Latest Updates
-
செஃப் தாமு ஸ்டைல் பருப்பு ரசம் - 5 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க... -
May 2026 Monthly Horoscope: மே மாதம் ராஜவாழ்க்கை வாழப்போற 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்து மாற்றங்கள்: ஏப்ரல் 24-ல் இந்த சின்ன மாற்றத்தை செஞ்சா பணமழை கொட்டுமா? -
ஆண்களே! உங்க விந்துவை கெட்டிபடுத்தணுமா? அப்ப இந்த டாக்டர் சொல்ற 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
நீல் ஆம்ஸ்ட்ராங் நிலாவிலிருந்து ரகசியமாக கொண்டுவந்த பொருட்கள் இப்ப கிடைச்சிருக்கு - அதுல என்னென்ன இருக்கு? -
12 ஆண்டுகள் கழித்து கடகம் செல்லும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு போதும் போதும் என்ற அளவுக்கு பணம் கொட்டபோகுது! -
5 பச்சை மிளகாயும், 1/4 கப் தேங்காயும் இருந்தா.. இட்லி, தோசைக்கு இப்படி சட்னி செய்யுங்க.. செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 24 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க குடும்பத்தில் பிரச்சினைகள் அதிகரிக்கும் -
சுக்கிரன் ரிஷப ராசிக்கு சென்றதால் தோல்வியையும், துரதிர்ஷ்டத்தையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் -
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்..
சமையலுக்கு தேவையான சிம்பிள் டிப்ஸ்.. இதை ட்ரை பண்ணி பாருங்க..
தற்போது அவசரமான இந்த காலத்தில் ஆண், பெண் வித்தியாசமின்றி சமைக்கின்றன. ஒருநாள் மனைவி சமைத்தால் ஒரு நாள் கணவனும் சம்மைத்துக் கொடுக்கும் சமூகத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கிறோம்.. அப்படி சமைக்கும் இந்த சமையல் ஒரு கலையாகும். இதில் சமைக்கும்போது சின்ன விஷயத்தை மறந்தால் கூட அதன் ருசி மாறிவிடும்..
பின்னர் அதனை எப்படி சரி செய்வது என்று தெரியாமல் குப்பையில் கொட்டிவிடுவோம்.. ஆனால் சமையலில் உப்போ காரமோ எது அதிகமானலும் சரி என்ன பிரச்சனையாலும் சரி அடஹ்னை உடனே சரி செய்ய இண்டஹ் பதிவில் சில முக்கியமான குறிப்புகளை பகிர்ந்துள்ளோம்..

எளிய சமையல் குறிப்புகள்
1. இட்லி கெட்டியாக இருந்தால் நாலு பச்சை அப்பளங்களை தண்ணீரில் நனைத்து மிக்சியில் ஒரு நிமிடம் ஓட விட்டு மாவில் களத்து வார்த்தால், இட்லி பூ மாதிரி இருக்கும்.
2. நாம் ஒவ்வொருவரும் சமைக்கும் போது, நிச்சயம் குழம்பு, சூப்கள் போன்றவற்றில் உப்பை அதிகமாக சேர்த்திடுவோம். இந்நேரத்தில் நீங்கள் உப்பை குறைக்க வேண்டும் என்று நினைத்தால், நீங்கள் குழம்பில் ஒரு ஸ்பூன் பால் அல்லது தயிர் சேர்க்கலாம். அல்லது நீங்கள் ஒரு உருளைக்கிழங்கை உணவில் சேர்க்கலாம். உருளைக்கிழங்கில் இருக்கும் ஸ்டார்ச், அதிகப்படியான உப்பை உறிஞ்சி, உணவை நடுநிலையாக்க உதவுகிறது.
3. பாத்திரங்கள் அடிப்பிடித்துவிட்டால், வெங்காயத்தை நறுக்கி பாத்திரத்தில் போட்டு, சிறிது நீர் ஊற்றி வேக வைத்து, பிறகு தேய்த்துக் கழுவினால் அடிப்பிடித்த சுவடே தெரியாது.
4. அரிசி குருணை உப்புமா செய்பவர்கள் சம அளவிற்கு சேமியாவை வறுத்து குருணை பாதி வெந்ததும், சேமியாவை சேர்த்து வேக வைத்து இறக்கி, அரை மூடி எலுமிச்சை பிழிந்து பாருங்கள். வித்தியாசமான சுவையுடன் கூடிய உப்புமா தயார்.
5. சமையலில் கிரேவி வகைகளில் சமைக்கும் உணவுகளில் கொஞ்சம் வேர்க்கடலையை தோல் உரித்து 20 நிமிடம் ஊற வைத்து நைசாக அரைத்து சேர்த்து பாருங்கள் ரிச்சான, செம டேஸ்டியான கிரேவி தயார்.
6. எண்ணெய் பலகாரங்கள் செய்யும் பொழுது எண்ணெய் காறல் இல்லாமல் இருக்க கொதிக்கும் எண்ணெயில் கொஞ்சம் புளியை சேர்த்து கரியவிட்டு பின் எடுத்துத் தூக்கிப் போட்டு விடுங்கள். அதன் பின்பு உணவுப் பண்டங்களை பொரித்து எடுத்தால் காறல் இருக்காது.
7. துவரம் பருப்பை வேக வைக்கும் போது, ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேகவைத்தால், சாம்பார் இரவு வரை கெடாமல் இருக்கும்.
8. அடை மற்றும் வடை மாவில் தண்ணீர் அதிகமாகிவிட்டால், ஒன்றிரண்டு டீஸ்பூன் கார்ன் பிளாக்ஸை பொடித்து சேர்த்தால் உடனடியாக ஊறி மாவு கெட்டியாவதுடன் சுவையும் அபாரமாக இருக்கும்.
9. முறுக்கு பிழிய மைதா மாவை தண்ணீர் ஊற்றி பிசையாமல், நீராவியில் வேக வைத்து எடுத்து தேவைக்கு ஏற்ப உப்பு மற்றும் நெய் கூடுதலாக கலந்து பிசைந்து முறுக்கு பிழிந்து பாருங்கள் கரகரப்பாக, டேஸ்ட்டியாக இருக்கும்.
10. அடுத்து நாம் சமையலில் செய்யக்கூடிய பெரிய தவறு என்றால் உணவில் காரத்தை அதிகமாக சேர்ப்பது தான். நம்மை அறியாமலே சில நேரங்களில் மிளகாய் பொடியை அதிகமாக சேர்த்துவிடுவோம். சமைந்த உணவை வாயில் வைக்க முடியாத அளவிற்கு காரம் இருக்கும் போது நிச்சயம் சாப்பிடாமல் தூக்கி தான் எறிவோம் . இனி இந்த நிலை உங்களுக்கு வேண்டாம். குழம்பில் அதிக காரமாகிவிட்டால், நீங்கள் அதில் பால் சேர்த்துக்கொள்ளலாம். பாலில் உள்ள கேப்சீன் சத்துக்கள் காரத்தன்மையைக் குறைக்க உதவியாக இருக்கும்.



Click it and Unblock the Notifications