Latest Updates
-
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான்
உங்க வீட்டில் இந்த 6 ஓவியங்களில் ஒன்னு இருந்தாலும் உடனே தூக்கி போட்டுடுங்க... இல்லனா ரொம்ப கஷ்டப்படுவீங்க...!
Vastu Tips: வாஸ்து சாஸ்திரம் பல நூற்றாண்டுகளாக இந்தியாவில் பின்பற்றப்பட்டு வரும் ஒரு கட்டிடக்கலை முறையாகும். வாஸ்து நம் வீட்டில் அதிர்ஷ்டத்தை கொண்டுவருவது என்பது பற்றியும், வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றலை எப்படி விரட்டலாம் என்பது பற்றியும் விளக்குகிறது.
குறிப்பிட்ட ஓவியங்களை வைப்பது நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தலாம், நமது வேலை மற்றும் பொது நலனில் இருந்து நமது உறவுகள் மற்றும் ஆரோக்கியம் வரை அனைத்தையும் இவை பாதிக்கலாம்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, நமது வாழ்விடங்களில் நல்ல ஆற்றல்களை பராமரிப்பது முக்கியம். வீட்டில் பொருட்கள் ஒழுங்கமைக்கப்பட்ட விதம் நம் வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதை இது குறிக்கிறது. இந்த பதிவில் வாஸ்து படி வீட்டில் வைக்கக்கூடாத ஓவியங்கள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
உடைந்த அல்லது சேதமான கலைப்படைப்புகள்
உங்கள் அலமாரிகளில் ஏதேனும் சேதமடைந்த அல்லது விரிசலடைந்த கலைப்பொருட்கள் உள்ளதா என்பதைக் கவனியுங்கள். சேதமடைந்த கலைப்பொருட்கள் தீய ஆற்றலைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது மற்றும் வாஸ்து படி துரதிர்ஷ்டத்தைத் தரக்கூடும். அத்தகைய பொருட்கள் உங்கள் வீட்டிலிருந்து உடனடியாக தூக்கியெறியப்பட வேண்டும்.
வனவிலங்கு ஓவியங்கள்
உறுமும் புலிகள் அல்லது சிங்கங்கள் போன்ற ஆக்ரோஷமான அல்லது கொடூரமான விலங்குகளின் படங்கள் பார்ப்பதற்கு கம்பீரமாகத் தோன்றலாம், ஆனால் அவை உங்கள் வீட்டில் அமைதியைக் குலைக்கலாம். குடும்பத்தில் மன அழுத்தம் மற்றும் வாக்குவாதங்களை அதிகப்படுத்தலாம் என்பதால், இதுபோன்ற படங்களைப் பயன்படுத்தக்கூடாது என்று வாஸ்து அறிவுறுத்துகிறது. அதற்குப் பதிலாக, அன்பையும், நல்லிணக்கத்தையும் குறிக்கும் அமைதியான விலங்குகளின் ஓவியங்களைப் பயன்படுத்தவும்.
சோகமான ஓவியங்கள்
சோகம், வன்முறை அல்லது மனஉளைச்சல் தரும் காட்சிகளை விளக்கும் ஓவியங்களை வீட்டில் வைக்கக்கூடாது என்று வாஸ்து பரிந்துரைக்கிறது. இந்த ஓவியங்கள் எதிர்மறை ஆற்றலை வெளியிடும் சக்தியைக் கொண்டுள்ளன, இது குடும்பத்தில் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரிக்கும். மாறாக, மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் அமைதியைத் தூண்டும் கலைப்படைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
இறந்த அல்லது கோபமான நபர்களின் ஓவியங்கள்
இறந்தவர்களின் நினைவுகளைப் பாதுகாக்க விரும்புவது இயல்பானது என்றாலும், பிரிந்த குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்கள் அல்லது அவர்களின் வாழ்நாளில் தீர்க்கப்படாத துக்கம் அல்லது கோபத்தை அனுபவித்தவர்களின் ஓவியங்கள் வீட்டில் எதிர்மறை ஆற்றலைப் பரப்பலாம்.
பாம்பு ஓவியங்கள்
பாம்புகள் மற்றும் தேள்கள் போன்ற விஷம் நிறைந்த உயிரினங்கள் காட்டில் இருக்கலாம், ஆனால் உங்கள் வீட்டில் ஓவியங்களாக இருக்கக்கூடாது. இந்த விலங்குகளின் படங்கள் அல்லது கண்காட்சிகள் துரதிர்ஷ்டம் மற்றும் நிதி சிக்கல்களை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. சிரிக்கும் புத்தர் அல்லது பணத்தால் நிரப்பப்பட்ட குடம் போன்ற வளர்ச்சி மற்றும் வெற்றியைக் குறிக்கும் ஓவியங்களை வைக்கவும்.
அதிக கலைப்படைப்புகள் வைப்பதைத் தவிர்க்கவும்
அதிகப்படியான கலைப்படைப்புகள் உங்கள் அலமாரிகளை அடைப்பதால் உங்கள் வீட்டில் இருக்கும் ஆற்றல் ஓட்டம் தடைபடலாம். உங்களுக்கு உண்மையிலேயே தேவையான பொருட்கள் மற்றும் ஓவியங்களை மட்டும் அலமாரிகளில் வைக்கவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications
