100 ஆண்டுகள் பழமையான செய்தித்தாளில் வெளிவந்த 2024-ம் ஆண்டுக்கான அதிர்ச்சியூட்டும் கணிப்புகள்!

Shocking Predictions For 2024: எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை அறிய ஒவ்வொருவருக்குமே ஆவல் இருக்கும். இப்படி எதிர்காலத்தை அறிந்து கொள்ள ஜோதிடம் உதவி புரியும் என்றாலும், உலகின் சில பகுதிகளில் எதிர்காலத்தில் நடக்கப் போவதை கணித்து கூறும் பிரபலமான தீர்க்கதரசிகள் உள்ளனர். அவற்றில் பாபா வாங்கா, நாஸ்ட்ரடாமஸ் போன்றோர் மிகவும் பிரபவமானவர்கள். இவர்களின் சில கணிப்புகள் நடக்காவிட்டாலும், பல கணிப்புகள் உண்மையில் நடந்துள்ளன. அதில் ஒன்று தான் கொரோனா பேரழிவு.

இதுப்போன்று 100 ஆண்டுகளுக்கு முன் வெளியான ஒரு செய்தித்தாளில் 100 ஆண்டுகளுக்கு பின் என்ன நடக்கும் என்பது குறித்து கணித்து கூறப்பட்டுள்ளன. இது 100 ஆண்டுகளுக்கு பின் உலகம் எப்படி கூறுகிறது. இதில் ஒரு ஆச்சரியம் என்னவென்றால், இந்த கணிப்புகளுள் பல நிறைவேறியுள்ளன. இப்போது அந்த கணிப்புகள் என்னவென்பதைக் காண்போம்.

100 Years Old Newspapers Shocking Predictions For 2024

1924 ஆம் ஆண்டு காலகட்டத்தில், பத்திரிக்கைகளில் 100 ஆண்டுகளுக்கு பின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணிப்பது மிகவும் பிரபலமான போக்காக இருந்து வந்தது. அப்படி கணிக்கப்பட்ட கணிப்புகளுள் பல இன்று உண்மையாகியிருப்பது தான் பெரிய ஆச்சரியம். இதுக்குறித்து , கனடாவின் கால்கேரி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் பால் ஃபேரி என்பவர், 1924 ஆம் ஆண்டு பத்திரிக்கை கணிப்பின் ஒரு வினோதமான கிளிப்பிங்கை, முன்பு ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X தளத்தில் பகிர்ந்துள்ளார்.

வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்

இதில் 2024 ஆம் ஆண்டிற்குன் குதிரைகள் அழிந்து போகக்கூடும் என்று அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் குதிரைகள் முற்றிலும் அழிந்துவிடுமா, இல்லையா என்பது குறித்து உறுதியாக தெரியவில்லை. வானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும் பாட்காஸ்ட்கள் விரைவில் பிரபலமாகும் என்றும் கணிக்கப்பட்டிருந்தது. அது உண்மையாகவும் நடந்துவிட்டது. மேலும் மனிதர்களின் ஆயுட்காலம் 100 ஆண்டுகள் வரை இருக்கும் என்றும், 75 வயது முதியவர்கள் இளமையாக கருதப்படுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

போட்டோ ஆல்பங்கள் மறையும்

100 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் இனிமையான நினைவுகளாக எடுத்து வைக்கப்படும் குடும்ப ஆல்பங்களுக்கு பதிலாக வீடியோக்களாக மாற்றப்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. அந்த கணிப்புக்கு ஏற்ப அது உண்மையாகவும் உள்ளது. திரைப்படங்கள் உலக அமைதியைக் கொண்டுவரும் என்றும் இறுதியில் உலகளாவிய மொழியாக மாறும் என்றும், உலகில் பல மோதல்களை அகற்றும் என்றும் கணித்துள்ளது. ஆனால் இது நடக்கவில்லை. ஒருவேளை அடுத்த 100 ஆண்டுகளுக்குள் வேண்டுமானால் நடக்கலாம்.

வீட்டில் இருந்தே படம் பார்க்கக்கூடும்

பெரும்பாலானோர் பயணிக்கும் ரயில்கள் இரண்டு அல்லது மூன்று மடக்கு வேகத்தில் இயங்கும் என்று கணித்துள்ளது. அதற்கேற்ப மின்னல் வேகத்தில் செல்லக்கூடிய ரயில்கள் தற்போது இயங்கி, இந்த கணிப்பை உண்மையாக்கிவிட்டது.

பின் மக்கள் வீட்டில் இருந்தே திரைப்படங்களை பார்ப்பார்கள் என்றும் அந்த பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கேற்ப ஓடிடி தளங்களின் மூலம், தற்போது மக்கள் வீட்டில் இருந்தே திரைப்படங்களை பார்க்கிறார்கள். இறுதியாக 2024 ஆம் ஆண்டில் மக்கள் கிரகத்தில் இருந்து கிரகத்திற்கு மாறுவார்கள் என்று கணித்துள்ளது. இது நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Story first published: Saturday, January 27, 2024, 14:51 [IST]
Desktop Bottom Promotion