Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
வாஸ்துப்படி, இந்த சிலைகளை வீட்டில் வாங்கி வைத்தால் அதிர்ஷ்டத்துடன் செல்வமும் அதிகரிக்குமாம்...
Vastu Tips In Tamil: ஒருவரது முன்னேற்றத்தில் வீட்டில் உள்ள ஒவ்வொரு பொருட்களும் முக்கிய பங்கை வகிக்கின்றன என்பது தெரியுமா? ஆம், வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டில் நாம் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளும் நேர்மறை அல்லது எதிர்மறை ஆற்றலை வெளியிடுகின்றன.
இந்த ஆற்றல்கள் அந்த வீட்டில் உள்ளோரின் தொழில் வாழ்க்கை, ஆரோக்கியம், நிதி நிலை, உறவுகள், முன்னேற்றம் போன்றவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும். இது தவிர வீட்டில் உள்ள சில பொருட்கள் ஒருவரது தூங்கிக் கொண்டிருக்கும் அதிர்ஷ்டத்தை தட்டி எழுப்பி பிரகாசிக்க வைக்கும் திறன் கொண்டது.

சிலருக்கு வீட்டை அழகான சிலைகளால் அலங்கரிக்க விரும்புவார்கள். நீங்களும் சிலைகளால் வீட்டை அலங்கரிக்க விரும்புபவராயின், உங்கள் அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தை அதிகரிக்கும் சிலைகளை வாங்கி வையுங்கள். கீழே அவை எந்த சிலைகள் என்று கொடுக்கப்பட்டுள்ளன. அதில் உங்களுக்கு பிடித்ததை வாங்கி வையுங்கள்.
கிளி சிலை
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிளியின் சிலை அல்லது கிளியின் படங்களை குழந்தைகள் படிக்கும் அறையில் வைத்திருக்க வேண்டும். இதனால் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்குவதோடு, அவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். எனவே உங்கள் குழந்தைகள் சிறந்து படிக்க வேண்டுமென விரும்பினால், படிக்கும் அறையின் வடக்கு திசையில் கிளி சிலையை வைக்க வேண்டும். மேலும் கிளி அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.
யானை சிலை
வாஸ்துப்படி, வெள்ளி அல்லது பித்தளையால் ஆன யானையின் சிலையை வீட்டில் வாங்கி வைப்பது மிகவும் நல்லது. ஏனெனில் யானை செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் யானையின் சிலையை வைத்திருந்தால், அது அந்த வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, வீட்டின் வறுமையை நீக்கி, செல்வத்தைப் பெருக்கும். இது தவிர ராகு தோஷம் இருந்தாலும் அது நீங்கும்.
அன்னப்பறவை சிலை
வாஸ்துப்படி அன்னப்பறவையின் சிலை மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதுவும் ஜோடி அன்னப்பறவை சிலைகளை வாங்கி வைக்க வேண்டும். இதனால் வீட்டில் கணவன்-மனைவி இடையே இருந்த சண்டைகள் குறைந்து, அன்பு அதிகரிக்கும். மேலும் வீட்டின் சூழல் அமைதியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
ஆமை சிலை
வாஸ்து சாஸ்திரத்தில் ஆமை சிலை செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. இந்த ஆமை சிலையை வீட்டில் வைத்திருநதால், வீட்டில் உள்ளோரின் ஆரோக்கியம் சிறப்பாக இருப்பதோடு, வீட்டின் சூழல் எப்போதும் மகிழ்ச்சியாகவும் இருக்கும். இந்த சிலையை வடக்கு, கிழக்கு திசையை வைத்திருக்க வேண்டும். அதுவும் ஒரு பாத்திரத்தில் நீரை நிரப்பி, அதில் ஆமை சிலையை வைத்து, வீட்டின் ஹாலில் வைக்க வேண்டும்.
ஒட்டக சிலை
வாஸ்துப்படி, ஒட்டக சிலையை வீட்டில் வைத்திருப்பது சிறந்ததாக கருதப்படுகிறது. ஒட்டகம் கடின உழைப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. எனவே ஒட்டக சிலையை வீட்டில் வைத்திருந்தால், அந்த வீட்டில் வியாபாரம் செய்வோருக்கு எப்போதும் நல்ல லாபம் கிடைக்கும். அதுவும் ஒட்டக சிலையை வடமேற்கு திசையில் வைக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications

