For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க கேஸ் அடுப்பில் இருக்கும் விடாப்பிடியான கறைகளை நீக்கி புதியது போல மாற்ற இந்த சாதாரண பொருட்களே போதும்!

இந்திய சமையலறைகளைப் பொறுத்தவரை, தூய்மை முக்கிய பங்கு வகிக்கிறது,சுத்தம் இருக்குமிடத்தில்தான் கடவுளின் அருள் இருக்கும்.

|

இந்திய சமையலறைகளைப் பொறுத்தவரை, தூய்மை முக்கிய பங்கு வகிக்கிறது,சுத்தம் இருக்குமிடத்தில்தான் கடவுளின் அருள் இருக்கும். அந்த வகையில் நமது வீட்டில் அனைத்து இடங்களையும் குறிப்பாக சமையலறையை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். சமையலறையை சுத்தம் செய்வது ஒரு கடினமான பணி என்பதை நாம் நன்கு அறிவோம்.

Kitchen Ingredients for Cleaning a Gas Stove Effectively

எண்ணெய் கறை முதல் மசாலா வரை, சமையலறையில் இருக்கும் விடாப்பிடியானக் கறைகளை நீக்க அனைவருக்கும் எளிய தந்திரங்கள் தேவைப்படுகின்றன. உங்கள் கேஸ் அடுப்பை எளிதில் சுத்தம் செய்ய சமையலறையில் உள்ள சில பொருட்களே போதும். உங்கள் அடுப்பை சுத்தப்படுத்த பயன்படுத்தக்கூடிய 5 சமையல் பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க வெங்காயத்தைப் பயன்படுத்தலாம். நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், சில வெங்காயத் துண்டுகளை 20 நிமிடங்கள் வேகவைக்கவும். வேகவைத்த தண்ணீரை ஆற விடவும். இந்த தண்ணீரைப் பயன்படுத்தி ஸ்பாஞ்சு மூலம் துடைப்பதன் மூலம் உங்கள் கேஸ் அடுப்பை சில நிமிடங்களில் சுத்தமாக்கி விடலாம்.

வினிகர்

வினிகர்

சில துளிகள் வெள்ளை வினிகரை அழுக்கு மீது ஊற்றுவது பல அதிசயங்களைச் செய்யும். வினிகரை சிறிது நேரம் அழுக்கின் மீது ஊற அனுமதிக்கவும், பின்னர் மசாலாக் கறைகளை அகற்ற ஒரு ஸ்பாஞ்சை பயன்படுத்தவும். சிறப்பான முடிவுகளுக்கு நீங்கள் வினிகரில் சிறிது பேக்கிங் பவுடரை ஊறவைக்கலாம்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

கேஸ் அடுப்புகளை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான மூலப்பொருள் பேக்கிங் சோடா ஆகும். எலுமிச்சை சாறு அல்லது வெள்ளை வினிகருடன் கலக்கப்ட்டால், அது எரிவாயு அடுப்புகளை சுத்தம் செய்யும் போது அது பயனுள்ள முடிவுகளை அளிக்கிறது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சம்பழத்தோல் மற்றும் சாறு இரண்டும் எரிவாயு அடுப்புகளை சுத்தம் செய்ய நன்றாக வேலை செய்கிறது. பாத்திரம் கழுவும் திரவம் அல்லது பேக்கிங் சோடாவுடன் கலக்கும்போது, ​​அது மேற்பரப்பில் இருந்து அழுக்கு மற்றும் கறைகளை அகற்ற உதவுகிறது மற்றும் பளபளப்பான கேஸ் அடுப்பை பெற உதவுகிறது.

டிஷ் திரவம்

டிஷ் திரவம்

கேஸ் அடுப்புகளை சுத்தம் செய்ய இந்திய சமையலறைகளில் தினமும் பயன்படுத்தப்படும் மிகவும் பிரபலமான பொருட்களில் இதுவும் ஒன்றாகும். ஒரு பஞ்சில் சிறிது திரவத்தை தடவி, தூசி மற்றும் அழுக்குகளை அகற்ற நன்கு அழுத்தி ஸ்க்ரப் செய்யவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kitchen Ingredients for Cleaning a Gas Stove Effectively

Check out the common kitchen ingredients for expertly cleaning a gas stove.
Story first published: Tuesday, January 31, 2023, 18:45 [IST]
Desktop Bottom Promotion