Latest Updates
-
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்!
வாஸ்துப்படி பூஜை அறையில் இதை வெக்காதீங்க.. இல்ல தெய்வங்களின் கோபத்துக்கு ஆளாகி கஷ்டப்படுவீங்க..
Vastu Tips For Pooja Room In Tamil: வாஸ்து சாஸ்திரம் நமது வாழ்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஏனெனில் நாம் குடியிருக்கும் வீடு வாஸ்து விதிகளைப் பின்பற்றி கட்டப்பட்டிருந்தால் மட்டும் தான் அந்த வீட்டில் செல்வம் நிலைத்திருப்பதோடு, மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும்.
வாஸ்துப்படி கட்டப்படாத வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகம் நிறைந்திருக்கும். இதன் விளைவாக பலவிதமான பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும். என்ன தான் நமது வீட்டில் தெய்வங்கள் குடியிருக்கும் பூஜை அறை இருந்தாலும், அந்த பூஜை அறையிலும் வாஸ்து விதிகளைப் பின்பற்றியிருக்க வேண்டும்.

அதாவது பூஜை அறையின் திசை, பூஜை அறையில் வைக்கும் தெய்வங்களின் திசை, தெய்வங்களை வழிபடும் போது எந்த திசையை நோக்கி இருக்க வேண்டும், எந்த மாதிரியான தெய்வங்களை வைத்திருக்க வேண்டும், எவற்றை வைத்திருக்கக்கூடாது என்று பல விஷயங்களை யோசித்து, வீட்டின் பூஜை அறையை அமைக்க வேண்டும். இப்போது இதுக்குறித்து சற்று விரிவாக காண்போம்.
இறந்தவர்களின் போட்டோ
பிடித்த ஒருவர் இறக்கும் போது, அவரை தெய்வமாக நினைத்து, அவரது போட்டோவை வீட்டின் பூஜை அறையில் வைத்து பலரும் வழிபடுவதுண்டு. ஆனால் வாஸ்துப்படி இறந்தவர்களின் போட்டோக்களை பூஜை அறையில் வைத்து வழிபடக்கூடாது. அதேப் போல் இறந்தவர்களின் போட்டோ உள்ள இடத்தில் எந்த ஒரு துறவியின் போட்டோவையும் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
வலது பக்க துதிக்கை கொண்ட விநாயகர் சிலை
விநாயகர் போட்டோக்கள் அல்லது சிலைகள் பல வடிவங்களில் கடைகளில் விற்கப்படுகின்றன. இந்த விநாயகர் சிலை அல்லது போட்டோவை வீட்டில் வைப்பதாக இருந்தால், வலது பக்கம் துதிக்கையைக் கொண்ட விநாயகர் சிலையை வீட்டில் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும்.
ஏனெனில் வலது பக்க துதிக்கையைக் கொண்ட விநாயகர் இருந்தால், வீட்டில் உள்ள மற்ற தெய்வங்களை சாந்தப்படுவது என்பது கடினமாக இருக்கும் மற்றும் வழக்கமாக மேற்கொள்ளும் வழிபாட்டை விட அதிக கவனிப்பு இந்த வகை துதிக்கையைக் கொண்ட விநாயகருக்கு தேவைப்பபடுவதாக நம்பப்படுகிறது. அதனால் தான் இந்த வகை விநாயகர் சிலை கோவில்களில் வைத்து வழிபடப்படுகிறது.
எந்த சிலைகளை வைத்திருக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, காளி, சனி பகவான், ராகு-கேது போன்ற தெய்வங்களின் சிலைகளை வீட்டின் பூஜை அறையில் வைதது வழிடக்கூடாது. ஏனெனில் இந்த தெய்வங்கள் அனைத்தும் சற்று உக்கிரமான நிலையில் இருப்பவையாக கருதப்படுகின்றன. மேலும் இந்த தெய்வங்களை வழிபடும் முறை சற்று கடினமாக இருக்கும். வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்க வேண்டுமானால், தெய்வங்கள் எப்போதும் அமர்ந்த நிலையில் இருக்கும் சிலைகளையே வைக்க வேண்டும்.
லட்சுமி தேவியின் எந்த நிலையை வைத்திருக்கக்கூடாது?
செல்வத்தின் தெய்வமாக கருதப்படும் லட்சுமி தேவியை வீட்டில் வைத்து வழிபடுவது நல்லது தான். ஆனால் லட்சுமி தேவியின் சிலைகளை வீட்டில் வைத்து வழிபடுவதாக இருந்தால், சரியான நிலையில் உள்ள சிலைகளை வைத்து வழிபட வேண்டும். லட்சுமி தேவியை வீட்டில் வைத்து வழிபட்டால், வீட்டில் செல்வம் பெருகுவதோடு, மகிழ்ச்சியும் அதிகரிக்கும். மேலும் வீட்டில் வறுமை எதுவும் இருக்காது.
வீட்டில் லட்சுமி தேவியின் சிலைகளை வைப்பதாக இருந்தால், உட்கார்ந்த நிலையில் உள்ள லட்சுமி தேவியின் சிலைகளைத் தான் வைக்க வேண்டும். நின்ற நிலையில் உள்ள சிலைகளை பூஜை அறையில் வைக்கக்கூடாது. அதுவும் இன்னும் சிறப்பான பலனைப் பெற நினைத்தால், விஷ்ணுவுடன் உள்ள லட்சுமி தேவியின் சிலையை வைத்திருப்பது நல்லது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications