Latest Updates
-
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
வாஸ்துப்படி, இறந்தவர்களின் போட்டோக்களை வீட்டின் எந்த இடத்தில், எந்த திசை பார்த்து தொங்கவிட வேண்டும்?
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு மற்றும் வீட்டில் இருக்கும் பொருட்கள் வாஸ்துப்படி இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான், வீடு செழிப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். நிறைய பேர் தங்கள் வீடுகளை போட்டோக்களால் அலங்கரிப்பார்கள்.
அப்படி வீட்டில் வைக்கும் ஒவ்வொரு போட்டோவும் சரியான திசையில் சரியான இடத்தில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரித்து, வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.

முக்கியமாக வீட்டில் முன்னோர்களின் போட்டோக்களை வைக்கும் போது, அவற்றை சரியான இடத்தில் வைக்க வேண்டும். நிறைய பேர் முன்னோர்களை தெய்வம் போன்று கருதி, அவர்களின் போட்டோக்களை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள்.
ஆனால் அப்படி வைப்பது நல்லதல்ல. இப்போது வாஸ்துப்படி முன்னோர்களின் போட்டோக்களை வீட்டின் எந்த இடத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
தொங்கவிடக்கூடாது
வீட்டில் முன்னோர்களின் போட்டோக்களை நீங்கள் வைத்திருப்பவரானால், ஒரு விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். அது முன்னோர்களின் போட்டோக்களை எப்போதும் சுவற்றில் தொங்கவிடக்கூடாது. மாறாக, அந்த போட்டோக்களை வீட்டில் உள்ள செல்ப்பில் அல்லது கபோர்டில் வைக்க வேண்டும். சுவற்றில் முன்னோர்களின் போட்டோக்களை தொங்கவிடுவது, அவர்களை அவமானப்படுத்துவதற்கு சமம் மற்றும் அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெற முடியாமல் தடுத்து, பித்ரு தோஷத்தை உண்டாக்கும்.
ஒன்றிற்கு மேற்பட்ட போட்டோக்கள் கூடாது
வீட்டில் முன்னோர்களின் போட்டோக்களை வைக்கும் போது, அவர்களின் போட்டோவானது ஒன்றிற்கு மேல் இருக்கக்கூடாது. அப்படி அவர்களின் பலவிதமான போட்டோக்களை வீட்டில் வைத்திருந்தால், அது முன்னோர்களை கோபப்படுத்துவதோடு, வீட்டில் பிரச்சனைகளையும், கருத்து வேறுபாடுகளையும் அதிகரிக்கும்.
எந்த இடத்தில் வைக்கக்கூடாது?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, முன்னோர்களின் போட்டோக்களை மற்றவர்களின் கண்களில் படும்படி வைக்கக்கூடாது. அப்படி வீட்டிற்கு வருவோரின் கண்களில் படும்படி போட்டோக்களை வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும். ஆகவே முன்னோர்களின் போட்டோக்களை வீட்டின் ஹாலில் வைக்கக்கூடாது. அதோடு வீட்டின் படுக்கை அறையிலும் வைக்கக்வடாது. இதனால் எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.
பூஜை அறையில் வைக்கக்கூடாது
இறந்த முன்னோர்களின் போட்டோக்களை பூஜை அறையில் வைத்து வணங்கக்கூடாது. வாஸ்துப்படி, கடவுள் மற்றும் முன்னோர்களின் இடம் வேறு. எனவே கடவுளின் போட்டோ இருக்கும் இடத்தில் முன்னோர்களின் போட்டோக்களை வைக்கக்கூடாது. அப்படி வைத்து வழிபட்டால், அது வாழ்வில் பல தடைகளை ஏற்படுத்தும். முக்கியமாக வீட்டின் சூழல் அமைதியின்றி, குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். அதோடு வீட்டில் உள்ளோரின் ஆயுளும் குறைந்து, உயிருக்கு பலவிதமான ஆபத்துக்களை சந்திக்க நேரிடும்.
எந்த திசையில் முன்னோர்களின் போட்டோக்களை வைக்க வேண்டும்?
வாஸ்துப்படி, முன்னோர்களின் போட்டோக்களை வடக்கு திசையில் தான் எப்போதும் வைக்க வேண்டும். என்ன தான் தெற்கு திசை முன்னோர்களின் திசையாக கருதப்பட்டாலும், வடக்கு திசையில் போட்டோக்களை வைக்கும் போது, அது தெற்கு திசையை பார்த்தவாறு இருக்கும். மேலும் எப்போதும் முன்னோர்களின் போட்டோக்களை தெற்கு மற்றும் மேற்கு சுவற்றில் தொங்கவிடாதீர்கள். அப்படி செய்தால், அது வீட்டின் மகிழ்ச்சியையும், செழிப்பையும் பாதிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications