Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வைகாசி வாஸ்து 2024: வீடு கட்ட போறீங்களா? இதோ இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்..!
வாஸ்து பகவான் வருடம் முழுவதம் தூங்கிக் கொண்டிருப்பவர். இவர், வருடத்தில் மொத்தம் 8 நாட்கள் மட்டுமே கண் விழிப்பார். மற்ற நாட்களில் தூங்கிக்கொண்டுதான் இருப்பார். இந்த எட்டு நாட்களும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே அவர் கண் விழித்திருப்பார்.
இந்த நேரத்தையே வாஸ்து நேரம் என்கிறோம். வாஸ்து பகவான் விழித்திருக்கும் காலத்தில் மனை, பூமி தொடர்பான விஷயங்களை துவங்கினால் அவற்றில் தோஷம் ஏதும் ஏற்படாமல் அவர் காப்பாற்றுவார் என்பது நம்பிக்கை.. அந்த வகையில் நாளை ஜூன் 3ஆம் தேதி வாஸ்து நாள். காலை 09.58 முதல் காலை 10.34 வரை வாஸ்து பகவான் விழித்திருப்பார்.

வாஸ்து பூஜை
வாஸ்து பூஜை செய்வதற்கு வாஸ்து நாள் மிக முக்கியமானதாகும். புதிய நிலம் வாங்குவதற்கு, புதிய வீடு கட்டுவதற்கு வாஸ்து நாள், சுப முகூர்த்த நேரம் பார்த்து துவங்குவது மிகச் சிறப்பானதாகும். இதனால் மனையை சுற்றி உள்ள தீய சக்திகள் விலகுவதுடன், வறுமைகளும் நீங்கும். ஜோதிட பஞ்சாங்கத்தின் படி நட்சத்திரம், திதி, வரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் மிக முக்கியமானதாகும் நமது முன்னோர்கள் மற்றும் பெரியோர்கள் வாஸ்து சாஸ்திரத்தைப் பற்றி முழுமையாகப் புரிந்து கொண்டு அதன் படி வீடு கோயில் என கட்டினர். அவை இன்றும் பிரமாணடமாக நிமிர்ந்து நிற்கின்றன.
வாஸ்து குறிப்புகள்
வாஸ்து குறிப்புகளைப் பின்பற்றி அவர்களால் கட்டப்பட்ட கட்டிடங்கள் பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் வலுவாக உள்ளன. அத்தகைய பழமையான மற்றும் அற்புதமான ஞானத்தை நம்மில் பலர் தற்போது மறந்துவிட்டுள்ளோம். மக்கள் மேற்கத்திய கலாச்சாரத்துடன் பழகி, தற்காலிக மகிழ்ச்சியில்.. தற்காலிக கட்டமைப்புகளில் சாய்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் கடுமையாக உழைத்து சம்பாதித்த பணத்தை இழக்கிறார்கள். இந்தப் பதிவில் வாஸ்து சாஸ்திரப்படி வீடு கட்டுவதற்கு எந்த மாதிரியான நிலத்தை தேர்வு செய்ய வேண்டும்.. முன் கதவு எந்த திசையில் இருக்க வேண்டும்.. சமையலறை எந்த திசையில் இருக்க வேண்டும்.. படுக்கையறை மற்றும் ஹால் எங்கு இருக்க வேண்டும்? என்பது குறித்து முழுமையாக தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...
நமது சாஸ்திரங்களின்படி வாஸ்து சாஸ்திரத்திற்கு தனி இடம் உண்டு. அதன் சில ரகசியங்களை இப்போது தெரிந்து கொள்வோம். எந்த ஒரு வீடு கட்டும்போதும் முதலில் கவனிக்க வேண்டியது நிலம். தரையை சோதிக்காமல் எவ்வளவு நன்றாக கட்டினாலும் வீணாகிவிடும். நீங்கள் வீடு கட்டும் நிலத்தில் சிறிய குண்டுகள் இருந்தால்.. அது அசுப அறிகுறி, அதே போல் எலும்பு சாம்பல் இருந்தால் நீங்கள் மிகவும் கஷ்டப்படுவீர்கள்.
நிலம்: பூமியின் நிறம் வீடு கட்ட நிலத்தை தேர்வு செய்யும் போது வெள்ளை நிறம் நல்லது.. சிவப்பு நிறமாக இருந்தால் கலவையான பலன்களை தரும். மேலும், பூமியை தோண்டும்போது தாமரை வாசனை வீசினால் நல்லது, குதிரை, யானை போன்ற வாசனை வீசினால், அது கெட்ட பலனைத் தரும். இதுபோன்ற நாற்றங்கள் உள்ள இடங்களில் கட்டுமானங்கள் செய்யக்கூடாது.
நான்கு திசைகள்: நீங்கள் கட்டும் இடத்தில், தரை நான்கு திசைகளிலும் சமமாக இருக்க வேண்டும். மேலும் சந்தன நிற நிலம் வீடு கட்டுவதற்கு மிகவும் ஏற்றது. மேலும் நீங்கள் ஒரு மூலையில் ஒரு குழி தோண்டி அதில் இரவில் தண்ணீர் ஊற்ற வேண்டும். காலையில் எழுந்ததும் தண்ணீர் முற்றிலுமாக நின்றிருப்பதை பார்த்தால் அது நல்ல அறிகுறி. இதே முறை சில பழங்கால வாஸ்து நூல்களிலும் நீர் ஆதாரத்தைக் கண்டறிய பயன்படுத்தப்படுகிறது. அதே குழியில் தண்ணீர் சேறும் சகதியுமாக இருந்தால், தண்ணீர் பாதியாக விழும். நீர் முழுவதுமாக பூமியால் மூடப்பட்டிருந்தால், நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அண்டஹ் இடத்தில் தண்ணீர் இருக்காது..
வடிவம்: வீடு கட்டப்போகும் இடம் உருண்டையாக இருந்தால், வீடு கட்டி குடியிருந்தால், ஏழை ஆக வாய்ப்புள்ளது. ஒரு தீய அம்சத்தில் வாழ்பவர்கள் மிகவும் சோகமான சூழ்நிலைக்கு தள்ளும். முக்கோணப் பகுதியில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு சிவில் வழக்குகள் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். அதனால் வீடு கட்டி வசிக்கும் இடம் சதுரமாகவும் செவ்வகமாகவும் இருக்கவேண்டும். நம் அனைவரின் வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். வசிக்கும் வீட்டில் உள்ள மேடு பள்ளங்களே ஒருவரின் ஏற்றத்தாழ்வுகளை நிர்ணயிக்கின்றன. வாஸ்து சரியாக இருந்தால் வெற்றியும் தேடி வரும். ஒருவரை கோடீஸ்வரர் ஆக மாற்றுவதே மேடுபள்ளங்கள் என்கின்றன.
திசைகள்: வடமேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் கட்டப்படும் வீடுகள் தீக்குளிக்கும் என்று புருகமஹர்ஷி கூறினார்.வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருப்பது நல்லது. வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது. வீடு கட்ட கடைக்கால் தோண்டும் போது முதலில் ஈசானியத்தில் ஆரம்பித்து கடைசியில் தென்மேற்கே தோண்டி முடிக்க வேண்டும். வீடு கட்டுமானப் பணியின் போது முதலில் தென்மேற்கில் ஆரம்பித்து ஈசானியத்தில் முடிக்க வேண்டும்.
வீட்டிற்குள் நுழையும் நேரம்: வாஸ்து சாஸ்திரத்தின் படி, புதிய வீட்டிற்குள் நுழைபவர்கள் மதியத்திற்குள் இந்த திட்டத்தை முடிக்க வேண்டும். மதியத்திற்கு பிறகு வீட்டிற்குள் நுழைந்தால்.. அந்த வீட்டில் கெட்டது நடக்கலாம். மேலும் செல்வத்தை விரும்புபவர்கள் அந்தி மற்றும் இரவு நேரங்களில் இவற்றை செய்யக்கூடாது. இரவில் புதிய வீட்டிற்குள் நுழைவது அல்லது அஸ்திவாரம் அமைப்பது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். மேலும் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது புதிய வீட்டிற்குள் நுழையக் கூடாது. அவ்வாறு செய்தால் கருச்சிதைவு அல்லது வீட்டிற்கு தீங்கு விளைவிக்கும். அவ்வாறு செய்ய வேண்டியிருந்தால், பிரசவம் முடிந்து 5 மாதங்களுக்குப் பிறகு புதிய வீட்டிற்குச் செல்லுங்கள். விஷ்ணு கோவில்களின் பின்புறம், பரமேஸ்வரர் முன், சக்தி கோவில்களுக்கு அருகில், தெரு முனைகளில் வீடுகள் கட்டக்கூடாது.
மூன்று இடங்கள் நீங்கள் கட்டும் வீட்டில் மூன்று கதவுகள், மூன்று படுக்கைகள், மூன்று விளக்குகள் மற்றும் மூன்று ஜன்னல்கள் இருந்தால், அந்த வீட்டில் சோகம் எழும். மேலும் வீட்டில் தண்ணீர் கிழக்கு திசையில் செல்வது நல்லது. வடக்கு திசையில் செல்வது பொருளாதார ரீதியாக நன்மை தரும். மேற்கு, தெற்கு திசையில் தண்ணீர் பாய்ந்தால்.. நஷ்டம் ஏற்படும். அதேபோல் நீங்கள் கட்டும் நிலம் தெற்கு மற்றும் மேற்கில் உயரமாக இருந்தால் அது சுபமே. கிழக்கு மற்றும் வடக்கு திசை எப்போதும் ஆழமாக இருக்க வேண்டும். வீடு கட்டும் இடத்தில் பெரிய மரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் துளசி மரம் இருக்கலாம். முடிந்தவரை இந்த வாஸ்து குறிப்புகளை பின்பற்றினால் வறுமைகள் நீங்கி வளமுடன் சந்தோஷமாக வாழலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்..



Click it and Unblock the Notifications











