Latest Updates
-
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சிக்கனின் விலை 2.5 லட்சம், மீனின் விலை 5 லட்சம் - உலகின் காஸ்டலியான அசைவ உணவுகள் - ஷாக் ஆகாதீங்க -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. அக்டோபர் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
பொறிச்ச குழம்பு - இத ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் வெச்சு சாப்பிடலாம்.. -
சாதம் சாப்பிட்டும் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த ட்ரிக்கை ஃபாலோ பண்ணுங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் வாழைக்காய் பொடிமாஸ் ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும
பூனையை விட ஏன் நாய்களே சிறந்தது என்பதற்கான காரணங்கள்!!!
நாய்கள் பூனைகளை விட சிறந்ததா அல்லது பூனைகள் சிறந்தவையா? இந்த விவாதம் எப்போதும் இருந்து வரும் ஒன்று என்பதுடன் இது தொடர்கதையும் கூட. அனைவரின் எண்ணமும் ஒன்றுபோல் இருப்பதில்லை என்பதால் இதற்கு முடிவே கிடையாது. இது எல்லாம் தேவைகளையும், ஒருவருடைய சிந்தனைகளையும் பொறுத்து அந்தந்த சூழ்நிலைகளில் எடுக்கப்படும் முடிவு.
நம் வீட்டுச் செல்லப் பிராணிகளின் சில இரகசிய மொழிகள்!!!
எனினும், சில விஷயங்கள் பூனைகளைக் காட்டிலும் நாய்களுக்குச் சாதகமாக இருக்கின்றன என்பதுடன் அதற்கான காரணங்களும் மிகவும் வித்தியாசமாக இருக்கின்றன. பூனைகள் நாய்களை விட குறைவானவை என்று பொருள் அல்ல. உங்கள் செல்லப்பிராணிகளிடம் சில குணாதிசயங்களை விரும்பினால் அதற்கான காரணங்களையும் உங்கள் தரப்பு வாதங்களையும் நீங்கள் பொதுவாக வைத்திருப்பீர்கள்.
குரைக்கும் நாயை அமைதிப்படுத்த சில வழிகள்!!!
சரி, நாய்கள் ஏன் பூனைகளை விடச் சிறந்தவை? இதற்கான காரணங்கள் பூனை விரும்பிகளுக்கு வித்தியாசமாகவும், நாய் விரும்பிகளுக்கு பெருமையாகவும் இருக்கும்.
செல்ல நாய்கள் தன் வாலை ஆட்டுவதற்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா?

விளையாட்டுத் துணை
நாய்கள் எப்போது ஒரு உற்ற தோழனாகப் பார்க்கப்படுபவை. நீங்கள் விளையாடுவதற்கு ஒரு துணையைத் தேடினால், நாய்கள் அதில் பூனைகளைக் காட்டிலும் அதிகம் விரும்பப்படும். ஒரு பூனை எப்போதாவது தன் எஜமானருடன் பந்தை பிடித்து விளையாடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு நாய் எப்போதும் தன் எஜமானருடன் இருப்பதுடன் மகிழ்ச்சியுடன் விளையாடவும் செய்யும். வளர்ந்தவர்களானாலும் சரி, குழந்தைகளானாலும் சரி. நாய் ஒரு நல்ல நண்பன்.

நடைப் பயிற்சித் தோழன்
உங்கள் நடைப் பயிற்சிக்கு ஆள் தேவையா? உங்களிடம் ஒரு நாய் இருந்தால் அதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளவே தேவையில்லை. நாய்க்கு தினமும் நடைப் பயிற்சி வேண்டும் என்பது மட்டுமல்லாமல், அது உங்களுடன் எங்கு வேண்டுமானாலும் துணையாக வருவதற்கு மகிழ்ச்சியுடன் காத்திருக்கும்.

உடல்நல ஊக்குவிப்பாளன்
இது ஒரு வித்தியாசமான காரணமாக தோன்றலாம். ஆனால் பூனைகளை ஒப்பிடுகையில் நாய்களுக்கு மிகவும் பொருந்தக்கூடிய காரணம். நீங்கள் நாய் வைத்திருந்தால், அதனை தினமும் நடைபயிற்ச்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருக்கும். இந்த சாக்கில் நீங்களும் உடற்பயிற்சி செய்ய நேரிடும். நாயுடன் ஓடுவது விளையாட்டான காரியம் அல்ல. அதற்கு ஈடுகொடுக்கும் போது உங்கள் உடல் நலமும் முன்னேறுவதுடன் உங்கள் நிலைத் தன்மையும் அதிகரிக்கும்.

அவைகளை சீர்செய்ய வேண்டியிருக்கும்
தங்கள் செல்லப் பிராணிகளை சீராக வைத்திருப்பவர்களுக்கு இதுவும் ஒரு காரணம். பூனைகள் தங்களை மிகவும் நாசூக்காக வைத்துக் கொள்ளவே விரும்பும். அவற்றை கொஞ்சவோ சீப்பைக் கொண்டு அவற்றின் முடியை சீர் செய்யவோ அனுமதிக்காது. அதே சமயம் இதையெல்லாம் செய்ய ஒரு நாய் எப்போதும் ஆவலுடன் இருக்கும். எனவே நீங்கள் உங்கள் செல்லப் பிராணியை சீராக வைத்துக் கொள்ள விரும்பினால் உங்கள் தேர்வு நாயாகவே இருக்கும்.

முன்யோசனை உள்ளவை
நீங்கள் ஒரு நாயை வைத்திருந்தால் பாதுகாப்பாக உணர்வீர்கள். நாய் எப்போதும் விசுவாசத்துடன் இருக்கும் என்பதுடன், தன் எஜமானைக் காப்பதற்கு எதையும் செய்யும். உண்மையில் பல குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை நாயின் பாதுகாவலில் நம்பிக்கையுடன் விட்டுச் செல்கின்றனர்.

உங்களை தவிக்கவிடாது
துன்பம் வரும் போது முதலில் விலகி ஓடுவது பூனையாகத் தான் இருக்கும். எஜமானருக்கு என்ன ஆனது என்பதைப் பற்றி கவலைப்படாமல் தன் பாதுகாப்பை பற்றி மட்டுமே கவலைப்படும். அதே சமயம் நாய்கள் உங்களை அதுப்போன்று தவிக்க விடாது. அது உங்களுடைய ஒவ்வொரு தருணத்திலும் கூடவே இருப்பதுடன், தேவைப்பட்டால் உதவியும் செய்யும்.

நல்ல காவலாளி
நாய் வைத்திருக்கும் ஒருவரிடம் பூனையை விட நாய் ஏன் சிறந்தது என்று கேட்டுப் பாருங்கள். அவை நல்ல காவலாளி என்ற பதில் நிச்சயம் வரும். நீங்கள் வீட்டில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அது எப்போதும் காவல் காத்துக் கொண்டே இருக்கும். உங்களுடைய பொருட்களை எல்லா சமயங்களிலும் நன்கு பார்த்துக் கொள்ளும்.

குறிப்பு
இவையெல்லாம் நாய் பூனையை விடச் சிறந்தது என்பதற்கான வித்தியாசமான காரணங்களாக இருந்தாலும், இந்த விவாதம் இதோடு முடிவதில்லை. இதே காரணங்களுக்காகவே பூனை வளர்ப்பவர்கள் நாய்களை விரும்பாமலும் போகலாம். இதெல்லாம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் தேர்வு என்பதுடன் பூனை மற்றும் நாய் வளர்ப்பவர்கள் அவற்றை வளர்ப்பதற்கு அவர்களுக்கே உண்டான காரணங்களை வைத்திருப்பார்.



Click it and Unblock the Notifications
