Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
வாஸ்துப்படி, வீட்டின் வடகிழக்கு மூலையில் இத வையுங்க.. வீட்டுல பணம் 2 மடங்கு அதிகரிக்கும்...
Vastu Tips In Tamil: ஒருவரது முன்னேற்றத்தில் அவர் குடியிருக்கும் வீடு முக்கிய பங்கை வகிக்கிறது. அதனால் தான் வீடானது வாஸ்துப்படி இருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள். வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு ஆற்றலைக் கொண்டுள்ளன.
அதில் வடகிழக்கு திசை நேர்மறை ஆற்றல் உருவாகும் திசையாகும். இந்த திசையில் பூஜை அறையை அமைப்பது நல்லது. வடகிழக்கு திசை குபேரரால் நிர்வகிக்கப்படுகிறது மற்றும் சிவபெருமான் இந்த திசையில் வசிப்பதாக கூறப்படுகிறது.

முக்கியமாக இந்த திசை நல்ல ஆரோக்கியம், செல்வம் போன்றவற்றை மேம்படுத்தும் ஆற்றல்களை ஈர்க்கின்றன. வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாகவும், வீட்டில் செல்வம் பெருக வேண்டும் என்று நினைத்தால், வீட்டின் வடகிழக்கு திசை/மூலையில் ஒருசில பொருட்களை வைப்பது நல்லது.
அதே சமயம் ஒருசில பொருட்கள் இந்த திசையில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அதுவே பல பிரச்சனைகளை கொண்டு வரும். இப்போது வீட்டில் செல்வம் மற்றும் வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மேம்பட, வீட்டின் வடகிழக்கு திசையில் எவற்றை எல்லாம் வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
* வாஸ்துப்படி, வீடானது கிழக்கு, வடக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கி இருப்பது நல்லது. ஒருவேளை உங்கள் வீடு இந்த திசைகளில் ஒன்றை நோக்கி இல்லாவிட்டால், வீட்டில் எதிர்மறை ஆற்றலை நீக்கி, நேர்மறை ஆற்றலை அதிகரிக்க வடகிழக்கு திசையில் உள்ள ஜன்னலில துளசி செடியை வையுங்கள்.
* நீங்கள் உங்கள் வேலையில் முடிந்தவரை முயற்சித்தும் வெற்றி கிடைக்காவில்லையா? அப்படியானால் வியாழக்கிழமைகளில் வீட்டின் வடகிழக்கு மூலையில் ஸ்ரீ யந்திரத்தை வையுங்கள். இது அதிர்ஷ்டத்தை ஈர்ப்பதோடு, வீட்டில் உள்ளோரின் வளர்ச்சிக்கு வழிவகை செய்யும்.
* உங்கள் குழந்தையால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லையா? அப்படியானால் குழந்தைகள் படிக்கும் அறை அல்லது படுக்கையறையின் வடகிழக்கு மூலையில் ஒரு நீரூற்றை வையுங்கள். இதனால் உங்கள் குழந்தையால் படிப்பில் நன்கு கவனம் செலுத்த முடியும்.
* உங்கள் வீட்டில் செல்வம் மற்றும் அதிர்ஷ்டத்தை அதிகரிக்க வேண்டுமானால், வீட்டின் வடகிழக்கு மூலையில் ஒரு ஃபெங்சூயி ஆமை அல்லது வாஸ்து ஆமையை வாங்கி வையுங்கள். இதனால் வீட்டில் செல்வம் இருமடங்கு அதிகரிக்கும்.
* வீட்டின் வடகிழக்கு மூலையில் கழிவறை எப்போதும் இருக்கக்கூடாது. இல்லாவிட்டால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்தை, பண இழப்பை அதிகரிக்கும். ஒருவேளை கழிவறையை மாற்ற முடியாத சூழல் ஏற்பட்டால், ஒரு பௌல் கல் உப்பை கழிவறையில் வையுங்கள். முக்கியமாக இந்த உப்பை வாரத்திற்கு ஒருமுறை தவறாமல் மாற்றுங்கள்.
* வடகிழக்கு திசையானது குபேரருக்கு உரிய திசையாகும். எனவே இந்த திசையில் காலணி வைக்கும் ரேக்குகள், துடைப்பம், குப்பைத்தொட்டி, கடினமான பொருட்கள் போன்றவற்றை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வறுமையை சந்திக்க நேரிடும்.
* வீட்டில் வடகிழக்கு மூலையில் உடைந்த பொருட்கள் அல்லது உபயோகிக்காத பொருட்களை வைப்பதைத் தவிர்த்து, அந்த பகுதியை சுத்தமாக பளிச்சென்று வைத்திருக்க வேண்டும். இதனால் வீட்டில் அமைதியும், சந்தோஷமும் நீடித்திருக்கும்.
* வீட்டில் ஏதேனும் வாஸ்து தோஷம் இருந்தால், அந்த தோஷத்தினால் அடிக்கடி வீட்டில் சண்டைகளும், பிரச்சனைகளும் தலைத்தூக்கி, எந்நேரமும் வீடு அமைதியிழந்து இருக்கும். இந்நிலையில் வாஸ்து தோஷத்தை நீக்க உலோக பிரமீடு வாங்கி, அவற்றை வடகிழக்கு திசையில் வையுங்கள்.
* வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் மேம்பட வேண்டுமானால், வீட்டின் வடகிழக்கு மூலையில் தினமும் ஒரு தீபத்தை ஏற்றி வையுங்கள். இதனால் அந்த வீட்டில் இருப்போரின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
* வீட்டில் எதிர்மறை ஆற்றல் அதிகம் நிறைந்திருந்தால், அதன் காரணமாகவே வீட்டில் பணப் பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க, வாரத்திற்கு ஒருமுறை வீட்டை துடைக்கும் நீரில் சிறிது கல் உப்பை சேர்த்து கலந்து துடையுங்கள். இதனால் எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படும்.
* வீட்டில் வடகிழக்கு திசையில் மீன் தொட்டி, நீரூற்று போன்றவற்றை வைத்தால், அது வீட்டில் அமைதியை அதிகரிக்கும். மேலும் வடகிழக்கு மூலையில் இவற்றை வைக்கும் போது, வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications