Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
சீன வாஸ்து சாஸ்திரப்படி இந்த பொருட்கள் வீட்டில் இருந்தால் செல்வம் பெருகுமாம்... ட்ரை பண்ணி பாருங்க..
எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
ஃபெங் சூயி என்பது ஒரு பழங்கால சீனக் கலையாகும். இது கட்டிடங்கள், பொருள்கள் மற்றும் இடத்தை ஒரு சூழலில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் அடையச் செய்கிறது. சுருக்கமாக கூற வேண்டுமானால், சீனாவின் வாஸ்து சாஸ்திர முறை தான் ஃபெங் சூயி. இந்த ஃபெங் சூயி மூலம் ஒருவரின் வாழ்வில் பலவிதமான நல்ல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்.

எப்படி இந்திய வாஸ்து சாஸ்திரப் படி, வீட்டில் இருக்கும் பொருட்கள் அந்த வீட்டில் உள்ளோரின் வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமோ, அதேப் போல் ஃபெங் சூயி படி வைக்கும் பொருட்களும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது. முக்கியமாக வாஸ்து தோஷத்தில் இருந்து விடுபட ஃபெங் சூயி உதவும். இப்போது ஃபெங் சூயி படி எந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், செல்வம் பெருகுவதோடு, தொழிலில் முன்னேற்றமும் வெற்றியும் கிடைக்கும் என்பதைக் காண்போம்.

சிரிக்கும் புத்தர்
ஃபெங் சூயி முறையில், சிரிக்கும் புத்தர் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. அதனால் சிரிக்கும் புத்தரை வீட்டின் ஹால், படிக்கும் அறை, அலுவலகம் என அனைத்து இடங்களிலும் வைப்பது நல்லது. இப்படி வைப்பதன் மூலம் வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலவும் என்பது நம்பிக்கை.

உலோக ஆமை
ஃபெங் சூயி படி, உலோக ஆமையை வீட்டில் வைத்திருப்பது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் வீட்டில் ஆமையை வைத்திருந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம். அதே வேளையில் ரகசிய எதிரிகளை வெல்லும் ஆற்றலும் கிடைக்கும். வீட்டில் செல்வம் பெருக வேண்டுமானால், உலோக ஆமையை வடக்கு திசையில் தண்ணீர் நிரப்பப்பட்ட ஜாடியில் வையுங்கள். ஏனென்றால் வடக்கு பகுதி குபேரனின் இருப்பிடமாகும்.

சீன நாணயங்கள்
ஃபெங் சூயியில் சீன நாணயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதுவும் இந்த நாணயங்களை பணம் வைக்கும் இடத்தில் வைத்திருக்க வேண்டும். இப்படி வைப்பதன் மூலம் வீட்டின் வருமானம் அதிகரித்து, செல்வம் பெருகும் என்று நம்பப்படுகிறது. அதோடு இந்த நாணயங்கள் வீட்டின் தேவையற்ற செலவுகளைக் குறைப்பதாகவும் நம்பப்படுகிறது.

வீட்டின் முன் மணிகள்
ஃபெங் சூயி படி, வீட்டின் பிரதான கதவு அல்லது ஜன்னல் அருகே மணிகளை தொங்க விடுவது நல்லதாக கருதப்படுகிறது. ஏனெனில் காற்றினால் இந்த மணிகளில் இருந்து வெளிவரும் ஒலியின் காரணமாக வீட்டின் சூழல் எப்போதும் நேர்மறையாக இருக்கும். அதோடு வாஸ்து தோஷங்களில் இருந்தும் விடுதலை கிடைக்கும்.

உலோக பிரமீடு
ஃபெங் சூயி படி, வீட்டின் வடக்கு திசையில் உலோக பிரமீட்டை வைப்பது நல்லதாக கருதப்படுகிறது. ஒருவரது வீட்டில் இந்த உலோக பிரமீடு இருந்தால், அது வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை அழித்து, வீட்டின் நிதி நிலையை மேம்படுத்துவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த பிரமீடை வைப்பதற்கு முன் இதை கங்கை நீரால் சுத்திகரிக்க வேண்டும்.

காதல் பறவை சிலை
ஃபெங் சூயி படி, அன்பின் சின்னங்களாக கருதப்படும் காதல் பறவை சிலைகளை வீட்டில் வைத்திருப்பது நல்லது. இந்த சிலை ஒருவரது வீட்டில் இருந்தால், அது கணவன்-மனைவி இடையேயான சண்டைகளை போக்கி, தம்பதிகளுக்கு இடையே அன்பை அதிகரிக்கும். அதுவும் இந்த சிலையை வீட்டின் படுக்கையறையில் வைக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications