Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, வீட்டின் இந்த இடத்தில் சாவியை வெக்காதீங்க.. இல்லன்னா கஷ்டம் தான் அதிகரிக்கும்..
Vastu Tips In Tamil: ஒரு வீட்டில் சாவி மிகவும் முக்கியமான ஒன்று. இது வீட்டை பாதுகாப்பது மட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஒருவரது வீட்டில் சாவிகளை சரியான திசையில் வைத்திருந்தால், அந்த வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகம் சுற்றும் மற்றும் வீடு முழு பாதுகாப்புடன் இருக்கும்.
சாவிகளானது வீடு, பீரோ, வாகனம் போன்றவற்றில் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப்படுகின்றன. அனைவரது வீட்டிலுமே சாவிகள் இருக்கும். ஆனால் அந்த சாவிகளை வாஸ்துப்படி எங்கு வைத்திருக்க வேண்டும் என்பது பலருக்கும் தெரிவதில்லை. பெரும்பாலானோர் சாவிகளை கண்ட இடத்தில் வைத்துவிட்டு, பின் அதை தேடிக் கொண்டிருப்பதைக் காணலாம்.

இப்படி சாவிகளை கண்ட இடத்தில் வைத்து பயன்படுத்தினால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகரித்து, வீட்டில் பண இழப்புக்கள் ஏற்படுவதோடு, கஷ்டங்களும் அதிகரிக்கும். இப்போது வாஸ்துப்படி சாவிகளை வீட்டின் எந்த திசை அல்லது இடத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, சாவிகளை எக்காரணம் கொண்டும் பூஜை அறையில் சாவிகளை வைக்கக்கூடாது. பூஜை அறையானது வீட்டின் மிகவும் புனிதமான இடம். இந்த இடத்தில் சாவியை வைத்தால், சிலர் அழுக்கு கைகளுடன் அந்த சாவிகளை எடுப்பார்கள். இப்படி செய்தால், அதன் விளைவாக எதிர்மறை ஆற்றல் தான் உற்பத்தியாகும்.
* வாஸ்துப்படி, ஒரு வீட்டின் சமையலறை அந்த வீட்டின் உள்ளோரின் ஆரோக்கியத்துடன் தொடர்புடையது. எனவே சமையலறையிலும் சாவிகளை வைக்கக்கூடாது.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் சாவிகளை வைக்க சிறந்த திசை மேற்கு திசை தான். அதுவும் மரத்தாலான சாவி ஸ்டேண்ட்டை அறையின் வடக்கு அல்லது கிழக்கு மூலையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டிற்கு நற்பலன்கள் கிடைக்கும்.
* சாவிகளை வைக்க கண்ணாடி, பிளாஸ்டிக் போன்றவற்றால் ஆன ஸ்டேண்டுகளைப் பயன்படுத்தக்கூடாது. மரத்தாலான ஸ்டேண்டுகளையே பயன்படுத்த வேண்டும். மேலும் சாவிகளை டைனிங் டேபிள், நாற்காலி அல்லது குழந்தைகளின் அறையில் வைத்தால், அது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும்.
* நிறைய பேர் வீட்டில் பயன்படுத்தாத சாவிகளை, பிற்காலத்தில் உதவும் என்று சேகரித்து வைத்திருப்பார்கள். ஆனால் இப்படி பயன்படுத்தாத சாவிகளை வீட்டில் வைத்திருந்தால், அது பண இழப்பை தான் ஏற்படுத்தும். அதேப் போல் துருப்பிடித்த அல்லது உடைந்த சாவிகளையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இது வீட்டிற்கு வறுமையை கொண்டு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications