வாஸ்துப்படி வீட்டின் இந்த 5 இடத்தில் மயில் இறகை வையுங்க.. செல்வம் இருமடங்காக அதிகரிக்கும்..

Vastu Tips In Tamil: சில வீடுகளில் மயில் இறகு வைத்திருப்பதை பார்த்திருப்பீர்கள். ஏனெனில் வாஸ்துப்படி மயில் இறகு சக்தி வாய்ந்த மற்றும் மங்களகரமான பொருளாக கருதப்படுகிறது. அதுவும் இந்த மயில் இறகு வீட்டில் இருந்தால் அது எதிர்மறை ஆற்றலை நீக்கி, வீட்டில் அமைதியை நிலைக்கச் செய்து, செல்வ செழிப்பை கொண்டு வருவதாக நம்பப்படுகிறது. அதற்காக மயில் இறகை வாங்கி வீட்டில் கண்ட இடத்தில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் கிடைக்காமல் போகலாம். எனவே வீட்டில் செல்வம், நல்லிணக்கம், பாதுகாப்பு போன்றவற்றை ஈர்க்க மயில் இறகை வாஸ்து சாஸ்திர விதிகளின் படி வைக்க வேண்டியது அவசியம்.

Vastu Tips 5 Best Places To Keep Peacock Feathers At Home

இந்துமத சாஸ்திரங்களின் படி, மயில் தமிழ் கடவுளான முருக பெருமானின் வாகனம் ஆகும். அதோடு இந்த மயில் இறகை கிருஷ்ணரும் தனது தலையில் அணிந்திருப்பார். இவ்வளவு மகிமை வாய்ந்த மயில் இறகை வீட்டின் குறிப்பிட்ட இடங்களில் வைப்பதன் மூலம், அது வீட்டில் நேர்மறை ஆற்றல், செல்வம் மற்றும் பாதுகாப்பை ஈர்க்கும். இப்போது வாஸ்துப்படி மயில் இறகை வீட்டின் எந்தெந்த இடங்களில் வைக்கலாம் என்பதைக் காண்போம்.

1. வீட்டின் நுழைவாயில்

வாஸ்துப்படி, மயில் இறகை வீட்டின் பிரதான நுழைவாயில் வைப்பதன் மூலம், அது வீட்டிற்குள் நுழையும் எதிர்மறை ஆற்றலையும், தீய சக்தியையும் தடுக்கிறது. அதோடு இது குடும்ப உறுப்பினர்களிடையே நல்லிணக்கத்தை கொண்டு வந்து, குடும்பத்தில் பிணைப்பை வலுப்படுத்தும். அதற்கு இந்த மயில் இறகை பிரதான கதவுக்கு மேலே, வடக்கு, கிழக்கு அல்லது வடகிழக்கு திசையை நோக்கியவாறு வைக்க வேண்டும்.

2. பணப்பெட்டி/பணம் வைக்கும் இடம்

வீட்டில் பணப்பிரச்சனை அதிகம் இருக்கிறதா? அப்படியானால் பணம் வைக்கும் இடத்திலோ அல்லது பணப்பெட்டியிலோ ஒரு மயில் இறகை வையுங்கள். இதன் மூலம் அது எதிர்பாராத அளவில் பண வரவை அதிகரித்து, நிதி இழப்புகளைக் குறைத்து, சேமிப்பை நிலைப்படுத்தும்.

3. படிக்கும் மேஜை அல்லது குழந்தைகளின் படுக்கை அறை

வீட்டில் படிக்கும் பிள்ளைகள் இருந்தால், அந்த பிள்ளைகள் படிப்பில் கவனம் சிதறாமல், மனதை ஒருமுகப்படுத்தி படிப்பில் முழு கவனத்தை செலுத்தவும், அவர்களின் படிக்கும் மேஜையில் அல்லது பிள்ளைகள் படுக்கும் அறையில் மயில் இறகை வையுங்கள். அதுவும் மயில் இறகை கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைப்பது, அதீத சிந்தனை கொண்ட மனதை அமைதிப்படுத்துவதோடு, படித்தவற்றை நினைவில் கொள்ளும் திறனையும் மேம்படுத்துகிறது.

4. ஹால்

வாஸ்துப்படி, மயில் இறகை வீட்டின் ஹாலில் வைப்பது வெளிப்படையான உரையாடலை ஊக்குவிக்கிறது மற்றும் நீர், நெருப்பு கூறுகளை சமநிலைப்படுத்துகிறது. அதற்கு இந்த மயில் இறகை ஹாலின் கிழக்கு அல்லது வடகிழக்கு சுவரில் வைக்க வேண்டும். அதுவும் ஹாலின் கிழக்கு சுவற்றில் 7 மயில் இறகுகளை வைப்பது இன்னும் நல்லது.

5. படுக்கை அறை

திருமணமான தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் அதிகம் இருந்தால், படுக்கை அறையில் மயில் இறகை வைப்பதன் மூலம், அது உறவில் அன்பையும், மகிழ்ச்சியையும் கொண்டு வருவதாக வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. அதுவும் படுக்கை அறையின் தென்மேற்கு மூலையில் வைக்க வேண்டும். முக்கியமாக ஒரு ஜோடி மயில் இறகை சிவப்பு நூலால் கட்டி வைக்க வேண்டும். ஒற்றை மயில் இறகை படுக்கை அறையில் ஒருபோதும் வைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, October 15, 2026, 19:59 [IST]
Desktop Bottom Promotion