Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மறந்தும் கடவுள் சிலைகளை வீட்டுல இந்த மாதிரி வெக்காதீங்க.. இல்லன்னா கஷ்டம் தான் அதிகரிக்கும்...
Vastu Tips In Tamil: அனைவரது வீட்டிலுமே தெய்வங்களை வழிபடுவதற்கு என்று தனி இடத்தை வைத்திருப்போம். சிலர் தெய்வங்களை வழிபட தனி பூஜை அறையை வைத்திருப்பார்கள். அதுவும் இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் ஏராளமான தெய்வங்கள் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தெய்வம் பிடிக்கும். இதனால் சிலர் இஷ்ட தெய்வங்களின் சிலைகளை வீட்டில் வாங்கி வைத்து வழிபடுவார்கள்.
ஆனால் வீட்டில் தெய்வ சிலைகளை வைத்து வழிபடுவதாக இருந்தால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். என்ன தான் தெய்வங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை கொண்டு வந்தாலும், சில வகையான தெய்வ சிலைகளை வீட்டில் வைத்தால், வீட்டினுள் எதிர்மறையான ஆற்றல் அதிகம் சுற்றும்.

வாஸ்துப்படி, பல தெய்வ சிலைகள் மனித வாழ்வில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும். கீழே எந்த மாதிரியான தெய்வ சிலைகளை வீட்டில் வைக்கக்கூடாது மற்றும் எந்த இடத்தில் தெய்வ சிலைகளை வைக்க வேண்டும் மற்றும் இதுப்போன்று பலரது மனதில் உள்ள பல கேள்விகளுக்கான விடைகளை காண்போம்.
* வாஸ்துப்படி, சண்டை அல்லது அழிவை சித்தரிக்கும் சிலைகளை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை அதிகரிப்பதோடு, அந்த வீட்டில் உள்ளோரிடையே சண்டைகளை அதிகரித்துவிடும்.
* வீட்டில் உடைந்த சிலைகள் அல்லது போட்டோக்களை வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை அசுபமாக கருதப்படுகிறது. இம்மாதிரியான சிலைகள் அல்லது படங்களை வீட்டில் வைத்திருந்தால், அது வீட்டில் கஷ்டத்தை அதிகரிக்கும். ஒருவேளை வீட்டில் இந்த மாதிரியான சிலைகள் இருந்தால், அவற்றை அரச மரத்திற்கு அடியில் வைத்துவிடுங்கள் அல்லது ஆற்றில் போட்டுவிடுங்கள்.
* வீட்டில் தெய்வ சிலைகளை வைப்பதாக இருந்தால், நிற்கும் கடவுள் சிலைகளை வைப்பதற்கு பதிலாக, உட்கார்ந்த நிலையில் உள்ள கடவுள் சிலைகளையே வைக்க வேண்டும். இம்மாதிரியான சிலைகளை வைப்பதே மங்களகரமானதாக மற்றும் நன்மைகளை அளிப்பதாக நம்பப்படுகிறது.
மேலும் தெய்வத்தின் முகம் மென்மையாக சிரித்த நிலையில் மற்றும் கைகளானது ஆசீர்வாதம் வழங்கும் நிலையில் இருக்க வேண்டும். கோபமான நிலையில் உள்ள சிலைகளை வாஸ்துப்படி வீட்டில் வைத்திருக்கக்கூடாது.
* வீட்டில் தெய்வங்களின் சிலைகளை வைப்பதாக இருந்தால், முதுகு தெரியும்படி வைக்கக்கூடாது. தெய்வங்களை பின்புறம் இருந்து வழிபடுவது நல்லதல்ல. அது துரதிர்ஷ்டத்தையே தரும். முக்கியமாக விநாயகரின் சிலையை வீட்டில் வைப்பதாக இருந்தால், விநாயகரின் முதுகு தெரியும்படி வைக்கக்கூடாது.
நம்பிக்கைகளின் படி, விநாயகரின் முதுகு வறுமையுடன் தொடர்புடையது. எனவே முதுகை காட்டும் வகையில் வீட்டில் விநாயகர் சிலையை வைத்தால், அது வீட்டில் பண பிரச்சனைகளுக்கு வழிவகுத்து, வறுமையை அதிகரிக்கும்.
* வீட்டில் எப்போதும் ஒரே தெய்வத்தின் சிலை அல்லது போட்டோ இரண்டு-மூன்று இருக்கக்கூடாது. அவ்வாறு வைத்திருந்தால், அது துரதிர்ஷ்டத்தை வரவழைக்கும்.
* வாஸ்துப்படி, வீட்டில் பைரவர், நடராஜர், சனி பகவான், ராகு-கேது, சிவபெருமானின் ருத்ர அவதாரம் போன்ற சிலை அல்லது போட்டோக்களை வீட்டில் வைத்திருக்கக்கூடாது. இந்த மாதிரியான தெய்வங்களை கோவில்களில் மட்டுமே வழிபட வேண்டும். வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் அமைதி கெட்டுப்போகும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications