Latest Updates
-
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்! -
நைட் தூங்கும் முன் 1 ஏலக்காய் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஜூலை 29ல் செவ்வாய்-சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
சௌ சௌ வாங்குனா இப்படி பொரியல் செய்யுங்க.. டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.. -
World Brain Day 2026: மூளையில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இந்த 4 உணவுகளை சாப்பிடுங்க - கூறும் டாக்டர்.பிள்ளை! -
ஜூலை இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
ராகி முருங்கைக்கீரை அடையும், வேர்க்கடலை தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த பொருட்கள் வீட்டில் இருந்தா உடனே தூக்கிப் போடுங்க.. இல்ல பண கஷ்டத்தை அதிகமா சந்திப்பீங்க..
Vastu Tips In Tamil: உங்க வீட்டில் பணம் தங்குவதில்லையா? எவ்வளவு சம்பாதித்தாலும் வந்த வேகத்தில் பணம் செலவாகிறதா? எப்போதும் பண பிரச்சனைகளை சந்தித்தவாறு உள்ளீர்களா? நீங்கள் பண விஷயத்தில் துரதிர்ஷ்டசாலியாக உணர்கிறிர்களா? அப்படியானால் அதற்கு காரணம் உங்கள் வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடுகள் தான்.
ஆம், வாஸ்துப்படி, ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் பொருட்கள் அதிகம் இருந்தால், அது அந்த வீட்டில் பண பிரச்சனைகளை மட்டுமின்றி, குடும்பத்திலும் பிரச்சனைகளை வரத் தூண்டும். இந்நிலையில் எவ்வளவு கடினமாக அந்த வீட்டில் உள்ளோர் பணத்தை சம்பாதிக்க முயற்சித்தாலும், அதில் தோல்விகளையே சந்திக்க நேரிடும்.

சரி, எந்த மாதிரியான பொருட்கள் வீட்டில் இருக்கக்கூடாது என்று நீங்கள் கேட்கலாம். கீழே வாஸ்துப்படி எந்த பொருட்கள் வீட்டில் இருந்தால், அது ஒருவரது வீட்டில் பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் என்பன குறித்து கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் வீட்டில் இவை இருந்தால், அவற்றை உடனே தூக்கி எறியுங்கள்.
1. பழைய பேப்பர், ரசீது
நிறைய பேருக்கு பேப்பர் படிக்கும் பழக்கம் இருக்கும். இதனால் தினமும் பேப்பரை வாங்குவார்கள். இப்படி வாங்கும் பேப்பரை ஆண்டு கணக்கில் சேகரித்து வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேப் போல் பயன்படாத பழைய ரசீதுகள், ஆவணங்கள் போன்றவற்றையும் பல ஆண்டுகளாக சேகரித்து வைக்காமல், அவற்றையும் தூக்கி எறிய வேண்டும். ஏனெனில் இவை அனைத்தும் குப்பைக்கு சமம். வீட்டில் குப்பையை சேர்த்து வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை தான் அதிகரிக்கும். எனவே இவற்றை அவ்வப்போது தூக்கி எறிந்துவிட வேண்டும்.
2. காய்ந்த செடிகள்
தற்போது பலரும் வீட்டின் அழகை மேம்படுத்தும் பல உள்அலங்கார செடிகளை வாங்கி வளர்க்கிறார்கள். இப்படி வீட்டினுள் செடிகளை வளர்க்கும் போது செடிகள் காய்ந்து போகாமல் சரியாக பராமரிக்க வேண்டும். காய்ந்த செடிகளை வீட்டினுள் வைத்து வளர்த்தால், அது வீட்டிற்குள் எதிர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து, பண பிரச்சனைகளை அதிகம் சந்திக்க வைக்கும்.
3. குப்பைகள்
நல்ல சுத்தமான வீட்டில் தான் நேர்மறை ஆற்றல் ஓட்டம் இருப்பதோடு, லட்சுமி தேவியும் குடியிருப்பாள். உங்கள் வீட்டில் பணம் நிலைத்திருக்க வேண்டுமானால், வீட்டில் சேரும் குப்பைகளை தினந்தோறும் அகற்றிவிட வேண்டும். நாள் கணக்கில் குப்பைகளை சேகரித்து வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, பண தட்டுப்பாட்டை அதிகரிக்கும்.
4. அழுக்கு ஜன்னல்
வீட்டினுள் நேர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக இருக்க வேண்டுமானால், வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைக்க வேண்டும். ஆனால் நேர்மறை ஆற்றல் நுழையும் அப்படிப்பட்ட ஜன்னல்கள் மற்றும் கதவுகள் அழுக்குகள் நிறைந்து இருந்தால், அது வீட்டில் பண பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே கதவுகள் மற்றும் ஜன்னல்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். அதற்கு அடிக்கடி அவற்றை சுத்தம் செய்யுங்கள்.
5. உடைந்த குழாய்
வீட்டில் உள்ள குழாய்களில் நீர் வடிந்து கொண்டே உள்ளதா? அப்படியானால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும். ஏனெனில் வாஸ்துப்படி, நீரை வீணாக்குவது தேவையில்லாத செலவுகளை அதிகரிக்கும். இதன் காரணமாக பணத் தட்டுப்பாட்டால் அவதிப்படக்கூடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications