For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாய் குட்டிகளை பராமரிப்பதற்கான 10 டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

விலங்குகள் என்றால் அனைவருக்கும் பிரியம்தான். அவைகள் எப்பொழுதும் நமது வாழ்கைக்கு ஒரு அர்த்தம் கொடுக்கும். விலங்குகள் மேல் பிரியம் கொண்டவர்கள் கண்டிப்பாக ஏதேனும் ஒரு விலங்கை தங்களுடன் வைத்திருப்பார்கள். பொதுவாக நாய் அல்லது நாய் குட்டியையே மக்கள் செல்லப் பிராணியாக வைத்திருப்பர். நாய் மனிதர்களின் உற்ற நண்பன் என்று அழைக்கப்படும் விலங்காகும். அவை உங்கள் வீட்டை மட்டுமல்ல உங்களையும் இளைப்பாற செய்து மகிழ்விக்கின்றது. தினசரி கவலைகளின் காரணமாக ஏற்படும் சோர்வுகள் உங்கள் நாய் குட்டியுடன் விளையாடுகையில் காணாமல் போய்விடுகிறது. இவ்வாறு இருப்பது உங்களுக்கு அணைப்பாகவும் சௌகரியமாகவும் இருக்கும். உங்கள் பிள்ளைகளுக்கும் இவைகளுடன் விளையாடி அவைகளையும் நன்பர்களாக்கிக்கொள்வர். உங்கள் நாய் குட்டி வீட்டின் ஒரு அங்கத்தினராகவே மாறி விடுகிறது. இவை எல்லாம் செய்யும் நாம் அவைகளை நல்ல முறையில் சுகாதாரத்துடன் பராமரிப்பதும் மிக அவசியமாகும்.

நாய் குட்டிகளைப் பராமரிப்பது சற்றே கடினமாயினும், கொஞ்சம் நேரம் செலவழித்தால் உங்கள் செல்ல பிராணியை சிறப்பாக பராமரிக்கலாம். அவைகள் உங்கள் செல்ல பிராணியாக இருப்பதால் அவைகளுக்கு ஏதும் தவறாக நடக்க நீங்கள் விரும்ப மாட்டீர்கள். இப்படி இருக்கையில் நாய் குட்டிகளைப் பராமரிப்பது எப்படி என்று சில டிப்ஸ்களை தெரிந்து கொள்ளுங்கள். நாய் குட்டிகளைப் பராமரிப்பது ஒன்றும் கடினமான வேலை கிடையாது. இங்கே தரப்பட்டுள்ள சில எளிய வழிமுறைகளை செயல்படுத்தினால் நீங்கள் சிறந்த பொறுப்பாளர்களாக விளங்குவீர்கள்.

உங்கள் நாய் குட்டிக்கு நீங்கள் செய்யும் உபகர்னங்களுக்கு உங்களை மிகவும் விரும்பும். ஆகையால் இங்கு குறிப்பிட்டுள்ள குறிப்புகளை செயல்படுத்தி நாய் குட்டியை சிறந்த விதத்தில் பராமரியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நல்ல நாய் குட்டியை தேர்ந்தெடுங்கள்

நல்ல நாய் குட்டியை தேர்ந்தெடுங்கள்

முதன்மையான விஷயம் ஒரு நல்ல நாய் குட்டியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தான். நாய்க் குட்டி என்று சொல்லும் போது, நமது வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்களால் அதிக நேரம் மற்றும் அதிக பணம் செலவு செய்ய முடியவில்லை என்றால் அத்தகைய குட்டிகளை தவிர்ப்பது நல்லது.

உணவு

உணவு

உங்களுக்கு ஏற்ற நாய் குட்டியை தேர்ந்தெடுத்த பின் அதை சாப்பிட வைக்கும் முறைகளை கற்றுக் கொள்ளுங்கள். அவைகளை நன்றாக பராமரிக்கும் வகையில் அதற்கேற்ற உணவை தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கு தேவையான உணவை கொடுங்கள். சில சமயம் சில உணவுகள் அதற்கு ஏற்றுக் கொள்ளாமல் போய் விடும். அவற்றை கண்டறிந்து கொடுக்காமல் இருங்கள்.

நாய் குட்டிக்கு அவசியம் தேவையானவை

நாய் குட்டிக்கு அவசியம் தேவையானவை

நாய்களுக்கு தேவையான பொருட்கள் பல உண்டு. அவை நாய்க் குட்டியை நல்ல முறையில் பராமரிக்க உதவும். உணவு பாத்திரம், சீப்பு, முடி கோதும் பிரஷ் மற்றும் கழுத்து சங்கிலி ஆகியவை இவற்றுள் சில முக்கிய பொருட்களாகும்.

அனைவருடனும் பழக விடுங்கள்

அனைவருடனும் பழக விடுங்கள்

ஒரு நாய் குட்டியின் மேல் நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள் என்று காட்ட விரும்பினால் அதை பல பேருடனும் பழக விட வேண்டும். அதனை உங்கள் குடும்பத்துடன் கொஞ்சம் கொஞ்சமாக பழக விடுங்கள். ஒருவர் ஒருவராக அறிமுகப்படுத்துங்கள். அது மெதுவாகவும் அமைதியாகவும் இருக்கும் போது இதை செய்யுங்கள். குழந்தைகளிடம் அறிமுகப்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அது குடும்பத்துடன் நன்கு பழகிய பின்பு குழந்தைகளை அதனுடன் விளையாட விடுவது எந்த வித ஆபத்தையும் நிகழ்த்தாது.

மற்ற பல பிராணிகளிடம் அறிமுகப்படுத்துங்கள்

மற்ற பல பிராணிகளிடம் அறிமுகப்படுத்துங்கள்

அடுத்தது உங்கள் வீட்டில் உள்ள வேறு சில செல்ல பிராணிகள் இருந்தால் அதையும் அறிமுகப்படுத்துங்கள். பூனை, காதல் பறவைகள் போன்றவை இருந்தால் அவைகளிடமும் அறிமுகப்படுத்துங்கள். சில சமயங்களில் அவைகளே அறிமுகப்படுத்திக் கொள்ளும். இவை எல்லாம் நேரமும் நாட்களும் செல்ல செல்ல இயற்கையாவே ஏற்படும்.

சிறந்த அக்கறை

சிறந்த அக்கறை

சில சமயங்களில் உங்கள் நாய்க்கு மிகுந்த அக்கறை தேவைப்படுகிறது. அதைக் கொடுக்க என்றும் மறவாதீர்கள். நாய்க்கு அதன் இருப்பிடம் மிகவும் அவசியமானது. அவைகளின் தேவைகளை புரிந்து அவற்றை கொடுக்கவும்.

மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்

மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள்

இச்செயலை தொடர்ச்சியாக செய்தல் மிக அவசியமானது. விலங்குகளின் மருத்துவரை சந்திப்பது மிகுந்த நன்மைகளை தரும். உங்கள் நாயின் தேவைகளையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெறுவதற்கு அது உதவியாக இருக்கும். இது உங்கள் நாய் குட்டியின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை வெளிப்படுத்தி அதற்கு தேவையானவற்றை செய்ய வைக்கும்.

அழகுப்படுத்துங்கள்

அழகுப்படுத்துங்கள்

நாய் குட்டியை சீர்படுத்துவது மிக சிறந்த அக்கறையை காட்டும் வழியாகும். இச்செயல் மிக முக்கியமானதாகும். நீங்கள் சிறந்த அன்பை காட்ட விரும்பினால் நாய் குட்டியை சீர்படுத்தி அழகு செய்யுங்கள். முடி கோதுவது, நகங்களை வெட்டுவது போன்ற பல காரியங்கள் இதில் அடங்கும்.

தேவை நடை பயணம்

தேவை நடை பயணம்

உங்களுக்கு உடற்பயிற்சி தேவைப்படுவது போல் நாய்க்கும் உடற்பயிற்சி தேவை. நீங்கள் நடை பயணம் செல்லும் போது நாயையும் கூட்டிச் செல்லுங்கள். இருவருக்கும் நலமாய் இருக்கும். முயன்றால் முடியாதது ஏதும் இல்லை.

மனித உணவுகளை தவிர்ப்பீர்

மனித உணவுகளை தவிர்ப்பீர்

அனைத்து விதமான மனித உணவுகளும் நாய்க்கு உகந்ததாக இருக்காது. ஆதலால் அவற்றை தவிர்ப்பது நல்லது. சாக்லேட் போன்ற பொருட்களை நாய்களிடம் இருந்து தள்ளி வைக்க வேண்டும். அவை நாய்களுக்கு விஷமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 puppy care tips

Your puppy will love you more for what you do for him. So try these puppy care tips and take care of your puppy the best way. Read on to find out how well you can take care of your puppy.
Story first published: Monday, December 9, 2013, 18:38 [IST]
Desktop Bottom Promotion