Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
வாஸ்துப்படி, வீட்டின் இந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிச்சுராதீங்க.. இல்ல நிறைய பிரச்சனையை சந்திப்பீங்க
Vastu Tips In Tamil: பெரும்பாலானோரின் வாழ்நாள் கனவாக தனக்கு பிடித்தவாறு ஒரு சொந்த வீட்டை கட்டுவதாகவே இருக்கும். வீட்டை கட்டிய பின் அந்த வீட்டிற்கு தனது பிடித்த நிறத்தில் பெயிண்ட் அடிக்க விரும்புவோம்.
வீட்டின் அழகை மேம்படுத்துவதில், வண்ணங்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன. ஆனால் வீட்டிற்கு வண்ணங்களை தேர்வு செய்யும் போது வாஸ்து விதிகளை நினைவில் கொள்ள வேண்டும் என்பது தெரியுமா?

நிறைய பேருக்கு மஞ்சள் நிறம் பிடித்த வண்ணமாக இருக்கும். இதனால் மஞ்சள் நிற பெயிண்ட்டை தங்களின் வீட்டிற்கு அடிக்க நினைப்பார்கள். என்ன தான் மஞ்சள் ஒரு மங்களகரமான நிறமாக இருந்தாலும், அந்த மஞ்சள் நிற பெயிண்ட்டை திசைகளுக்கு ஏற்ப அடிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் வாஸ்து குறைபாடு ஏற்பட்டு, அதன் விளைவாக வீட்டில் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இப்போது வீட்டின் எந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிக்கலாம் மற்றும் எந்த திசையில் அடிக்கக்கூடாது என்பதைக் காண்போம்.
வீட்டின் எந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிக்கலாம்?
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் கிழக்கு சுவற்றில் மஞ்சள் நிற பெயிண்ட்டை அடிக்கலாம். ஆனால் அடர் மஞ்சள் நிற பெயிண்ட்டை மட்டும் தனியே அடிக்கக்கூடாது. வெளிரிய மஞ்சள் நிறத்தில் தான் பெயிண்ட் அடிக்க வேண்டும்.
* ஒவ்வொரு நிறமும் ஒரு தெய்வத்துடன் தொடர்புடையது. அந்த வகையில் மஞ்சள் நிறம் குரு பகவானுடன் தொடர்புடையது. குரு அறிவையும், ஞானத்தையும் வழங்குபவர். எனவே மஞ்சள் நிறத்தின் முழு பலனைப் பெற விரும்பினால், அதை சரியான திசையில் பயன்படுத்த வேண்டும். குரு பகவானுக்குரிய திசை வடகிழக்கு. எனவே வடகிழக்கு சுவற்றில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்துவது நல்லது. இதனால் அது வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு, அமைதி போன்றவற்றைத் தரும்.
மஞ்சள் நிறத்தை எந்த திசையில் பயன்படுத்தக்கூடாது?
* வாஸ்துப்படி மஞ்சள் நிற பெயிண்ட்டை வீட்டின் தென்கிழக்கு திசையில் பயன்படுத்தக்கூடாது. அப்படி இந்த திசையில் மஞ்சள் நிற பெயிண்ட்டை பயன்படுத்தினால், அது வீட்டில் பல பிரச்சனைகளை வரவழைக்கும்.
* வாஸ்து சாஸ்திரத்தின் படி, மஞ்சள் நிறத்தை அக்னி திசையில் பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ளோரின் வாழ்க்கையில் தீங்கை உண்டாக்கும்.
* தென்கிழக்கு திசையில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தினால், அது வீட்டில் உள்ள உங்கள் தாயின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். அதுமட்டுமின்றி, அந்த வீட்டில் இருப்போர் நிதி பிரச்சனைகள், உறவு பிரச்சனைகள் என்று பலவிதமான பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
வீட்டில் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தும்போது நினைவில் கொள்ள வேண்டியவை:
வீட்டில் மஞ்சள் நிறத்தை பயன்படுத்தும் போது ஒருசில விஷயங்களை நினைவில் கொள்ள வேண்டும். அவை பின்வருமாறு:
* மிகவும் அடர் நிற மஞ்சளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
* வெறும் மஞ்சள் நிறத்தை மட்டும் பயன்படுத்தாமல், அத்துடன் வெள்ளை, பச்சை, நீலம் ஆகியவற்றை சேர்த்து பயன்படுத்துங்கள்.
* முக்கியமாக சிவப்பு நிறத்துடன் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
எனவே உங்கள் மஞ்சள் நிறம் மிகவும் பிடித்தமானதாக இருந்தால், அவற்றை உங்கள் வீட்டிற்கு பயன்படுத்தும் முன், வாஸ்து விதிகளை அறிந்து கொண்டு, பின்னர் பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், வாழ்க்கை நிம்மதியின்றி, பிரச்சனைகள் நிறைந்தாக இருக்கும்.



Click it and Unblock the Notifications