Latest Updates
-
12 ஆண்டுகள் கழித்து கடகத்தில் நிகழும் குரு-சந்திர சேர்க்கை: இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்.. -
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது!
இந்த பொருட்களை வீட்டின் இந்த இடத்தில் வைத்தால் தான் செல்வம் பெருகுமாம்... ஒரு டைம் ட்ரை பண்ணி பாருங்க...
சின்னஞ்சிறு அலங்கார பொருட்கள் கூட வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்துவிடும் என்கின்றன உண்மை உங்களுக்கு தெரியுமா? ஆம், அதை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்...
பாரம்பரிய இந்திய கட்டிட கலையில் வாஸ்து சாஸ்திரம் ஓர் இன்றியமையாத இடத்தை வகிக்கிறது. பொதுவாக ஒரு வீடு கட்டுவதற்கு முன்பு வாஸ்து பார்ப்பது ஓர் முக்கிய செயலாக இருக்கிறது. அதுவும் தற்காலத்தில், எதற்கெடுத்தாலும் வாஸ்து பார்ப்பதை பழக்கமாகவே கொண்டிருக்கின்றனர். இதை நம்பலாமா, இல்லை கூடாதா என்ற கேள்வி நிறைய பேர் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. ஆனால், வாஸ்து பார்ப்பதினால் நிறைய பலன் கிடைக்கும் என்பது வாஸ்துவினால் பலன் பெற்றோரின் கருத்து.

வாஸ்து பார்த்து ஒரு சிறு மாற்றத்தை செய்வதன் மூலம் பெரும் பலனை பெறலாம் என்றால் அதனை செய்வதில் தவறென்ன? சிறு சிறு மாற்றங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்து, வீட்டில் செல்வ செழிப்பை உண்டாக்குகிறது. சின்னஞ்சிறு அலங்கார பொருட்கள் கூட வீட்டின் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க செய்துவிடும் என்கின்றன உண்மை உங்களுக்கு தெரியுமா? ஆம், அதை பற்றி தான் இந்த பதிவில் விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்... இந்த கட்டுரையில் எந்தெந்த பொருட்களை வீட்டின் எந்தெந்த இடங்களில் வைத்தால் செல்வ வளம் பெருகும் என்பதை இப்போது பார்க்கலாம்...

மீன் தொட்டி
வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சிறு மீன் தொட்டியும் முக்கிய இடம் பெறுகிறது. பொதுவாக மீன் தொட்டியை வீட்டின் படிக்கும் அறையில் வைப்பதே சிறந்தது. அதிலும், அறையின் கிழக்கு, வட-கிழக்கு அல்லது வடக்கு திசையில் வைத்திருப்பது மிகவும் சிறந்தது. இதனால் வீட்டில் எப்போதும் அமைதி நிலவும்.

பூந்தொட்டி
சிறந்த நறுமணம் மிக்க மலர்கள் அடங்கிய பூந்தொட்டிகளை வீட்டின் படிக்கும் அறையில் வைப்பதன் மூலம் வீட்டில் செல்வ வளம் அதிகரிப்பதோடு, வீட்டின் அமைதியும் மேம்படும் என்கிறது வாஸ்து சாஸ்திரம். படிக்கும் அறையை காட்டிலும் பூந்தொட்டிக்கு சிறந்த இடம் என்றால் அது வீட்டின் முன் கதவு அருகே வைப்பது தான். இதில் நீங்கள் மறக்க கூடாத ஒரு விஷயம் என்றால், தினந்தோறும் பூந்தொட்டிக்கு தண்ணீர் மற்றும் பூக்களை மாற்றியே ஆக வேண்டும்.

புத்தர் சிலை
புத்தர் என்றாலே அமைதி என்பது அனைவரும் அறிந்தது. அதிலும், வீட்டில் புத்தர் சிலையை வைப்பதன் மூலம் வீ்ட்டில் அமைதி நிலவும் என்பது நம்பிக்கை. வீட்டில் புத்தர் சிலையை வைக்கும் பொதுவான இடங்கள் படிக்கும் அறை, தோட்டம் அல்லது சமையலறை. நாம் வீட்டில் வைக்கும் புத்தர் சிலையின் அளவை பொருத்து நம் வீட்டின் அமைதியின் அளவும் மாறுபடும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.

காற்றில் ஆடும் மணிகள் (wind chimes)
வீட்டில் செல்வ வளத்தை அதிகரிக்க செய்வதற்கான மற்றொரு வழி என்றால் அது தான் வின்ட் சைம்ஸ். பொதுவாக அனைவரது வீட்டிலும் இதை காண முடியும். இதனை மாட்டுவதற்கான சரியான இடம் வீட்டின் வாசல் தான்.

ஓவியங்கள்
ஒரு சில வகை குறிப்பிட்ட ஓவியங்கள் கூட வீட்டிற்கு நல்ல அதிர்ஷடத்தை கொண்டு வரும். அவற்றில் நீர் வீழ்ச்சி ஓவியங்கள், ஓடும் நதி மற்றும் கோல்ட் ஃபிஸ் போன்றவையும் அடங்கும். பசுமையான காடுகள் மற்றும் பச்சை பசேல் வயல்வெளிகள் போன்ற இயற்கை காட்சிகளளை சித்தரிக்கும் ஓவியங்களும் மிகவும் பொருத்தமானவை.

சிறு தாவரங்கள்
உங்களுக்கு வீட்டிற்குள் வைத்து செடிகள் வளர்க்கும் ஆர்வம் கொண்டவராக இருந்தால், மணி ப்ளாண்டை தேர்வு செய்யுங்கள். இது அதிர்ஷ்டம் மற்றும் செல்வ வளத்தை ஈர்க்கும். அதிலும், மணி ப்ளாண்டை பச்சை நிற பாட்டில் அல்லது தொட்டியில், வீட்டின் வடக்கு மூலையில் வைத்து வளர்ப்பது செல்வ வளத்தை பெருக்குவதோடு, வேலை அல்லது தொழிலில் புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்கும். சிறு மூங்கில் செடிகளை வீட்டில் வளர்ப்பது கூட உங்களை செல்வந்தராக்கும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.



Click it and Unblock the Notifications
