Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஆக்கிரோஷமாக நடக்கும் நாயை சாந்தப்படுத்த சில டிப்ஸ்...
நாய் வளர்ப்பது பலரின் விருப்பமாகும். பல விதமான நாயை வாங்கி வளர்ப்பதும் உண்டு. ஆனால் நாயை வாங்கி விட்டால் மட்டும் போதுமா? குழந்தையை பெற்றால் மட்டும் போதுமா, அதனை நல்ல முறையில் வளர்க்க வேண்டாமா என்று பெரியவர்கள் அடிக்கடி சொல்வதை நாம் கேட்டிருப்போம். இது மனிதருக்கு மட்டும் அல்ல நாய்க்கும் தான். ஆகவே வளர்க்கும் நாயை கண்ணும் கருத்துமாய் பார்த்துக் கொள்வது நம் கடமை.
நாம் அனைவருமே பயமுறுத்தப்படும் போது சிறிதளவு சிடுசிடுப்புக்கு உள்ளாவோம். நாய்கள் மட்டும் இதற்கு விதிவிலக்கல்ல. நாய்கள் தங்கள் உடல், இடம் மற்றும் உணவு, விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றிற்கு ஆபத்து ஏற்பட்டால், உடனே அது கோபமாக, ஆக்கிரோஷமாக செயலாற்றும். நாய்கள் ஆபத்து வர வேண்டும் என்றில்லை, வரப்போகிறது என்று எண்ணி விட்டாலே அது விழித்துக் கொள்ளும். ஆனால் அதற்காக எதாவது ஒரு விலங்கினம் நாயை கடந்தாலோ அல்லது எந்த ஒரு அந்நிய மனிதர் நாயை அணுகினாலோ, அது குரைக்கவோ அல்லது பாயவோ முற்பட்டால், அவ்வாறு முரட்டுத்தனமாக நடப்பதை தவிர்க்க உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்.
இப்போது அவ்வாறு தாக்குவதற்கு தயாராக இருக்கும் நாயை சாந்தப்படுத்த சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

குட்டியிலேயே நன்கு பழக விடவும்
நாய் இன்னும் சிறு குட்டியா? அப்படியானால் யோகம் தான். ஏனெனில் நாயை குட்டியாக இருக்கும் போதே அனைவரிடமும் பழக விடுவதே, வளர்ந்த நிலையில் ஏற்படும் மூர்க்கத்தனத்தை குறைக்கும் ஒரு வழி. நாய்க்குட்டியை பல மனிதர்களோடு பழக விட வேண்டும். பல இடங்களுக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இப்படிச் செய்வதனால் பின்னாட்களில், இந்த மனிதர்களை பார்க்கும் போதோ அல்லது புது இடங்களுக்கு செல்லும் போதோ, அது முரட்டுத்தனமாக நடப்பதில்லை.

அக்கிரோஷத்திற்கான அறிகுறிகளை கவனித்தல்
திடீரென சிலையாகுதல், ஒருவரை நேராக பார்க்காமல் ஓரக் கண்ணால் பார்ப்பது, தலையை கவிழ்ப்பது, குதிங்காலில் அமர்வது போன்ற நுட்பமான மாற்றங்கள், நாய்க்கு ஏற்படும் போது கவனிக்க வேண்டும். அப்போது உடனே அதன் கவனத்தை திசை திருப்ப வேண்டும். ஏனெனில் மேற்கூறிய அபாய அறிகுறிகள், மூர்க்கத்தனமாக மாறுவதற்கானதாகும். எனவே எப்போதும் கவனமாக இருக்கவும்.

உடல் மொழியை அறிதல்
நாயின் உடல் மொழியை வைத்தே, அது தாக்க முற்படுகிறது என்பதை கணித்து விடலாம். அதனை அடக்க நினைக்காமல், அதன் போக்கில் அதனை மாற்றலாம்.

மருத்துவரை அணுகுதல்
எப்போதும் அமைதியாக இருக்கும் நாய் மூர்க்கத்தனமாக நடக்கும் போது, ஒரு கால்நடை மருத்தவரிடம் சென்று, அதன் குண மாறுதலுக்கான மருத்துவ காரணங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இதனை எல்லாம் பின்பற்றிய பின்னரும் நாய் வெறிக் கொண்டு இருந்தால், சான்றிடப்பட்ட நாய் பயிற்சியாளரை அணுகவும்.

அடிக்காமல் புரிய வைத்தல்
நாயின் மூர்க்கத்தனமான குணத்தை தடுக்க, அதை அடித்து திருத்த வேண்டும் என்று நினைக்கக்கூடாது. இந்த செய்கை, அதனை கண்டிப்பாக மாற்றாது. மாறாக அதன் எரிச்சலை அதிகரித்து, இன்னும் ஆபத்தை தான் விளைவிக்கும்.

உடற்பயிற்சியில் ஈடுபடுத்துதல்
தினசரி உடற்பயிற்சியில் நாயை ஈடுபடுத்தினால், நாய்க்கு பல விதத்தில் அது நன்மையில் முடியும். உடற்பயிற்சியினால் அதன் ஆற்றல் அதிகரித்து, உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும். மேலும் அதிகப்படியாக இருக்கும் ஆற்றல், எரிசக்தியை குறைக்கவும் செய்யும். இதனால் நாயின் மூர்க்கத்தனமும் குறையும்.



Click it and Unblock the Notifications