Latest Updates
-
கர்நாடகா சுரைக்காய் சட்னி ரெசிபி - இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு செமையா இருக்கும் -
செப்டம்பரில் நிகழும் குரு-செவ்வாய் சேர்க்கை: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
Krishna Janmashtami 2026: கிருஷ்ண ஜெயந்தி எப்போது வருகிறது? வீட்டில் எப்படி பூஜை செய்யணும் தெரியுமா? -
ராகி மாவும், பச்சை பயறும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி கொழுக்கட்டை செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியன்-புதன்-கேது நட்சத்திரம் ஒரே நட்சத்திரத்தில் இணைவதால் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
உங்களுக்கு புற்றுநோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை அதிகமா சாப்பிடுங்க.. -
பரங்கிக்காயை இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்கறி செஞ்சு பாருங்க - சாதத்தோட சாப்பிட அருமையா இருக்கும் -
ஒரு லிட்டர் பெட்ரோல் விற்றால் பெட்ரோல் பங்க்-க்கு எவ்வளவு ரூபாய் லாபம் கிடைக்கும் தெரியுமா? -
ரக்ஷா பந்தன் அன்று உங்க அண்ணன் ராசிக்கேற்ற நிறத்தில் ராக்கி கட்டுங்க.. நல்ல அதிர்ஷ்டத்தை தரும்.. -
கொள்ளு தோசையும், பூண்டு தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்..
பணப் பிரச்சனை இருக்கா? அப்ப தினமும் மஞ்சள் கலந்த நீரில் ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு, இந்த இடத்துல தெளிங்க..
Vastu Tips In Tamil: வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டின் ஒவ்வொரு மூலை மற்றும் திசையில் இருந்தும் நேர்மறை மற்றும் எதிர்மறை ஆற்றல்கள் உருவாகும். ஆகவே வீட்டின் ஒவ்வொரு பகுதியுமே மிகவும் முக்கியமானது.
வாஸ்து சாஸ்திரத்தில், வீட்டில் சுற்றும் எதிர்மறை ஆற்றலை நீக்கும் பல்வேறு வழிகள் உள்ளன. அந்த வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றி, நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரிக்கலாம்.

அதில் ஒன்று தான் தினமும் வாசலில் நீரைத் தெளிப்பது. இப்படி வீட்டு வாசலில் தினமும் நீரைத் தெளிக்கும் போது, வாசலின் வழியே வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை ஆற்றலை விரட்டி, வீட்டினுள் நேர்மறை ஆற்றலை அதிகம் வரவழைக்க முடியும் என்பது நம்பிக்கை. அதுவும் வீட்டு வாசலில் நீரைத் தெளிக்கும் போது, அந்நீரை மஞ்சளைக் கலந்து தெளித்தால், இன்னும் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பொதுவாக மஞ்சளானது மங்களகரமான பொருள் மட்டுமின்றி, மருத்துவ பண்புகளைக் கொண்ட பொருளும் கூட. இந்த மஞ்சளைக் கொண்டு பல்வேறு நோய்களை சரிசெய்வதோடு, வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை நீக்கவும் உதவுகிறது. இப்போது வாஸ்துப்படி, மஞ்சள் நீரை வீட்டு வாசலில் தெளிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைக் காண்போம்.
* மஞ்சள் மிகவும் புனிதமான பொருளாக கருதப்படுகிறது. இந்த மஞ்சள் தூள் கலந்த நீரை வீட்டு வாசலில் தெளிக்கும் போது, அது வீட்டிற்குள் நேர்மறை மற்றும் தெய்வீக ஆற்றலை வீட்டினுள் சுற்றச் செய்து, வீட்டை எப்போதும் அமைதியாகவும், இனிமையாகவும் வைத்திருக்க உதவும்.
* மஞ்சள் மிகவும் சுத்தமானது. இந்த மஞ்சள் தூள் கலந்த நீரை வீட்டு வாசலில் மட்டுமின்றி, வீட்டிற்குள்ளும் தெளிக்கும் போது, வீட்டினுள் உள்ள எதிர்மறை ஆற்றல் வெளியேற்றப்படும்.
* ஒரு வீட்டின் பிரதான வாசல், அந்த வீட்டில் மிகவும் முக்கியமான பகுதியாக கருதப்படுகிறது. எனவே வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் தூள் கலந்த நீரை தெளிக்கும் போது, வீட்டில் உள்ள வாஸ்து மற்றும் கிரக குறைபாடுகள் நீக்கப்படுவதாக கூறப்படுகிறது.
* வீட்டு வாசலானது ராகுவுடன் தொடர்புடையது. எனவே வீட்டு வாசலில் மஞ்சள் நீரைத் தெளித்தால், ராகுவால் சந்திக்கும் பிரச்சனைகள் தடுக்கப்படுவதோடு, வீட்டில் உள்ளோர் தங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
* வீட்டின் பிரதான வாசலில் மஞ்சள் நீரைத் தெளித்து, ஸ்வஸ்திக் அடையாளத்தை கோலமாக போடுவதன் மூலம், வீட்டில் லட்சுமி தேவியும், அன்னப்பூரணி தேவியும் எப்போதும் குடியிருப்பார் என்று சாஸ்திரம் கூறுகிறது. எனவே வீட்டில் செல்வம் மற்றும் உணவிற்கு பஞ்சம் ஏற்படாமல் இருக்க, இச்செயலை தினமும் செய்யுங்கள்.
* வீட்டில் பண பிரச்சனை அதிகமாக உள்ளதா? அப்பிரச்சனை விரைவில் தீர வேண்டும் மற்றும் வீட்டில் நிதி நெருக்கடி வரக்கூடாதெனில், தினமும் மஞ்சள் நீரில் ஒரு ருபாய் நாணயத்தைப் போட்டு, அந்நீரை வீட்டு வாசலில் தெளிக்க வேண்டும். அதன் பின் அந்த நாணயத்தை வீட்டின் பூஜை அறையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம், எப்போதும் வீட்டில் பண பிரச்சனை வராது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications