Latest Updates
-
சேனைக்கிழங்கு வாங்குனா இந்த பக்குவத்தில் குழம்பு செய்யுங்க.. கறிக்குழம்பு ருசியில் இருக்கும்.. -
இந்த 5 பிரச்சனை இருந்தால் பப்பாளியை தொடாதீங்க.. இல்லன்னா உங்க நிலைமை மோசமாயிடும்.. -
1 வருடம் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் சூரியன்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட காத்து வீசும்! -
பச்சை பயறு தோசையும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 08 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணுமாம் -
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்..
பூஜை அறையில் தவறுதலாக கூட இந்த சிலைகளை வைக்காதீங்க..!
பொதுவாக வீட்டில் உள்ள பூஜை அறையில் பல வகையான சாமியின் சிலைகளை வைத்திருப்போம். ஆனால் சில சிலைகளை தவறுதலாக கூட வீட்டின் பூஜை அறையில் வைக்க கூடாது என்கிறது சாஸ்திரம். அது என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
1. பல சமயங்களில் வீட்டில் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கு வாஸ்து காரணமாகவும், திடீரென வீட்டில் பணம் நஷ்டமாகும். அதுவும் வாஸ்துவால் தான். முக்கியமாக வீட்டில் உள்ள பூஜை அறையில் உள்ள படங்களும் சிலைகளும்தான் இண்டஹ் பிரச்சனைகளுக்கு காராணம்..

2. வாஸ்து படி, பூஜை அறை வீட்டின் வடகிழக்கு மூலையில் இருக்க வேண்டும் அல்லது கிழக்கு அல்லது மேற்கு நோக்கியும் இருக்கலாம். ஆனால் வடக்கு அல்லது தெற்கு திசையில் இருக்க கூடாது. அதுபோல் பூஜை அறையில் சிலைகள் சரியான முறையிலும் இருக்க வேண்டும். அந்தவகையில், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் வீட்டின் செல்வத்திற்காக எந்தெந்தக் கடவுளின் சிலைகளை வீட்டின் பூஜை அறையில் வைக்கக் கூடாது என்பதைத் தெரிந்து கொள்வோம்..
3. கோபம் கொண்ட தெய்வங்களின் சிலைகளை வீட்டின் பூஜை அறையில் ஒருபோதும் வைக்கக்கூடாது. ஏனெனில் பூஜை அறையில் மகிழ்ச்சியற்ற அல்லது கோபமான மனநிலையில் எந்த தெய்வத்தின் சிலையையும் நிறுவுவது எப்போதும் மனதில் அமைதியின்மையை உருவாக்கி வீட்டில் சண்டைக்கு வழிவகுக்கும்.
4. பூஜை அறையில் காளி, பைரவர், ராகு-கேது போன்ற கோபமான தெய்வங்களின் சிலை அல்லது படங்கள் மற்றும் கோபம் அல்லது வன்முறை வடிவில் எந்த தெய்வத்தையும் வைக்க வேண்டாம்.
5. சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். சனியின் அருள் வேண்டும் என்கிறார்கள் அனைவரும். ஆனால் சனி சிலையை வீட்டில் வைத்து வழிபடுவதில்லை. இதைக் வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவது அசுபமானது என்று கூறப்படுகிறது.
6. சாஸ்திரங்களின்படி, நரசிம்மரின் சிலையை வீட்டில் வைத்து வழிபடக் கூடாது. இந்த உக்கிரமான அவதாரம் வீட்டில் சண்டை சச்சரவுகள் மற்றும் எரிச்சல்களை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகம்.
7. வீட்டில் உள்ள பூஜை அறையில் சிவன் சிலை வைப்பது நல்லது. ஆனால் தவறுதலாக கூட நடராஜர் சிலையை நிறுவ வேண்டாம். இந்த சிலை சிவபெருமானின் களியாட்டத்தை காட்டுகிறது. இது வீட்டில் முரண்பாடுகளை ஏற்படுத்தக்கூடும்.
8. லட்சுமி தேவி செல்வம் மற்றும் தானியங்களின் தெய்வம். பொதுவாக ஒவ்வொருவரின் வீட்டு பூஜையறையிலும் லட்சுமி தேவியின் சிலை அல்லது படம் வைக்கப்படும். ஆனால் தாமரையின் மீது அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் படத்தை வைப்பதுதான் நல்லது..
9. உங்கள் வீட்டின் பூஜையறையில் லட்சுமி தேவியின் நிற்கும் சிலையை தவறுதலாக நிறுவ வேண்டாம். இல்லையெனில் அது நன்மைக்கு பதிலாக, தொல்லைகளையும் நோய்களையும் கொண்டு வரும்.
10. உடைந்த சிலையை பூஜையறையில் வைக்காதீர்கள். உடனே அதை வீட்டை விட்டு வெளியே எறிய வேண்டும். உடைந்த சிலையை வைத்திருப்பது உறவுகளில் பதற்றத்தை உருவாக்கி சண்டைகளுக்கு வழிவகுக்கிறது.
வீட்டின் பூஜையறையில் எந்த சிலைகளை வைக்க வேண்டும்?
விநாயகர், கௌரி, துர்கா, ராமர், லக்ஷ்மி நாராயண், அனுமான், மாரியம்மன் போன்ற சிலைகளை வீட்டின் பூஜையறையில் வைக்கலாம்.



Click it and Unblock the Notifications