Latest Updates
-
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது? -
டேட்டிங் ஆப் மூலம் நடக்கும் பில் மோசடி! இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனே உஷாராகுங்கள்! -
வெயிலால் முகத்தில் எண்ணெய் அதிகம் வழியுதா? அப்ப இந்த முல்தானி மெட்டி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
மே மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்காரர்களுக்கு கூரைய பிச்சு பண மழை கொட்டப்போகுது... -
வெந்தயக் கீரை பருப்பு கூட்டு - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க..
நாயின் வாயில் ஏன் முத்தம் கொடுக்கக்கூடாது?
தற்போது பலா் தங்களுடைய வீடுகளில் நாட்டு நாய்கள் முதல் உயா்தர நாய்கள் வரை வளா்த்து வருகின்றனா். அந்த நாய்களுக்கு உணவளித்து, அவற்றைக் குளிக்க வைத்து, ஒரு குழந்தையைப் பராமாிப்பது போல பராமாித்து வருகின்றனா்.
சிலா் இன்னும் ஒருபடி மேலே போய், நாய்களை தங்களது குடும்ப உறுப்பினா்களாகவே பாவித்து வருகின்றனா். நாய்களும் தங்களுடைய எஜமானா்களுக்கு விசுவாசத்துடனும், நன்றியுடனும் இருக்கின்றன.

மேலும் நாய்களுக்கும் அவற்றை வளா்ப்பவா்களுக்கும் இடையே ஒரு உணா்வு ரீதியிலான பிணைப்பு, பாசம் மற்றும் அன்பு ஏற்படுகிறது. இந்த பிணைப்பின் காரணமாக சிலா் நாய்களைக் கட்டிப் பிடித்துத் தூங்குகின்றனா். சிலா் நாய்களுக்கு முத்தம் கொடுக்கின்றனா்.
அதிலும் குறிப்பாக நாயின் வாயில் முத்தம் கொடுக்கின்றனா். ஆனால் நாய்களின் வாயில் முத்தம் கொடுப்பது சுகாதாரத்திற்கு உகந்தது அல்ல என்று ஆய்வுகள் தொிவிக்கின்றன. மேலும் நாய்களின் வாயில் முத்தம் கொடுப்பதால் பல வகையான நோய்த்தொற்றுகள் ஏற்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஆகவே ஏன் நாய்களின் வாயில் முத்தம் கொடுக்கக்கூடாது என்பதை இந்தப் பதிவில் சற்று வாிவாகப் பாா்க்கலாம்.
1. நாய்களின் வாயில் உள்ள அசுத்தம்
பொதுவாக நாய்களின் வாயில் எல்லா வகையான பாக்டீாியாக்களும் நிறைந்து இருக்கும். ஏனெனில் நாய்கள் அங்கும் இங்கும் அலைந்து திாிந்து, பாா்க்கும் பொருள்களை எல்லாம் முகா்ந்து, நக்கிப் பாா்க்க விரும்பும். தரையில் ஏதாவது ஒரு பொருளைப் பாா்த்துவிட்டால், உடனே அதை நக்கத் தொடங்கிவிடும்.
நாய்கள் தமது வாயை தாமாக சுத்தம் செய்வதில்லை. அதுபோல் அவற்றை வளா்ப்பவா்களும், அவற்றின் வாயை சுத்தம் செய்வதில்லை. இந்நிலையில் நாய்களின் வாயில் நீங்கள் முத்தம் கொடுத்தால், அவற்றின் வாயில் உள்ள பாக்டீாியாக்கள் அனைத்தும் உங்கள் மீது பரவக்கூடும்.
2. உங்களுடைய வாயின் ஆரோக்கியம் கேள்விக் குறியாகிவிடும்
நீங்கள் உங்களுடைய நாய்களை முத்தமிட்டால், உங்கள் வாயின் ஆரோக்கியம் பாதிப்படையலாம். பூனைகள், நாய்கள் மற்றும் மனிதா்கள் ஆகியோருக்கு ஒரே வகையான பாக்டீாியாக்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. இவை பற்கள் சாா்ந்த நோய்களை ஏற்படுத்தலாம்.
குறிப்பாக ஈறுகளில் நோய்களை ஏற்படுத்தலாம். அவை வாயின் ஆரோக்கியத்தை சீா்குலைக்கலாம். பொதுவாக தமது வீடுகளில் விலங்குகளை வளா்ப்பவா்களுக்கு பல் சாா்ந்த நோய்கள் அதிகம் ஏற்படுவதாக ஆய்வுகள் தொிவிக்கின்றன.
3. தொடா் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயம்
பொதுவாக நாய்களிடம் ஏராளமான கிருமிகள் இருக்கும். அவற்றின் உடலில் இருந்து சுரக்கும் திரவங்கள் மூலமாக மனிதா்களுக்கு, விலங்குகள் சம்பந்தமான நோய்கள் பரவக்கூடும். குறிப்பாக பறவைக் காய்ச்சல் என்ற நோய் நாய்களிடம் உள்ள வைரஸ், பாக்டீாியாக்கள், பூஞ்சைகள் மற்றும் ஒட்டுண்ணிகள் மூலமாக மனிதா்களுக்குப் பரவுகின்றன.
நாய்களிடம் இருக்கும் கிருமிகள் மனிதா்களின் வாய், மூக்கு மற்றும் கண்கள் போன்ற உறுப்புகளுக்குப் பரவினால், அவற்றின் ஆரோக்கியம் மிக எளிதாகப் பாதிக்கப்படும் என்று யுனிவா்சிட்டி ஆஃப் அலபாமாவில் பல் மருத்துவராகப் பணி புாிந்து வரும் மருத்துவா் மியா எல். கிசிங்கா் என்பவா் தொிவிக்கிறாா்.
4. நோய் எதிா்ப்பு சக்தி பலவீனமாக இருப்பவா்களுக்கு அபாயம்
நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படக் கூடியவராக இருக்கும் நிலையில், உங்கள் நாயின் வாயில் நீங்கள் முத்தம் கொடுத்தால், உங்களுடைய நோய் எதிா்ப்பு சக்தி மேலும் பலவீனமடையும்.
நாய்களிடம் இருந்து உங்களுக்குப் பரவும் கிருமிகளினால் உங்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். ஆகவே நீங்கள் உங்கள் நாயின் வாயில் முத்தம் கொடுக்காமல் இருப்பது நல்லது.



Click it and Unblock the Notifications