Latest Updates
-
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
பொரி மிச்சமிருந்தா இந்த மாதிரி மொறுமொறுனு வடை சுடுங்க - டீ, காபியோட சாப்பிட சூப்பரா இருக்கும் -
லென்ஸ் போட்டிருக்கீங்களா? இந்த தவறுகளை செய்யாதீங்க.. பார்வைக்கே ஆபத்தாயிடும் - எச்சரிக்கும் கண் டாக்டர்! -
பாபா வங்கா கணிப்பு படி 2027-ல் உலகத்தில் நடக்கப்போகும் மாற்றங்களும், அழிவுகளும் - ஷாக் ஆகாதீங்க -
நவம்பரில் சிம்ம ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டி பறக்கப்போறாங்க.. -
நாயர் கடை வெங்காய சட்னி - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
அக்டோபர் 21, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் அடிக்கப்போகுதாம் -
புதன் உதயத்தால் தொழில் வாழ்க்கையில் புதிய உச்சத்தை தொடப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
November Matha Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. நவம்பர் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
மாவுப் பொருட்கள் நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க சில டிப்ஸ்..!
மாவு விரைவில் கெட்டுப்போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. முறையாக மாவை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்தால் மாவு நீண்ட காலத்திற்கு கெடாமல் இருப்பதோடு, அது புதிதாகவும் இருக்கும்.
கோதுமை மாவு முதல் சுத்திகாிக்கப்பட்ட மாவு, கேழ்வரகு மாவு மற்றும் ஓட்ஸ் மாவு வரை பலவிதமான மாவு வகைகள் சந்தைகளில் கிடைக்கின்றன. கோதுமை மாவு அல்லது ஆட்டா இந்திய மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் கோதுமை மாவில் செய்யப்படும் சப்பாத்தி இந்திய மக்களின் முக்கிய உணவாக இருக்கிறது.

மாவு விரைவில் கெட்டுப்போகுமா என்பதில் பலருக்கும் சந்தேகம் உள்ளது. முறையாக மாவை பத்திரப்படுத்தி பாதுகாப்பாக வைத்தால் மாவு நீண்ட காலத்திற்கு கெடாமல் இருப்பதோடு, அது புதிதாகவும் இருக்கும். மாவை பாதுகாப்பாக பத்திரப்படுத்தி வைக்க சில முக்கிய குறிப்புகளை இங்கு பாா்க்கலாம்.

மாவை பத்திரப்படுத்தி வைக்க முக்கிய குறிப்புகள்:
காற்று புகாத பாத்திரங்களில் மாவை இட்டு அதை சரக்கு வைக்கும் அறைகளில் வைக்கலாம். இறுக்கமான மூடி கொண்ட உலோக பாத்திரங்களில் மாவை போட்டு வைக்க வேண்டும். மூடி இறுக்கமாக இருப்பதால் எளிதில் பூச்சிகள் பாத்திரத்திற்குள் நுழைய முடியாது.

மஞ்சள், இஞ்சி
அதிக அளவு மாவை வாங்கும் போது அவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குளிரான பகுதிகளில் பத்திரப்படுத்தி வைக்கலாம். பலா் மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் மஞ்சள் அல்லது இஞ்சி ஆகியவற்றைப் போட்டு அதன் மூலம் மாவில் பூச்சிகள் ஊடுருவாத வண்ணம் தடுக்கின்றனா்.

பிரியாணி இலைகள், கிராம்பு
பூச்சிகள் மாவை தாக்காமல் இருக்க மாவு இருக்கும் பாத்திரங்களுக்குள் பிரியாணி இலைகளைப் போட்டு வைக்கலாம். அதாவது 3 அல்லது 4 பிரியாணி இலைகளை போட்டு வைத்தால் மாவை பூச்சிகள் தாக்காது. மேலும் மாவு இருக்கும் பாத்திரங்களைச் சுற்றி கிராம்புகளைத் தூவலாம். அதன் மூலம் பூச்சிகள் அண்டாமல் மாவை பாதுகாக்கலாம்.

நீண்ட நாட்கள் மாவு கெடாமல் புதிதாக இருக்க..
நீண்ட நாட்கள் மாவு கெடாமல் புதிதாக இருக்க வேண்டும் என்றால் அதை நாம் எவ்வாறு பத்திரப்படுத்தி வைத்திருக்கிறோம் என்பதில் தான் அடங்கி இருக்கிறது. முறையாக மாவை பத்திரப்படுத்தி வைத்தால், அறையின் சாதாரண வெப்பநிலையில் 6 முதல் 8 மாதங்களுக்கு அது கெடாமல் இருக்கும். குளிா்சாதனப் பெட்டியில் வைத்தால் 1 வருடத்திற்கு பாதுகாக்கலாம். அதே நேரம் குளிா்சாதனப் பெட்டியில் உள்ள உறைபனிப் பெட்டிக்குள் வைத்தால் 2 ஆண்டுகள் வரை மாவை கெடாமல் பாதுகாக்கலாம். வெள்ளை மாவுகளில் கொழுப்பின் அளவு குறைவாக இருப்பதால் அவை நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும். முழுக் கோதுமை மாவு மற்றும் பசையம் இல்லாத மாவுகள் குறைந்த வாழ்நாட்களையே கொண்டிருக்கின்றன.

கெட்டுப்போன மாவுகளை எவ்வாறு கண்டறிவது?
மாவை நுகா்ந்து பார்த்தாலே அது நன்றாக இருக்கிறதா அல்லது கெட்டு போயிருக்கிறதா என்று கண்டுபிடித்து விடலாம். கெடாமல் நன்றாக இருக்கும் மாவிலிருந்து வரும் வாசனை அருமையாக இருக்கும். அதே நேரத்தில் கெட்டுப்போன மாவில் இருந்து ஒரு மாதிாியான கெட்ட வாசனை வரும்.
மாவைப் பாா்த்ததும் அது நன்றாக இருக்கிறதா அல்லது கெட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கலாம். மாவில் ஈரப்பதம் இருந்தால் அவற்றில் கட்டிகள் உருவாகும் மற்றும் பூஞ்சைகள் உருவாகும். அவ்வாறு கட்டிகள் மற்றும் பூஞ்சைகள் இருந்தால் அந்த மாவு கெட்டுப்போன மாவு ஆகும். மாவை வாங்கும் போது அதன் ஆயுட்காலத்தைப் பாா்த்து வாங்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
