Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
வீட்டில் பணம் அதிகம் சேரணுமா? அப்ப ரோஜா செடியை வீட்டுல இந்த இடத்துல வையுங்க..
Vastu Tips In Tamil: பூக்களைப் பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. நிறைய பேருக்கு தங்கள் வீட்டை பூச்செடிகளால் அழகுபடுத்த பிடிக்கும். நல்ல மணம் கொண்ட பூச்செடிகள் நல்ல வாசனையை கொடுப்பதைத் தவிர, அவற்றை வீட்டில் பூஜைக்கும் பயன்படுத்தலாம்.
வீட்டில் வளர்க்க ஏற்ற பலவகையான பூச்செடிகள் உள்ளன. ஆனால் அவற்றில் ரோஜா பூ செடியை பலர் வீட்டில் வளர்க்க ஆசைப்படுவார்கள். ரோஜா காதலின் சின்னமாக கருதப்படுகிறது. ஆனால் ரோஜாப் பூவானது ஒருவரது அதிர்ஷ்டத்தையே மாற்றக்கூடும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

அதுவும் அந்த ரோஜாப்பூ செடியை வீட்டில் வளர்த்து வருவது நல்லது. இதனால் வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிப்பதோடு, செல்வமும் பெருகும். இப்போது வீட்டில் செல்வம் பெருகவும், வீட்டில் உள்ள பிரச்சனைகளைப் போக்கவும் ரோஜா செடிகளை எந்த திசையில் வைக்க வேண்டும் என்பது குறித்தும், ரோஜாப் பூ பரிகாரங்கள் குறித்தும் காண்போம்.
வீட்டு பிரச்சனைகள் நீங்க..
உங்கள் வீட்டில் பிரச்சனைகள் அதிகமாக உள்ளதா? அப்படியானால் சாஸ்திரங்கள் மற்றும் நம்பிக்கைகளின் படி, குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்க ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவப்பு நிற ரோஜாக்களை லட்சுமி தேவிக்கு அர்பணித்து வாருங்கள். இதனால் குடும்ப பிரச்சனைகள் மட்டுமின்றி, பண பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.
காதல் வாழ்க்கை சிறக்க..
காதல் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திப்பவர்கள், ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி ரோஜா இதழ்களைப் போட்டு படுக்கை அறையில் வையுங்கள். அதோடு ரோஜா இதழ்களையும், நீரையும் தினமும் மாற்ற வேண்டும். இப்படி செய்வதன் மூலம் தம்பதிகளுக்கு இடையே காதல் இன்னும் அதிகரிக்கும்.
பணப் பிரச்சனைகள் நீங்க..
நீங்கள் பணப் பிரச்சனைகளை அதிகமாக சந்திக்கிறீர்களா? அப்படியானால் ரோஜாப்பூ நல்ல தீர்வைத் தரும். வாஸ்து சாஸ்திரத்தின் படி, தினமும் மாலை வேளையில் ரோஜா பூக்களை லட்சுமி தேவிக்கு படைத்து வந்தால், பண பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைக்கும். அதுவும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 5 ரோஜா இதழ்களை, வெற்றிலையுடன் சேர்த்து துர்கை அம்மனுக்கு படைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பண பிரச்சனை உடனே சரியாகும்.
சிக்கிய பணத்தை பெற...
நீங்கள் மற்றவருக்கு கடனாக கொடுத்த பணம் இன்னும் உங்கள் கைக்கு வரவில்லையா? சிக்கிய பணம் உங்கள் கைக்கு வந்து சேர வேண்டுமா? அப்படியானால் சிறிது கற்பூரம் மற்றும் கிராம்பை எடுத்து, சிவப்பு ரோஜாவுடன் வைத்து, துர்கை அம்மனுக்கு வழங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், சிக்கிய பணம் திரும்ப கைக்கு வந்து சேரும்.
வியாபாரம் பெருக... செல்வம் செழிக்க..
வீடு செல்வ செழிப்போடும், மகிழ்ச்சி நிறைந்தும் இருக்க வேண்டுமானால், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிவப்பு ரோஜாப் பூவை லட்சுமி தேவிக்கு படைத்து வாருங்கள். இப்படி 11 வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்து வந்தால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, வியாபாரத்தில் நல்ல லாபமும் கிடைக்கும்.
நோய்கள் குணமாக...
உங்கள் வீட்டில் உள்ளோர் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறாரா? வீட்டில் இருப்போரின் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமானால், வெற்றிலையுடன், ரோஜா இதழ்களை எடுத்து, 11 முறை சுற்றி, வெளியே தூக்கி எறிய வேண்டும். இப்படி சுற்றிப் போடுவதன் மூலம், ஆரோக்கியம் மேம்படத் தொடங்கும்.
நல்ல வேலை கிடைக்க...
நல்ல வேலை கிடைக்க வேண்டுமா? அப்படியானால் ஒவ்வொரு நாளும் காலை வேளையில் அனுமன் கோவிலுக்கு வெறும் காலில் நடந்து சென்று சிவப்பு நிற ரோஜா பூக்களை படைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து 40 நாட்கள் செய்ய வேண்டும். அதுவும் செவ்வாய் கிழமைகளில் தொடங்க வேண்டும்.
வீட்டில் ரோஜா செடிகளை வைக்க சிறந்த திசை எது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் ரோஜா செடிகளை வளர்க்க விரும்பினால், அந்த செடியை தென்மேற்கு திசையில் வைத்து வளர்க்க வேண்டும். அதுவும் சிவப்பு நிற ரோஜா செடியை வளர்க்க சிறந்த திசை தென்மேற்கு தான். இந்த திசையில் சிவப்பு ரோஜா செடியை வைத்து வளர்த்து வந்தால், சமூகத்தில் அந்தஸ்து அதிகரிப்பதோடு, வீட்டில் செல்வமும் பெருகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications