Latest Updates
-
புதன் சிம்ம ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு மூடப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
செப்டம்பரில் சனி-செவ்வாயால் உருவாகும் கேந்திர யோகம்: இந்த 4 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்! -
ஆந்திரா முட்டைக்கோஸ் பச்சடி ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
தங்க நகைகள் ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி கொடுக்கப்படுகிறது தெரியுமா? இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்..
வாஸ்துப்படி, வீட்டில் இந்த பறவைகளின் படங்களை வைத்தால், பணப் பிரச்சனை குறைந்து.. செல்வம் பெருகுமாம்..
Vastu Tips In Tamil: நாம் குடியிருக்கும் வீடு மட்டுமின்றி, வீட்டில் வைத்திருக்கும் பொருட்களும், அப்பொருட்கள் இருக்கும் திசைகளும் ஒருவரது வாழ்க்கையில் நடக்கும் நல்லது கெட்டதுடன் தொடர்பு கொண்டுள்ளன. எனவே தான் மகிழ்ச்சியான மற்றும் செழிப்பான வாழ்க்கையை வாழ வாஸ்துப்படி எதையும் மேற்கொள்ளுமாறு பெரியோர்கள் கூறுகின்றனர்.
ஒருவர் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும், பிரச்சனைகளையும் சந்திக்கிறார்கள் என்றால், அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஓட்டம் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் வீட்டில் ஒருசில மாற்றங்களை செய்வதன் மூலம், வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரித்து, பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். ஒருவரது அதிர்ஷ்டத்தை மாற்றக்கூடிய பல விஷயங்கள் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

மேலும் ஜோதிடத்தின் படி, ஒருசில பறவைகளின் போட்டோக்களை வீட்டில் வைத்திருந்தால், வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, வெற்றிகளும், பண வரவும் அதிகரிக்கும். இப்போது வாஸ்துப்படி, வீட்டில் எந்த மாதிரியான பறவைகளின் போட்டோக்களை வைத்திருக்க வேண்டும் மற்றும் அவற்றை எந்த இடத்தில் எந்த திசையை நோக்கி வைக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
அன்னப்பறவை
அன்னப்பறவை ஒரு அழகான பறவை. வாஸ்து சாஸ்திரத்தில் இது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இப்படிப்பட்ட அன்னப்பறவையின் போட்டோவை வீட்டில் வைத்திருப்பது அதிர்ஷ்டத்தைக் கொண்டு வரும். அதுவும் இந்த அன்னப்பறவையின் போட்டோவை தென்கிழக்கு திசையில் வைக்க வேண்டும். இப்படி இந்த திசையில் இந்த பறவையின் போட்டோவை வைக்கும் போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, பண வரவில் உள்ள தடைகளையும் நீக்கும்.
மயில்
மயில் முருக பெருமானின் வாகனம் மட்டுமின்றி, வாஸ்து சாஸ்திரத்திலும் மயில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தோகையை விரித்து மயில் இருக்கும் போது, அதன் அழகு மிகவும் கவரச்சியானது. இந்த மயில் நேர்மறை ஆற்றலின் அடையாளமாகவும் கருதப்படுகிறது. எனவே இப்படிப்பட்ட மயிலின் போட்டோவை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். மேலும் வீட்டில் உள்ள தோஷங்களைப் போக்கும். வாஸ்துப்படி, மயிலின் போட்டோவை வீட்டின் கிழக்கு சுவற்றில் வைக்க வேண்டும்.
மீன்கொத்தி பறவை
வாஸ்துப்படி மீன்கொத்தி பறவையை வீட்டில் வைத்திருப்பது மிகவும் நல்லது. அதுவும் இந்த பறவையின் போட்டோவை வீட்டின் வடகிழக்கு திசையில் வைப்பது மிகவும் சிறந்ததாக கருதப்படுகிறது. இந்த பறவையின் போட்டோவை வீட்டில் வைத்திருந்தால், மகிழ்ச்சி பெருகும், செல்வம் அதிகரிக்கும் மற்றும் வீட்டில் உள்ள பணப் பிரச்சனைகள் நீங்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications