Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
140000 ஆண்டுகளுக்கு கடலில் மூழ்கிய நகரம் இப்போது மீண்டும் கிடைத்துள்ளது... இங்கு வாழ்ந்தவர்கள் யார் தெரியுமா?
கடந்த கால மர்மங்களை ஆராய்வது என்பது எப்போதுமே மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாகும். உலகெங்கிலும் உள்ள விஞ்ஞானிகள் இதை தொடர்ந்து செய்து வருகின்றனர். சமீபத்தில் இந்தோனேசியாவின் ஜாவா தீவுக்கு அருகில் கிடைத்துள்ள சமீபத்திய கண்டுபிடிப்பு மிகவும் சுவாரஸ்யமான ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது.
அழிந்துபோன மனித மூதாதையர் இனமான ஹோமோ எரெக்டஸின் எலும்புகள் உட்பட 6,000 க்கும் மேற்பட்ட புதைபடிவங்கள் இந்த தீவின் கடல் தளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு தென்கிழக்கு ஆசியாவில் ஹோமோ எரெக்டஸின் அறியப்படாத மக்கள் தொகை இருந்ததாகவும், ஆரம்பகால நவீன மனிதர்களுடன் தொடர்பு கொண்டதாகவும் இருக்கலாம் என்பதைக் குறிக்கிறது.

இந்தோனேசிய தீவுக்கூட்டத்தின் மூழ்கிய பகுதிகளில் இருந்து புதைபடிவங்கள் கிடைப்பது இதுவே முதல்முறை, இது இந்த கண்டுபிடிப்பை மேலும் தனித்துவமாக்குகிறது. சுமார் 140,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் தற்போது இருப்பதை விட மிகவும் குறைவாக இருந்தது, மேலும் ஜாவா போன்ற தீவுகள் சுந்தலாந்து என்ற பகுதி வழியாக ஆசிய நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டன. இந்த பகுதி புல்வெளிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் நிறைந்தாக இருந்தது.
இங்கு கிடைத்துள்ள புதைபடிவங்களில் சில வெட்டு அடையாளங்கள் உள்ளன, இது இந்த பகுதியில் வாழ்ந்த மனிதர்கள் ஆரம்பகால மனிதர்கள் ஆமைகள் மற்றும் பெரிய விலங்குகளை வேட்டையாடியதைக் குறிக்கிறது. இந்த புதைப்படிவங்கள் தென்கிழக்கு ஆசியாவில் ஆமை வேட்டைக்கான பழமையான ஆதாரங்களை வழங்குகின்றன. இந்த ஆரம்பகால ஹோமினின்கள் நவீன பசுக்களைப் போன்ற விலங்குகளை வேட்டையாடியதாகவும் புதைபடிவ தடயங்கள் தெரிவிக்கின்றன.
ஆசிய நிலப்பரப்பில் வாழ்ந்த ஆரம்பகால நவீன மனிதர்களிடையே இந்த வேட்டை மிகவும் பொதுவானதாக இருந்தது. இது ஹோமோ எரெக்டஸ் இந்த நுட்பங்களை அவர்கள் தொடர்பு கொண்ட பிற மனித இனங்களிலிருந்து கற்றுக்கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.
ஹோமோ எரெக்டஸ் என்றால் என்ன?
மனித பரிணாம வளர்ச்சி வரலாற்றில் ஹோமோ எரெக்டஸ் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. இந்த பண்டைய இனம் சுமார் 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியது மற்றும் நவீன மனிதர்களைப் போன்ற உடல் அமைப்பைக் கொண்ட நமது மூதாதையர்களில் முதன்மையானவர்களாக இவர்கள் விளங்கினார்கள். ஆப்பிரிக்காவை விட்டு வெளியேறி தென்கிழக்கு ஆசியா வரை பயணித்த முதல் மனித இனமும் இவர்களே.
அதே காலகட்டத்தில், நியாண்டர்தால்கள் மற்றும் டெனிசோவன்கள் போன்ற பிற பண்டைய மனித இனங்களும் ஆசியாவின் சில பகுதிகள் உட்பட உலகின் பல்வேறு பகுதிகளில் தோன்றின. இருப்பினும், இந்த வெவ்வேறு இனங்களுக்கு இடையே எவ்வளவு தொடர்பு இருந்தது என்பது இன்னும் உறுதியாகத் தெரியவில்லை.
ஆராய்ச்சியின் படி, ஹோமோ எரெக்டஸ் இந்தோனேசிய தீவான ஜாவாவில் சுமார் 117,000 முதல் 108,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாழ்ந்தது, அதன் பிறகு அவை அழிந்துவிட்டன. வெகு காலத்திற்குப் பிறகு, சுமார் 77,000 ஆண்டுகளுக்கு முன்பு, நமது சொந்த இனமான ஹோமோ சேபியன்கள் தென்கிழக்கு ஆசியாவிற்கு வந்தனர். நவீன மனிதர்கள் அங்கு தோன்றுவதற்கு முன்பே ஹோமோ எரெக்டஸ் இப்பகுதியில் மிக நீண்ட காலம் உயிர் பிழைத்திருப்பதை இந்த காலவரிசை நிரூபிக்கிறது.



Click it and Unblock the Notifications
