Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
வாஸ்துப்படி வீட்டின் எந்த திசையில் ஊஞ்சலை வைக்க வேண்டும் தெரியுமா?
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம் வீட்டில் இருக்கும் ஒவ்வொரு பொருட்களும் நமது வாழ்க்கையில் நல்ல அல்லது கெட்ட தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் தான் எந்த ஒரு பொருளை வீட்டில் வைப்பதாக இருந்தாலும், அதை வாஸ்துப்படி வைக்க வேண்டுமென்று கூறுகிறார்கள்.
ஏனெனில் வாஸ்து சாஸ்திரத்தின் படி தவறான இடத்தில் பொருட்களை வைத்தால், அது அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். வாஸ்து சாஸ்திரத்தின் திசைகள், இடங்கள், நிறம், வடிவம் போன்ற பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் அனைவருக்குமே ஊஞ்சலில் விளையாட பிடிக்கும். இதனால் பலர் தங்கள் வீடுகளில் ஊஞ்சலை அமைப்பார்கள். ஆனால் அந்த ஊஞ்சலை வீட்டில் அமைப்பதாக இருந்தால், அதை வாஸ்துப்படி வையுங்கள். கீழே வாஸ்துப்படி ஊஞ்சலை வீட்டின் எந்த திசையில் வைக்க வேண்டும், எந்த வடிவ ஊஞ்சலை வைக்க வேண்டும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
எந்த மாதிரியான ஊஞ்சல் சிறந்தது?
வீட்டில் அமைக்கும் ஊஞ்சலில் பல வகைகள் உள்ளன. உதாரணமாக, இரும்பு ஊஞ்சல், பிளாஸ்டிக் ஊஞ்சல், மர ஊஞ்சல் என்று பல உள்ளன. வாஸ்துப்படி, வீட்டினுள் ஊஞ்சலை அமைப்பதாக இருந்தால், பிற உலோகங்களை விட மர ஊஞ்சல் தான் சிறந்தது. ஏனெனில் வாஸ்துப்படி, மர ஊஞ்சலை வைக்கும் போது, அது வீட்டில் செல்வத்தை பராமரிக்க உதவுவதோடு, வீட்டில் உள்ளோரிடையே இணக்கம் அதிகரிக்கும்.
மேலும் மர ஊஞ்சலை வீட்டில் நிறுவும் போது, வீட்டில் நேர்மறை ஆற்றல் நிரம்பியிருக்கும். ஒருவேளை வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள் மற்றும் நல்ல முன்னேற்றத்தையும் காண்பார்கள்.
எந்த வடிவ ஊஞ்சலை வைக்கலாம்?
தற்போது பலர் தங்கள் வீட்டின் பால்கனியில் ஊஞ்சல் அமைத்து வருகிறார்கள். பால்கனியில் ஊஞ்சலை அமைக்கும் போது, பால்கனியின் அழகு மேம்படுவதோடு, மனதை ரிலாக்ஸாக்க ஒரு சிறந்த இடமாகவும் இருக்கிறது. வாஸ்துப்படி, நீங்கள் உங்கள் வீட்டின் பால்கனியில் ஊஞ்சலை அமைக்க நினைத்தால், மரத்தாலான வட்ட வடிவ அல்லது அரை வட்ட வடிவ ஊஞ்சலை அமைப்பதே சிறந்தது.
எந்த திசையில் ஊஞ்சலாடக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஊஞ்சலின் முன்புறமானது கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி இருக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் ஊஞ்சலானது தெற்கு திசையை நோக்கி இருக்கக்கூடாது. ஏனெனில் தெற்கு திசையில் எதிர்மறை ஆற்றல் புழக்கத்தில் தொடங்குகிறது. இதன் விளைவாக வீட்டின் முன்னேற்றத்தில் தடை ஏற்படுவதோடு, குடும்ப உறுப்பினர்களிடையே பிரச்சனையை அதிகரிக்கும்.
எந்த திசையில் ஊஞ்சலை வைக்க வேண்டும்?
வீட்டில் ஊஞ்சலை வைக்க நினைத்தால், முதலில் எந்த திசையில் ஊஞ்சலை வைக்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் ஊஞ்சலை நிறுவுவதாக இருந்தால், ஊஞ்சலானது கிழக்கு மற்றும் மேற்கு திசையில் ஊஞ்சலாட வேண்டும். அதுவும் ஊஞ்சலின் முன்புறமானது கிழக்கு திசையைப் பார்த்தவாறு இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications