Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
வீட்டில் சிக்கன் சமைக்கும் போது இந்த தவறுகளை தெரியாம செஞ்சுராதீங்க... இல்லனா குப்பையில்தான் கொட்டணும்...!
மென்மையான மற்றும் சுவையான கோழிக்கறியை விரும்பாதவர்கள் யார்? இந்திய சமையலறைகள் பெரும்பாலும் சைவ உணவுகளால் ஆளப்பட்டாலும், பெரும்பாலான மக்கள் சிக்கனை விரும்புகிறார்கள். அசைவ உணவு என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது சிக்கன்தான்.
ஆனால் சிக்கன் சமைக்கும் விஷயத்தில், நம்மில் பலர் தெளிவற்றவர்களாகவும், சரியாக சமைக்காதவர்களாகவும் இருக்கிறோம். வறட்சியான, ரப்பர் போன்ற , வேகவைக்கப்படாத அல்லது அதிகமாக வேகவைக்கும் போது சிக்கன சுவையற்றதாக மாறிவிடும்.

வீட்டில் சிக்கன் சமைக்கும் போது செய்யக்கூடாத தவறுகள் என்ன மற்றும் சிக்கனை சரியாக சமைக்க என்னென்ன செய்ய வேண்டுமென்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உறையவைக்கப்பட்ட சிக்கனை வாங்குதல்
ப்ரெஷான சிக்கனை சமைக்கும் போது அது மிருதுவாக, சுவையானதாக மாறும். ஆனால் உறையவைக்கப்ட கோழியானது அதன் நீரின் உள்ளடக்கத்தை அடிக்கடி இழந்து, யாரும் விரும்பாத உலர்ந்த உணவாக மாறுகிறது.
யுனைடெட் ஸ்டேட்ஸ் டிபார்ட்மெண்ட் ஆஃப் அக்ரிகல்ச்சர் (யுஎஸ்டிஏ) வெளியிடப்பட்ட ஆய்வின் படி எப்போதும் ப்ரெஷான சிக்கனை வாங்க வேண்டும் என்றும் உறையவைக்கப்பட்ட சிக்கனை சமைக்கக்கூடாது என்று கூறுகிறது.
எலும்பை புறக்கணிப்பது
சிக்கனின் தொடை பகுதிகளில் இருக்கும் எலும்புகள் அதிக கொழுப்பு உள்ளடக்கத்தைக் கொண்டுள்ளன, அவை சமைக்கும் போது கரையும் போது கோழியின் ஈரப்பதத்தை அதிகரிக்கறது, அதே நேரத்தில் அதிக சுவையையும் தருகிறது.
எனவே அவற்றை ஒருபோதும் புறக்கணிக்காதீர்கள் மற்றும் எலும்பில்லாத கோழி துண்டுகளை விட எலும்பு உள்ள சிக்கனை சமைக்க முயற்சிக்கவும்.
சிக்கனை கழுவுதல்
சமைப்பதற்கு முன் சிக்கனைக் கழுவுவது ஒரு நடைமுறை சுகாதார நடைமுறை போல் தெரிகிறது. இருப்பினும், USDA வேறுபட்ட கருத்தை முன்வைக்கிறது. USDA அறிக்கையின் படி, "சமைப்பதற்கு முன் சிக்கனைக் கழுவுவது பரிந்துரைக்கப்படவில்லை, ஏனெனில் பச்சை இறைச்சி மற்றும் கோழிச்சாறுகளில் உள்ள பாக்டீரியாக்கள் மற்ற உணவுகள், பாத்திரங்கள் மற்றும் மேற்பரப்புகளுக்கு பரவக்கூடும். இது குறுக்கு-மாசுபாடு என்று அழைக்கப்படுகிறது.
சிக்கனைக் கழுவிய பின் மேற்பரப்புகளை திறம்பட சுத்தம் செய்து சுத்தப்படுத்தாத போது பாக்டீரியா எளிதாக பரவும். கோழியை கழுவுவது அல்லது ஊறவைப்பது பாக்டீரியாவை அழிக்காது. சமைப்பதால் மட்டுமே சிக்கனில் இருக்கும் பாக்டீரியாக்கள் அழிக்கப்படும்.
ப்ரைனிங் அல்லது மாரினேட் செய்யாமல் இருப்பது
சிக்கனை சமைக்கும் அவசரத்தில் நாம் ப்ரைனிங் அல்லது மாரினேட் போன்றவற்றை தவிர்த்து விடுகிறோம். ப்ரைனிங் என்பது கோழியை சமைப்பதற்கு முன் உப்பு நீரில் சிறிது சர்க்கரை சேர்த்து ஊறவைப்பதாகும்.
இது சிக்கனை அதிகமாக வேகவைப்பதைத் தடுக்கவும் ஈரப்பதத்தைத் தக்கவைக்கவும் உதவுகிறது. மேலும், சிக்கன் மிகவும் சுவையாக இருக்க வேண்டுமெனில், உங்கள் செய்முறையின்படி சில மசாலாப் பொருட்கள், தயிர், எலுமிச்சை சாறு அல்லது பிற பொருட்களைக் கொண்டு மாரினேட் செய்வது நல்லது.
இறைச்சியை அடிக்காமல் இருப்பது
நீங்கள் சிக்கனின் மார்பகத்தை சமைக்கப் போகிறீர்கள் என்றால், அது எவ்வளவு தடிமனாக இருக்கிறது என்பதை முதலில் கவனிக்க வேண்டும். அதை அப்படியே சமைப்பதால், வெளிப்புற அடுக்கை அதிகமாக சமைக்கலாம் அல்லது உள்ளே குறைவாக சமைக்கலாம்.
கோழியை மென்மையாக்குவதற்கும் சீரான சமையலை உறுதி செய்வதற்கும் இறைச்சியை சிறிய சுத்தியல் உதவியுடன் சிக்கன் துண்டுகளை சமமாக அடிக்க வேண்டியது முக்கியம்.
தோலை நீக்குவது
சமைத்த கோழியில் மெருகூட்டப்பட்ட கேரமலைஸ் செய்யப்பட்ட லேயர் இருப்பது அனைவருக்கும் பிடிக்கும். அதைப் பெற, சிக்கனின் தோலை நீக்காமல் இருக்க முயற்சிக்கவும். மேலும், தோல் இறைச்சியின் ஈரப்பதத்தை தக்கவைத்து, கோழியை வெளியில் மிருதுவாகவும், உள்ளே மென்மையாகவும் மாற்றும்.
சீரற்ற கோழி துண்டுகள்
உங்கள் சிக்கனை சமமான துண்டுகளாக வெட்டுவதை உறுதிசெய்து கொள்ளுங்கள், இதனால் அவை அனைத்தும் ஒரே நேரத்தில் சமைக்கப்படும், மேலும் அடுப்பிலிருந்து கடாயை எப்போது எடுக்க வேண்டும் என்பது சரியாக உங்களுக்குத் தெரியும்.
பாத்திரத்தை மூடாமல் சமைப்பது
சிக்கனை சமைக்கும் போது கடாயை எப்போதும் மூடி வைக்கவும். இதனால் நீராவி பூட்டப்பட்டு இறைச்சிக்கு ஈரப்பதத்தை அளிக்கும், இதனால் வெப்பத்தின் காரணமாக அது வறண்டு போகாது.



Click it and Unblock the Notifications
