Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் பெருக வீட்டு வாசலில் எந்த செடிகளை வைக்கணும் தெரியுமா?
Vastu Tips In Tamil: ஒருவர் குடியிருக்கும் வீட்டில் நேர்மறை ஆற்றலானது வீட்டின் பிரதான நுழைவாயிலின் வழியாகத் தான் நுழைகின்றன. குடியிருக்கும் வீடு நேர்மறை ஆற்றல் நிரம்பியிருந்தால், அந்த வீடு செல்வ செழிப்போடு இருக்கும்.
மேலும், வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும், தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும் மற்றும் நல்ல முன்னேற்றமும் ஏற்படும். வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதில் செடிகள் முக்கிய பங்கை வகிக்கின்றன. உங்கள் வீட்டை நீங்கள் செடிகளால் அலங்கரிக்க விரும்புவீர்களா?

அப்படியானால் வாஸ்துப்படி வீட்டில் செடிகளை வாங்கி வையுங்கள். அதுவும் நேர்மறை ஆற்றல் நுழையும் வீட்டின் பிரதான வாசலில் ஒருசில செடிகளை வாங்கி வைத்தால், அது அதிர்ஷ்டத்துடன் வீட்டில் செல்வம் பெருக வழிவகை செய்யும்.
வாஸ்துப்படி, சில செடிகள் அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதோடு, லட்சுமி தேவியின் அருளைப் பெற உதவும். இப்போது அதிர்ஷ்டத்திற்கு எந்த செடிகளை வீட்டு வாசலின் பிரதான நுழைவாயிலில் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
துளசி செடி
துளசி செடி மிகவும் புனிதமான செடி. துளசி செடி இருக்கும் வீட்டில் லட்சுமி தேவி குடியிருப்பாள் என்பது நம்பிக்கை. மேலும் துளசி செடியானது நல்ல வாசனையைக் கொண்டிருப்பதால், அது சுற்றுப்புறத்தை நல்ல மணத்துடன் வைத்திருக்கும். இது தவிர துளசி செடி வீட்டினுள் எதிர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுக்கும். எனவே உங்கள் வீட்டில் செல்வம் பெருக நினைத்தால், துளசி செடியை வீட்டு வாசலில் வாங்கி வையுங்கள்.
மல்லிகை செடி
வாஸ்துப்படி, வீட்டு வாசலில் மல்லிகை செடியை வைத்து வளர்ப்பது மிகவும் நல்லது. மல்லிகை நல்ல மணம் கொண்டது. நல்ல மணம் நிறைந்த இடத்தில் லட்சுமி தேவி வாசம் செய்வாள். எனவே மல்லிகை செடியை வாசலில் வைத்தால், அது வீட்டில் அதிர்ஷ்டம் மற்றும் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இந்த செடியில் இருந்து மலரும் பூக்கள் சுற்றுச்சூழலை நல்ல மணத்துடன் வைப்பதுடன், செல்வத்தை அதிகரிக்கும்.
மணி பிளான்ட்
வாஸ்து சாஸ்திரத்தில் மணி பிளான்ட் அதிர்ஷ்டத்தை ஈர்க்கும் மற்றும் பணத்தை அதிகரிக்கும் ஒரு மங்களகரமான செடியாக கருதப்படுகிறது. இந்த மணி பிளான்ட்டை வீட்டின் வாசலில் படர வைத்தால், அந்த மணி பிளான்ட் வளர்வதைப் போன்றே, வீட்டில் செல்வமும் பெருகும் என்பது நம்பிக்கை. அதோடு மணி பிளான்ட் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கக்கூடியது. எனவே இந்த மணி பிளான்ட்டை வாங்கி வைக்கலாம்.
மார்னிங் குளோரி
மார்னிங் குளோரி ஒரு அலங்கார செடி. இதை வீட்டில் வளர்த்தால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். அதுவும் வீட்டின் வாசலில் வைத்து வளர்த்தால், அந்த வீட்டில் உள்ளோரின் கனவுகள் நனவாகும், வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பெருகும். இந்த செடியை வீட்டின் பிரதான வாசலில் வைத்து வளர்க்கும் போது, அது வீட்டினுள் நுழையும் எதிர்மறை ஆற்றலை தடுத்து, இரவு நேரத்தில் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறச் செய்வதாக கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications

