Latest Updates
-
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
வீட்டில் கல் உப்பை ஒரு டம்ளர் நீரில் போட்டு இந்த இடத்துல வெச்சா.. பணப் பிரச்சனையே வராதாம்...
கல் உப்பு வாஸ்து குறைபாடுகளைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அந்த கல் உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.
Vastu Tips With Salt: நாம் அனைவருமே பணம் சம்பாதிப்பதற்கு தான் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கிறோம். மேலும் அனைவரது கனவும் நிறைய பணம் சம்பாதிப்பதாகவே இருக்கும். ஆனால் அப்படி கஷ்டப்பட்டு உழைக்கும் போது, அதற்கான பலன் கிடைக்காத போது ஏமாற்றம் மிச்சமாக இருக்கும். இதற்கு வாஸ்து குறைபாடும் ஓர் முக்கிய காரணம் என்பது தெரியுமா? ஆம், ஒருவர் குடியிருக்கும் வீடு வாஸ்து தோஷங்களைக் கொண்டிருந்தால், அந்த வீட்டில் உள்ளோரின் கையில் பணம் நிலைத்திருக்காது மற்றும் நிறைய பணப்பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வாஸ்து தோஷங்களை நீக்குவதற்கு வாஸ்து சாஸ்திரத்தில் பல பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் நம் வீட்டு சமையலறையில் உணவின் சுவையை அதிகரிக்க பயன்படுத்தும் உப்பு. அதுவும் கல் உப்பு வாஸ்து குறைபாடுகளைப் போக்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது அந்த கல் உப்பை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பதைக் காண்போம்.

பணப்பற்றாக்குறை நீங்க...
நீங்கள் பணப் பற்றாக்குறையை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் வாஸ்துப்படி ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்து, அதில் கல் உப்பை நிரப்பி வீட்டில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் பணப்பற்றாக்குறை நீங்குவதோடு, வீட்டில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும்.

வீட்டில் நிறைய பணம் சேர...
உங்கள் வீட்டில் நிறைய பணம் சேர வேண்டுமா? அப்படியென்றால் ஒரு கண்ணாடி பௌலில் சிறிது கல் உப்பை எடுத்து, அத்துடன் 4-5 கிராம்புகளை போட்டு, வீட்டின் ஒரு மூலையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் வீட்டில் பணம் அதிகம் சேர்வதோடு, எப்போதும் செழிப்பாக இருக்கும். மேலும் வீட்டின் சூழல் அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

எதிர்மறை ஆற்றல் வெளியேற...
வீட்டில் உள்ள வாஸ்து குறைபாடு நீங்க வேண்டுமானால், குளியலறையில் ஒரு கண்ணாடி டம்ளரில் நீரை நிரப்பி, அதில் சிறிது கல் உப்பைப் போட்டு ஒரு மூலையில் வைக்க வேண்டும். இப்படி செய்வதனால் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் நீங்கி, மகிழ்ச்சி பெருகும். ஆனால் இந்த கண்ணாடி டம்ளரை யாரும் தொட முடியாத இடத்தில் வைக்க வேண்டும். வாரம் ஒருமுறை நீரை மாற்ற வேண்டும்.

திருமண வாழ்வில் உள்ள பிரச்சனை குறைய...
உங்கள் திருமண வாழ்வில் நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறீர்களா? அப்படியானால் ஒரு சிறு கண்ணாடி டம்ளரில் கல் உப்பை நிரப்பி, அதை 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றிக் கொண்டே இருங்கள். இது உறவில் இனிமையை ஏற்படுத்தும்.

குறிப்பு:
வாஸ்து சாஸ்திரத்தின் படி, சமையலறையில் வைக்கும் உப்பை ஸ்டீல் பாத்திரங்களில் வைத்து பயன்படுத்தக்கூடாது. எப்போதுமே உப்பை கண்ணாடி பாட்டில் அல்லது பீங்கான் பாத்திரத்தில் தான் வைத்து பயன்படுத்த வேண்டும். ஸ்டீல் பாத்திரத்தில் உப்பை வைத்து பயன்படுத்தினால், வீட்டின் அமைதி பாதிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications