Latest Updates
-
25,000 எலிகள் கடவுளாக வழிபடப்படும் இந்தியாவின் அதிசய கோவில் - இந்த கோவில் எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
பீட்ரூட் கொண்டைக்கடலை சப்பாத்தியும், கார்லிக் டிப்பும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
நவம்பர் 15, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (15 November 2026-21 November 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும் -
கண்ணாடி போன்று பளபளப்பான முகம் வேண்டுமா? அப்ப கேரட்டை வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விருச்சிக ராசிக்கு செல்லும் சூரியன்: நவம்பர் 16 முதல் இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும்! -
திருச்செந்தூர் திருப்பாகம் - சூரசம்ஹாரம் அன்று மறக்காமல் முருகனுக்கு செஞ்சு படைங்க.. -
30 வருடம் கழித்து மேஷம் செல்லும் சனி: 2027-ல் சனிபகவானின் பிடியில் இருந்து விடுபடும் 3 ராசிக்காரங்க இவங்கதான்! -
சுரைக்காய் இருந்தா இப்படி ஒரு பொடி அரைச்சு கூட்டு செய்யுங்க.. சாதம், சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
வெந்தய நீர், பட்டை நீர், பாகற்காய் ஜூஸ் - இவை உண்மையில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துமா? டாக்டர் பதில் இதோ!
உங்க வீட்டில் படிக்கட்டு இந்த திசையில் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பணக்கஷ்டமே வராதாம்...!
Vastu Tips for Staircase: வாழ்க்கையின் வெற்றிப்படிக்கட்டுகளில் ஏறி, வெற்றியை அடைவதற்கான தேடலில் இருக்கிறீர்களா? உங்கள் வீட்டிற்குள் நீங்கள் வைக்கும் படிக்கட்டுகளே உங்கள் வெற்றிக்கான பயணத்தை பாதிக்கும் என்று நீங்கள் அறிவீர்களா?
பண்டைய இந்திய கட்டிடக்கலை சாஸ்திரமான வாஸ்து சாஸ்திரத்தின் படி உங்கள் படிக்கட்டுகளின் இடம் மற்றும் வடிவமைப்பு நீங்கள் கற்பனை செய்வதை விட அதிக சக்தியைக் கொண்டுள்ளது.

இந்த பதிவில், படிக்கட்டுகளின் இருப்பிடம் மற்றும் வடிவமைப்பைச் சுற்றியுள்ள மர்மத்தைப் பற்றி தெரிந்து கொள்ளலாம். உங்கள் வீட்டின் படிக்கட்டுகளைக் கொண்டே வெற்றிக்கான பாதையை எப்படி உருவாக்குவது என்பதை இந்த பதிவில் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
படிக்கட்டுகளை வைப்பது ஏன் முக்கியமானது?
உங்கள் வீட்டில் எப்போதும் ஆற்றலின் ஓட்டம் இருக்கும். இந்த ஆற்றல் ஓட்டத்தின் இடையில் கட்டப்படும் பாலம் போலத்தான் படிக்கட்டுகள், இதனால் ஆற்றல் தடையின்றி பாயும். அதேசமயம் படிக்கட்டுகளின் திசையானது உங்கள் வீட்டிலுள்ள ஆற்றல் இயக்கவியலை பெரிதும் பாதிக்கிறது என்று வாஸ்து நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
கிழக்கு அல்லது வடக்கு திசையில் படிக்கட்டுகள்
உங்கள் நிதி மற்றும் தொழில் முயற்சிகளில் ஊக்கமளிக்க, உங்கள் வீட்டின் கிழக்கு அல்லது வடக்குப் பகுதியில் படிக்கட்டுகள் இருக்க வேண்டும். இந்த திசைகள் சூரியனின் நேர்மறை ஆற்றல்கள் மற்றும் பூமியின் காந்த சக்திகளைப் பயன்படுத்தி, வெற்றியை நோக்கி உங்களைத் தூண்டுவதாக நம்பப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் நீங்கள் இந்த படிகளில் ஏறும்போது, நீங்கள் வெற்றியின் ஏணிப்படிகளில் ஏறிக்கொண்டிருக்கிறீர்கள் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
படிக்கட்டின் வடிவமைப்பு
படிக்கட்டின் திசை முக்கியமானது என்றாலும், அதன் வடிவமைப்பும் உங்கள் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. வாஸ்து கொள்கைகளுடன் இணைந்த அழகியல் நல்லிணக்கத்தை உருவாக்கும். உங்கள் படிக்கட்டு தெற்கு திசையில் இருந்தால், நேர்த்தியான மற்றும் எளிமையான வடிவமைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
தெற்கு திசை ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியுடன் தொடர்புடையது, எனவே படிக்கட்டுகளின் வடிவமைப்பை நடைமுறைத்தன்மையுடன் ஒன்றிணைப்பது இந்த ஆற்றலை ஒருங்கிணைத்து, வெற்றிக்கான உங்கள் பயணத்தை மென்மையாகவும் அமைதியாகவும் மாற்றும்.
படிகளின் எண்ணிக்கை முக்கியம்
ஒற்றைப்படை எண் கொண்ட படிகள் பார்வைக்கு மகிழ்ச்சி தருவது மட்டுமின்றி வீட்டிற்குள் சமநிலையான ஆற்றலையும் உருவாக்குகிறது என்று வாஸ்து அறிவுறுத்துகிறது. எனவே நீங்கள் படிகளின் எண்ணிக்கையைத் தீர்மானிக்கும் போது, ஒற்றைப்படை எண்ணிக்கையைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு முறை நீங்கள் இந்த படியில் ஏறும்போது வெற்றிக்கான படிகளில் ஏறுவீர்கள்.
படிக்கட்டு செய்யப்படும் பொருள்
உங்கள் படிக்கட்டுகள் செய்யப்படும் பொருள் முக்கியத்துவம் வாய்ந்தது. மரம் வளர்ச்சி மற்றும் இயற்கையான முன்னேற்றத்தை குறிக்கிறது, கல் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை வெளிப்படுத்துகிறது. அதேசமயம் உலோகப் படிக்கட்டுகள் கவனம் செலுத்தும் ஆற்றலை மேம்படுத்தலாம். உங்கள் தனிப்பட்ட விருப்பங்களுடன் ஒத்துப்போகும் பொருளைத் தேர்ந்தெடுக்கவும்.
படிக்கட்டுகளின் அகலம்
உங்கள் படிக்கட்டுகளின் அகலம் நீங்கள் நினைப்பதை விட முக்கியமானது. பரந்த படிகள் பார்வைக்கு ஈர்க்கக்கூடியவை மட்டுமல்ல, விசாலமான மற்றும் எளிதான உணர்வை உருவாக்குகின்றன. ஒரு குறுகிய படிக்கட்டு சுருங்கிய ஆற்றல் ஓட்டத்திற்கு வழிவகுக்கும், மேலும் இது உங்கள் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருக்கும்.
வெளிச்சம் முக்கியம்
உங்கள் படிக்கட்டுகளில் வெளிச்சம் தாராளமாக இருப்பதை உறுதி செய்யவும். அவ்வாறு செய்யும்போது, உங்கள் வாழ்க்கையில் நேர்மறை மற்றும் தெளிவு ஆகியவற்றை அடையாளமாக ஈர்க்கிறீர்கள். நன்கு ஒளிரும் படிக்கட்டு உங்கள் இருண்ட காலங்களிள் உங்களை வழிநடத்தும் கலங்கரை விளக்கமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications

