Latest Updates
-
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. ஒரே மாதத்தில் உடல் எடையில் நல்ல மாற்றத்தை பாப்பீங்க.. -
இன்றைய ராசிபலன் 03 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டக்கதவு திறக்குமாம் -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்... -
புதனின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் வேர்க்கடலை குடைமிளகாய் குருமா - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க -
செஃப் தீனா ஸ்டைல் இட்லி பொடியின் ஸ்பெஷலே கடைசியாக சேர்க்கும் இந்த ஒரு பொருள் தாங்க.. அது என்னன்னு பாருங்களேன். -
இந்த 3 மாதத்தில் பிறந்தவர்களுக்கு கெட்டவர்களை பார்த்தவுடனேயே கண்டறியும் அதிசய சக்தி இருக்குமாம் -
முகம் கருப்பா இருக்கா? பலாப்பழம் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. வெள்ளையாவீங்க.. -
இந்தியாவில் ஆண் நதி என்று அழைக்கப்படும் ஒரே நதி எது தெரியுமா? இந்தியாவின் மிகப்பெரிய நதியும் இதுதானாம் -
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 5 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது..!
வாஸ்து டிப்ஸ்: வீட்டில் கடிகாரத்தை எந்த திசையில் மாட்ட வேண்டும்?
வாஸ்து சாஸ்திர குறிப்புகள் நம் வீட்டை எப்படி வைத்துக் கொள்ள வேண்டும். எந்த விஷயங்கள் எங்கு வைத்தால் நேர்மறை சக்திகள் ஏற்படும் என்பதை உணர்த்தக்கூடியதாக இருக்கிறது. அதில் மிக முக்கியமானதாக கருதப்படுவது சுவர் கடிகாரம்தான். சுவரில் கடிகாரத்தை மாட்டி வைக்காத வீடே இருக்காது. தாத்தா பாட்டி காலத்தில் கடிகாரம் என்பது அத்தியாவசிய பொருளாக மட்டுமின்றி ஆடம்பர பொருளாகவும் அவர்களின் கவுரவத்தை வெளிப்படுத்தும் பொருளாகவும் இருந்துள்ளது..
அத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த சுவர் கடிகாரத்தை எந்த திசையில் தொங்கவிட வேண்டும். எந்த திசையில் கணடிப்பாக வைக்ககூடாது. என்ன நிறத்தில் வைப்பது நல்லது என்பதி குறித்து இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

வாஸ்து படி சுவர் கடிகாரத்தை மாட்டும் திசை
'வாஸ்து சாஸ்திரம்' கிழக்கு , மேற்கு, வடக்கு மற்றும் தெற்கு போன்ற நான்கு முக்கிய திசைகளை அடிப்படையாகக் கொண்டது ; பூமி, காற்று, நெருப்பு, வானம் மற்றும் நீர் போன்ற ஐந்து அத்தியாவசிய கூறுகள், இவை அனைத்திற்கும் ஆதாரமாக இருக்கும் பூமி உறுப்பு. ஒரு வீட்டில் இந்த கூறுகள் ஏராளமாக இருக்க பொருட்களை ஒத்திசைக்கும் வரிசையில் வைப்பது 'வாஸ்து சாஸ்திரத்தில்' எழுதப்பட்டுள்ளது. எனவே, யாராவது ஒரு வீடு அல்லது அலுவலகத்தை கட்டும்போது, வாஸ்து சாஸ்திரத்தின் சுவர் கடிகாரம் எந்த திசையில் இருக்க வேண்டும் என்று ஆச்சரியப்படுவது பொதுவானது , அதற்காக, சுவர் கடிகாரத்தை வைப்பதற்கான திசைகள் எது என்பது குறித்த பட்டில் இதோ..
கிழக்கு திசையில் சுவர் கடிகாரம்
கிழக்கு திசையானது 'சொர்க்கத்தின் அரசனான இந்திரனால்' ஆளப்படுவதாகக் கருதப்படுகிறது. இதனால் அதிர்ஷ்டம் மற்றும் செல்வம் ஆகியவற்றிற்கு ஏற்றது. எனவே வீட்டின் கிழக்குப் பக்கச் சுவரில் சுவர்க் கடிகாரத்தை மாட்டி வைப்பது வீட்டிற்கு அதிர்ஷ்டத்தைத் தரும். கிழக்கு திசையில் சுவர் கடிகாரம் ஒரு ஒட்டுமொத்த மகிழ்ச்சியான குடும்பத்திற்கு உறுதியளிக்கிறது.
வடக்கு திசையில் சுவர் கடிகாரம்
'செல்வத்தின் கடவுள் குபேரன்' வடக்கு திசையை ஆட்சி செய்கிறார். எனவே வடக்கு சுவரில் ஒரு கடிகாரத்தை தொங்கவிடுவதால் செல்வமும் பணமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை. வடக்கு திசையில் சுவர் கடிகாரம் வீட்டின் நிதி நெருக்கடிகளை தீர்க்க உதவுகிறது மற்றும் புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.
கடிகாரத்தை தெற்கு, மேற்கு திசையில் வைக்க வேண்டாம்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கடிகாரத்தை தெற்கு மற்றும் மேற்கு திசையில் வைக்கக்கூடாது. இதனால் வீட்டில் எதிர்மறையான நிகழ்வுகள் ஏற்படும். கடிகாரத்தை கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைப்பதுதான் உத்தமம்..
இந்த கடிகாரத்த மாட்ட வேண்டாம்
வாஸ்து சாஸ்திரப்படி, உடைந்து போன கடிகாரத்தை நம் வீட்டில் ஒருபோதும் வைத்திருக்க வேண்டாம். இதனால் வீட்டில் இருக்கும் நல்ல நிலையை கெடுத்துவிடும். மேலும் கடிகாரம் சரியான நேரத்துடன் இருக்க வேண்டும். சில வீடுகளில் அவற்றை அரை மணி நேரம் கூடுதலாக வைப்பார்கள். அப்படி வைக்ககூடாது. அப்படி வைப்பது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை கொண்டு வரும் என்கிறது வாஸ்து..
உடைந்து போன அல்லது நின்று போன கடிகாரத்தை உடனே சரி செய்துவிடவும். இல்லையெனில் அதை உடனே அகற்றிவிடுவது அவசியம். உடைந்த கடிகாரம் துரதிர்ஷ்டத்தின் அடையாளமாகக் கருதப்படுகிறது. அதனால் எதிர்மறை ஆற்றல்தான் வீட்டிற்குள் வரும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்..
எந்த நிறம் உள்ள கடிகாரம் வீட்டிற்கு நல்லது
கடிகாரத்தின் நிறத்தையும் தீர்மானிக்க வேண்டும். ஏனெனில் வாஸ்துவின் படி நீலம், கருப்பு மற்றும் ஆரஞ்சு நிற கடிகாரங்களை வீட்டில் வைத்திருப்பது நல்ல பலனைத் தராது. எனவே இந்த விஷயத்தில் இந்த நிறங்கள் தவிர்க்கப்பட வேண்டும். எப்போதும் வெளிர் நிறத்தில் கடிகாரத்தைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது.



Click it and Unblock the Notifications