Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப வாஸ்துப்படி மஞ்சளை வீட்டின் இந்த இடங்களில் வையுங்க...
Vastu Tips In Tamil: மஞ்சள் ஒரு மருத்துவ குணம் வாய்ந்த பொருள் என்பதையும் தாண்டி, இது ஒரு மங்களகரமான மற்றும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் வழிபாடுகளின் போது மஞ்சள் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது.
ஜோதிடத்தில், மங்களகரமான மஞ்சளை வியாழக்கிழமைகளில் விஷ்ணு பகவானின் தலையில் பூசினால் அதிர்ஷ்டம் கிடைப்பதாக கருதப்படுகிறது. மேலும் மஞ்சளைக் கொண்டு பூச்சிகளை விரட்டலாம்.

இப்படிப்பட்ட மஞ்சள் வாஸ்து சாஸ்திரத்தில் செல்வத்தை ஈர்க்க பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மஞ்சளை ஒருசில வழிகளில் பயன்படுத்த வேண்டும். இப்படி பயன்படுத்தும் போது, அது வீட்டில் உள்ள நிதி பிரச்சனைகளைப் போக்குவதோடு, ஒருவரை செல்வந்தராக்கவும் செய்யும். இப்போது செல்வம் பெருக மஞ்சளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
லாக்கரில் மஞ்சள்
வீட்டில் பணப்பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்படியானால் அந்த பணப் பிரச்சனையைப் போக்க, ஒரு மஞ்சள் அல்லது சிவப்பு துணியில் மஞ்சளை வைத்து கட்டி, அதை பணம் வைக்கும் பெட்டி அல்லது பையில் வைக்க வேண்டும். இப்படி செய்யும் போது தேவையில்லாத செலவுகள் கட்டுப்படுவதோடு, பணத்தையும் அதிகம் சேமிக்க முடியும்.
இந்த வாஸ்து ட்ரிக்ஸ் வாஸ்து தோஷத்தையும் நீக்க உதவுவதாக நம்பப்படுகிறது. அதோடு, வீட்டில் செல்வம் அதிகம் சேரவும் வழிவகை செய்கிறது. முக்கியமாக பணம் வைக்கும் பெட்டியில் மஞ்சள் கட்டியை வைக்கும் போது, அதை வடகிழக்கு திசையில் வைக்க வேண்டும்.
மஞ்சளில் ஸ்வஸ்திக் சின்னம்
வீட்டின் நுழைவாயிலில் மஞ்சளைப் பயன்படுத்தி ஸ்வஸ்திக் வரைவது, வீட்டிற்குள் செல்வத்தை ஈர்க்க உதவுவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. இதற்கு ஸ்வஸ்திக் சின்னம் மற்றும் மஞ்சள் ஆகிய இரண்டுமே தான் காரணம். ஏனெனில் இவை இரண்டுமே லட்சுமி தேவியை ஈர்க்கக்கூடிய. மஞ்சளானது வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்கிறது மற்றும் கண் திருஷ்டியைப் போக்க உதவுகிறது மற்றும் வீட்டில் உள்ள வாஸ்து தோஷத்தை நீக்க உதவுகிறது.
அதுவும் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வீட்டு நுழைவாயிலின் வலது பக்கத்தில் வரைய வேண்டும். இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை வரைய பயன்படுத்தும் மஞ்சளானது சமையலுக்கு பயன்படுத்துவதாக இருக்கக்கூடாது. மேலும் இந்த சின்னத்தை வரைவதற்கு முன் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
மஞ்சள் நீர்
வீட்டின் நுழைவாயிலில் மஞ்சள் நீரை தெளிப்பதால், வீட்டிற்குள் பூச்சிகள் வருவது தடுக்கப்படுவது மட்டுமின்றி, வீட்டிற்குள் நேர்மறை ஆற்றலை ஈர்க்க உதவுகிறது. ஒரு வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டம் சிறப்பாக இருந்தால், அது பணத் தட்டுப்பாட்டைப் போக்குவதோடு, வீட்டில் செல்வத்தை பெருகச் செய்யும். அதுவும் மஞ்சள் தூளை நீரில் கலந்து, அதில் ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு, பின் அந்நீரை வீட்டு வாசலில் தெளித்த பின், நாணயத்தை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications