Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
வீட்டில் நல்லது நடக்கமாட்டீங்குதா? அப்ப வாஸ்துப்படி வீட்டின் கிழக்கு திசையில் இத வையுங்க...
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தில் ஒவ்வொரு திசையும் அதன் முக்கியத்துவத்தையும், ஆற்றலையும் கொண்டுள்ளன. திசையின் ஆற்றலை மனதில் கொண்டு வீடு மற்றும் அலுவலகம் அமைந்தால், அதனால் பல்வேறு நன்மைகளையும், முன்னேற்றத்தையும் காணலாம்.
பொதுவாக கிழக்கு, வடக்கு போன்ற திசைகள் மிகச்சிறந்த திசைகளாக கருதப்படுகின்றன. பெரும்பாலானோர் இந்த திசைகளை நோக்கியே வீட்டின் வாசல் இருக்க விரும்புவர். குறிப்பாக கிழக்கு திசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த கிழக்கு திசையில் சூரியனும் உதிப்பதால், கிழக்கு திசையின் தெய்வமாக சூரிய பகவான் கருதப்படுகிறார்.

மேலும் கிழக்கு திசை நேர்மறை ஆற்றலை அதிகம் கொண்ட திசையும் கூட. வாஸ்துப்படி, ஒருவரது வீட்டின் கிழக்கு திசையில் ஒருசிலவற்றை வைப்பதன் மூலம் அந்த வீட்டில் உள்ளோர் வெற்றி, முன்னேற்றம், செல்வம் ஆகியவற்றைக் காணலாம். இப்போது அவை என்னவென்பதைக் காண்போம்.
* வீட்டின் கிழக்கு திசையில் புனிதமான துளசி செடியை வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. இந்த செடி நல்ல மணத்தை கொண்டதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றலையும் கொண்டு வரும். அதுவும் இரண்டு துளசி செடிகளை வைத்திருந்தால், அது இன்னும் கூடுதல் நன்மைகளை வழங்கும்.
* உங்கள் வீட்டில் மருத்துவ குணங்கள் நிறைந்த மூலிகை செடிகளை வைத்து வளர்த்து வந்தால், வாஸ்துப்படி அந்த செடிகளை வீட்டின் கிழக்கு திசையில் வைத்து வளர்ப்பது நல்லதாக கருதப்படுகிறது. அப்படி கிழக்கு திசையில் வைக்கும் போது, அதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, பலவிதமான நன்மைகள் கிடைக்கும்.
* நீங்கள் ஓவியத்தில் ஆர்வம் கொண்டவரானால், ஒரு அழகான ஓவியத்தை வீட்டில் கிழக்கு நோக்கிய சுவற்றில் வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. இப்படி வைப்பதால் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படும்.
* வாஸ்துப்படி ஒருவரது தினம் சிறப்பாக இருக்க வேண்டுமானால், காலையில் எழுந்ததும் வீட்டின் கிழக்கு திசையில் உள்ள பகுதியில், கிழக்கு திசையை நோக்கி அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்வது, பேப்பர் படிப்பது, காபி குடிப்பது போன்ற செயல்களை செய்து வந்தால், அன்றைய தினம் மிகவும் சிறப்பாக இருப்பதாக கருதப்படுகிறது.
* உங்கள் வீட்டில் படிக்கும் குழந்தைகள் இருந்தால், அவர்கள் படிக்க பயன்படுத்தும் டேபிளை கிழக்கு திசையை நோக்கியவாறு வைத்தால், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். மேலும் அவர்களின் சிந்தனை சிறப்பாக இருக்கும்.
* உங்கள் வீடு எந்த திசையை நோக்கி இருந்தாலும், கிழக்கு திசையில் ஒரு பெரிய ஜன்னல் மற்றும் கதவை அமைக்க முயற்சி செய்யுங்கள். இதனால் வீட்டில் நேர்மறை ஆற்றலானது அந்த வழியாக எளிதில் வீட்டினுள் நுழைந்து, வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பலவிதமான நன்மைகளைப் பெற உதவும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications

