Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் சுட்ட கத்திரிக்காய் மசியல் ரெசிபி - செஞ்சு பாருங்க - பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க -
பாபா வாங்கா கணிப்புப்படி செப்டம்பர் மாத முதல் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
உலகின் முதல் ஏவுகணையை உருவாக்கிய நாடு எது தெரியுமா? அமெரிக்காவும் இல்ல, ரஷ்யாவும் இல்ல -
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க
வீட்டுல பண பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப வலம்புரி சங்கை வீட்டின் இந்த இடத்துல வையுங்க...
Vastu Tips In Tamil: நாம் ஒவ்வொருவருமே நமது வீட்டில் செல்வத்தின் தெய்வமான லட்சுமி தேவி குடியிருக்க வேண்டுமென விரும்புவோம். அதற்காக பல விஷயங்களை நாம் மேற்கொண்டும் வருகிறோம்.
ஏனெனில் லட்சுமி தேவி வாசம் செய்யாத வீட்டில் தான் பணப் பிரச்சனைகள் அதிகம் வரும். எந்த வீடு அசுத்தமாகவோ, வாஸ்து குறைபாடுகளுடன் உள்ளதோ, அந்த வீட்டில் லட்சுமி தேவி குடியேறமாட்டாள்.

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவரது வீட்டில் லட்சுமி தேவி குடியேறி, வீட்டில் செல்வம் எப்போதும் நிலைத்திருக்க வேண்டுமானால் ஒருசில விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.
அப்படி மேற்கொள்வதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்ச்சியடைவதோடு, வீட்டில் குடிபுகுந்து பிரச்சனைகளுக்கு முடிவுகட்டுவார். இப்போது வாஸ்துப்படி வீட்டில் பணப்பிரச்சனை நீங்கி, செல்வம் பெருக மேற்கொள்ள வேண்டிய சில விஷயங்கள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, அதிகாலையில் எழுந்ததும் ஜன்னல் மற்றும் வாசல் கதவைத் திறக்க வேண்டும். இதனால் நேர்மறை ஆற்றல் வீட்டினுள் நுழைந்து, வீட்டின் சூழல் மகிழ்ச்சியாக இருக்கும். மேலும் வாஸ்து விதிகளை தினமும் பின்பற்றுவதன் மூலம் பண வருகை வீட்டில் சிறப்பாக இருக்கும் என்பது நம்பிக்கை.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பத்தில் லட்சுமிதேவி வாசம் செய்வதாக கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துடைப்பத்தை வீட்டில் சரியான திசையில் மற்றும் இடத்தில் வைக்க வேண்டும். மேலும் துடைப்பமானது வீட்டிற்கு வருவோரின் கண்களில் படாதவாறு வைக்க வேண்டும். அதுமட்டுமின்றி, துடைப்பத்தை கண்ட இடங்களில் தூக்கி எறியவோ, கால்களில் படும்படியோ வைக்கக்கூடாது.
* வாஸ்துப்படி, லட்சுமி தேவி சுத்தமான இடத்தில் தான் வசிப்பாள். ஆகவே உங்கள் வீட்டில் லட்சுமி தேவி குடியேற வேண்டுமானால், வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். இந்த எளிய விஷயத்தைப் பின்பற்றினாவே, லட்சுமி தேவியை வீட்டில் தங்க வைத்து, பண பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, தினமும் அன்னபூரணியை வழிபடும் இடத்தில் அரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்து, அதன் மேல் அன்னப்பூரணி சிலையை வைத்து வழிபட வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் எப்போதும் உணவும், பணமும் நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை.
* வாஸ்துப்படி, வீட்டின் வாசலில் ஓம், ஸ்ரீ கணேச மற்றும் சுப-லாப அடையாளங்களை வைப்பது மிகவும் நல்லது. இதனால் வீட்டினுள் நேர்மறை ஆற்றல் அதிகம் பாய்வதோடு, எதிர்மறை ஆற்றல் அழிக்கப்படும். மேலும் தினமும் காலையில் வீட்டின் வாசலை திறக்கும் போது, முதலில் இந்த அடையாளங்களை வணங்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசியால், வீட்டில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகும்.
* வாஸ்துப்படி, வலம்புரி சங்கு லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. ஆகவே வீட்டின் பூஜை அறையில் வலம்புரி சங்கை வைத்திருப்பது நல்லது. இதன் மூலம், லட்சுமி தேவி வீட்டில் எப்போதும் குடியிருப்பார். மேலும் தினமும் வலம்புரி சங்கை வழிபட்டு வந்தால், லட்சுமி தேவி மகிழ்ச்சியடைந்து, வீட்டில் செல்வத்தைப் பெருக வழிவகை செய்வார்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications