமான நகரங்கள்!!!
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அனைத்தும், வரலாற்றை பிரதிபலிக்கும் ஒரு காலக் கண்ணாடிகள் ஆகும். அந்த வகையில் உலகில் இன்றும் பலருக்கு தெரியாத சில வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் உள்ளன. அதிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாதாள நகரங்கள், மறைந்து இருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களாக உள்ளன.
இத்தகைய நகரங்கள் அதன் தனித்தன்மையான உள்கட்டமைப்பை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததையும் வெளிப்படுத்துகிறது. அவற்றில் சில நகரங்கள் யுத்தத்தின் போது உயிர் பிழைக்கக் கட்டப்பட்டவையாக உள்ளன.
வேகாஸ் நகரத்தில் நடக்கும் வியக்கத்தக்க விளங்காத விஷயங்கள்!!!
எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களுக்கு சுற்றுலா செல்லவோ மற்றும் உலக வரலாற்றைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசையோடு இருந்தாலோ, கீழே குறிப்பிட்டுள்ள சில பாதாள நகரங்களுக்கு சுற்றுலா சென்று வாருங்கள்.

கடவுள்களின் நகரம், கிசா பீடபூமி
உலகில் உள்ள பழமையான ஒரு அதிசயம் தான் கடவுள்களின் நகரம். பிசா பீடபூமியின் கீழ் அமைந்துள்ள இந்த நகரத்தில், வரிசையான பல சுரங்கங்கள் மற்றும் அறைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் ஆராய்ச்சியாளர்கள் இந்த நகரத்தைப் பற்றி ஊகிக்கின்றனர். இருப்பினும் இது நம்பமுடியாதவாறே உள்ளன.

உப்பு சுரங்கம், போலாந்து
இந்த உப்பு சுரங்கம், போலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இது 13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இந்த சுரங்கமானது இரண்டாம் உலகப் போரின் போது, ஜெர்மன் படைக்கலத்தை அதிகரிக்கக் கட்டப்பட்டது. இந்த இடத்திற்கு, வருடத்திற்கு 1 மில்லியனுக்கு மேலான சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகின்றனர்.

கூபர் பெடி, ஆஸ்திரேலியா
இந்த இடமானது சுமார் 1600 மக்களுக்கு ஒரு வீடாக உள்ளது. இந்த கூபர் பெடியை கோமேதகத்தின் தலைநகர் என்றும் சொல்வார்கள். ஏனெனில் இங்கு கோமேதகங்கள் அதிக அளவில் தோண்டி எடுக்கப்பட்டன. அவ்வாறு சுரங்கங்களாக வெட்டி எடுக்கப்பட்டவை வீடுகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் அங்கு கடுமையான வெப்பநிலை நிலவுவதால், மக்கள் சுரங்கங்களில் தங்கி வருகின்றனர்.

பெய்ஜிங் பாதாள நகரம்
இந்த பாதாள நகரம் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். பொதுவாக இந்த பாதாள நகரமானது பனிப்போரின் போது, அணு தாக்குதல்களில் இருந்து தப்பி உயிர் வாழ்வதற்காக கட்டப்பட்டது. இங்கு 30 கிலோமீட்டர் சுற்றளவில் பல சுரங்கங்கள் பரந்து காணப்படுகின்றன. இது சுற்றுலாப் பயணிகளின் பார்வைக்காக 2000 ஆம் திறக்கப்பட்டது.

செடினில் டி லாஸ் போடிகாஸ், ஸ்பெயின்
இந்த நகரமானது மலைகளால் செதுக்கப்பட்டது போன்று மிகவும் அருமையான தோற்றத்தில் காணப்படும். இங்கு 3,000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இது உண்மையான பயணி மற்றும் வரலாற்று சுற்றுலா மேற்கொள்வோருக்கு ஏற்ற ஒரு சிறந்த இடமாக இருக்கும்.

மோஸ் ஜா, சஸ்காச்சுவான்
கனடாவில், மோஸ் ஜா என்னும் நகரம் சஸ்காச்சுவானில் அமைந்துள்ளது. தற்போது இது ஒரு வருட காலமாக சிறந்த சுற்றுலாத் தளமாகவும் உள்ளது. இங்குள்ள சுரங்கங்களில் பொறிக்கப்பட்ட சுரோவியங்கள், இந்த சுரங்கங்களைப் பற்றிய கதைகளை சொல்லும் வகையில் உள்ளன.

போர்ட்லாந்து, ஓரேகன்
அமெரிக்காவின் ஓரேகனில் அமைந்துள்ள போர்ட்லாந்தின் மத்தியப் பகுதியில் அமைந்திருப்பது தான் ஷாங்காய் சுரங்கப்பாதைகள். இந்த சுரங்கப்பாதைகளை தடைசெய்யப்பட்ட நகரங்கள் என்றும் சொல்வார்கள். ஏனெனில் இந்த சுரங்கப்பாதைகளில் சட்டவிரோத செயல்களான விபசாரத்திற்கு பயன்படுத்துவதாக நம்பப்படுகிறது.

கிஷ், ஈரான்
உண்மையில் இந்த நகரத்திற்கு பெயர் ஏதும் இல்லை. சுற்றுலாப் பயணிகள், சிலர் இதனை கரிஷ் நகரம் என்றும், பலர் இதனை கிஷ் பாதாள நகரம் என்றும் சொல்வார்கள். இது 2500 வருடம் பழைய நகரமான இது, முதலில் நீர் மேலாண்மை அமைப்பாக பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அது சுற்றுலாத் தளமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

கப்படோசீயா, துருக்கி
இது ஏழு பாதாள நிலைகளுடன் இருபதாயிரத்திற்கும் மேற்பட்டோர் வாழும் ஒரு பாதாள நகரமாக உள்ளது. இது துருக்கியில் தோண்டியெடுக்கப்பட்ட பாதாள நகரங்களிலேயே மிகவும் பெரிய நகரமாகும்.

பர்லிங்டன்- இரகசிய ஆங்கில நகரம்
இந்த நகரமானது அணுப் போரின் போது, 1950 இல் பிரிட்டிஷ் அதிகாரிகளுக்காக சிறு கற்கள் கொண்டு கட்டப்பட்டது.



Click it and Unblock the Notifications
