Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
வீட்டுக்கு வரப்போற பிரச்சனையை மணி பிளாண்ட் வெச்சே கண்டுபிடிக்கலாம் தெரியுமா? எப்படி-ன்னு பாருங்க...
வீட்டின் அழகை மேம்படுத்தும் பல்வேறு செடிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மணி பிளாண்ட். வாஸ்துப்படி மணி பிளாண்ட் செடியானது, அதன் பெயரைப் போலவே செல்வத்தின் தாவரமாக கருதப்படுகிறது.
Money Plant Vastu Tips: வீட்டின் அழகை மேம்படுத்தும் பல்வேறு செடிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மணி பிளாண்ட். வாஸ்துப்படி மணி பிளாண்ட் செடியானது, அதன் பெயரைப் போலவே செல்வத்தின் தாவரமாக கருதப்படுகிறது. இந்த செடி இருக்கும் வீட்டில் பணம் அதிகம் சேரும் என்பது நம்பிக்கை. மேலும் மணி பிளாண்ட் உள்ள வீட்டில் மகிழ்ச்சியும், செழிப்பும் எப்போதும் இருக்கும்.

ஆனால் இந்த செடியை வீட்டில் வைத்திருந்தால், அதை சரியான வழியில், சரியான இடத்தில் வைத்து வளர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பது கூறப்படுகிறது. சில சமயங்களில் வீட்டில் வைத்துள்ள மணி பிளாண்ட் செடியானது, அந்த வீட்டிற்கு வரவிருக்கும் பிரச்சனைகளை குறிக்கும் என்பது தெரியுமா? கீழே ஒரு வீட்டிற்கு வரவுள்ள பிரச்சனையை மணி பிளாண்ட் எப்படி வெளிப்படுத்துகிறது என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இலைகள் காய்வது
செடிகளில் மிகவும் குறைவான பராமரிப்பில் எளிதில் வளரக்கூடிய செடி தான் மணி பிளாண்ட். இந்த மணி பிளாண்ட் செடியின் இலைகளானது சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து வந்தும் காய்ந்து போகிறது என்றால், அந்த வீட்டில் ஏதோ ஒரு பெரிய பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தம். இது தவிர உங்களின் பணம் தேவையில்லாமல் செலவழிக்கப்படுவதையும் குறிக்கும்.
ஒருவேளை மணி பிளாண்ட் செடியை அதிக சூரிய ஒளி படும் இடத்தில் வைத்து காய்ந்து போனால், அதற்கு காரணம் வெயில் தானே தவிர, வீட்டிற்கு வரும் பிரச்சனை அல்ல..

மணி பிளாண்ட் செடியை வீட்டிற்கு வெளியே வைக்கக்கூடாது?
வாஸ்துப்படி, நல்ல செழிப்பான ஒரு வீட்டில் இருந்து மணி பிளாண்ட் செடியை திருடிக் கொண்டு வந்து வீட்டில் வைத்தால், அந்த வீட்டில் பணம் அதிகம் சேரும். ஆனால் எடுத்த வீட்டில் உள்ளோருக்கு பண இழப்பு ஏற்படும். இந்நிலையில் மணி பிளாண்ட் செடியானது உங்கள் வீட்டில் இருந்தே திருடப்பட்டால் எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எனவே மணி பிளாண்ட் செடியை வீட்டிற்கு வெளியே வைப்பதைத் தவிர்த்திடுங்கள்.

மணி பிளாண்ட் வளராமல் இருப்பது
மணி பிளாண்ட் செடியை வீட்டில் வைக்கும் போது, அந்த செடி எந்த வேகத்தில் வேகமாக வளர்கிறதோ, அதே வேகத்தில் வீட்டில் செல்வம் அதிகரிக்கும். ஒருவேளை வீட்டில் வைக்கும் மணி பிளாண்ட் செடி வளராமல் இருந்தால், உங்கள் வீட்டில் பணம் சேர்வதற்கான அறிகுறி இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். மேலும் இந்த சூழ்நிலையில் ஒரு வாஸ்து நிபுணரை அணுகி என்ன செய்வதென்று கேட்கலாம்.

மணி பிளாண்ட் செடியை எந்த திசையில் வைக்க வேண்டும் மற்றும் எந்த திசையில் வைக்கக்கூடாது?
வாஸ்துப்படி, மணி பிளாண்ட் செடியை சரியான திசையில் வைத்தால் தான், அதன் பலனைப் பெற முடியும். தவறான திசையில் வைத்தால், அது பண இழப்புக்களையும், பணப் பிரச்சனைகளையும் தான் சந்திக்க வைக்கும்.
* மணி பிளாண்ட் செடியை தென்கிழக்கு மூலையில் வைத்து வளர்த்தால், வீட்டில் பணம் பெருகும்.
* மணி பிளாண்ட் செடியை வடகிழக்கு மூலையில் வைக்கக்கூடாது. இல்லாவிட்டால் அது திருமண வாழ்வில் பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
* மணி பிளாண்ட் செடியை மேல் நோக்கி படர விட வேண்டும். கீழே தொங்க விடக்கூடாது. அதேப் போல் மேலே படர விட கயிறுகளை அல்லது நூலைப் பயன்படுத்தக்கூடாது.
* மணி பிளாண்ட் பச்சை நிறம். இந்த பச்சை நிறமானது புதனின் நிறம். எனவே இந்த மணி பிளாண்ட்டை வீட்டில் வைப்பதாக இருந்தால் புதன்கிழமைகளில் வையுங்கள்.



Click it and Unblock the Notifications
