For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தீ விபத்து உள்ளிட்ட அவசரநிலையை எளிதாக கையாள்வது எப்படி ?

|

வீடுகளில் தீடிரென மின்சார நிறுத்தம் ஏற்படலாம், கால்வாயில் தண்ணீர் வடியலாம், பாத்ரூம் கதவு உட்புறமாகத் தாழ்பாழிடப்பட்டிருக்கலாம், ஓவனில் இருந்து புகை வரலாம். டயர் காற்றில்லாமல் தரையைத் தொட்டிருக்கலாம். இது போன்ற அவசரமாக சரிசெய்யக்கூடிய விசயங்கள் நிறைய இருக்கின்றன. அதே போல் இவற்றையெல்லாம் சரிசெய்யும் ஆட்கள் வரும்வரை நிச்சயம் காத்திருப்பது என்பது கடினமான செயலாகும்.

Everyday Emergencies You Need to Know How to Manage in Home

வீடுகளில் திடீரென நடக்கும் சின்னஞ்சிறிய அசம்பாவிதங்களுக்கும் தீயணைப்புத் துறையையோ அல்லது மருத்துவமனையையோ அணுக வாய்ப்பிருக்குமா என்றால் நிச்சயம் இருக்காது. அந்த மாதிரி தருணங்களில் பிறரை நம்பாமல் அவசரகாலத்தில் எப்படிக் நடந்துக் கொள்வது என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மின்சாரம் திடீரென்று தடைபடல்

மின்சாரம் திடீரென்று தடைபடல்

மின்சாரம் திடிரென நிற்கும் போது சுற்றத்தாரிடமும் நின்றுவிட்டதா என்று பாருங்கள். ஆனால் உங்கள் வீட்டிற்கு மட்டும் போயிருக்கிறது என்றால் ஃப்யூஸ் கேரியரை ஆய்வு செய்ய வேண்டும். ஃப்யூஸ் கேரியரை கழட்டுவதற்கு முன் மெயின் சுவிட்சை அணைத்து விட வேண்டும். ஃப்யூஸ் போயிருந்தது எனில் ஃப்யூஸ் கம்பியை மாற்றி பொருத்த வேண்டும். உங்கள் வீட்டிற்கும் மின்சாரம் வந்துவிடும்.

ஃப்யூஸ் கட்டையே இல்லையென்றால் நீங்கள் உங்கள் மின்கட்டணத்தைக் கட்டவில்லை என்று அர்த்தம். அப்படி எந்தக் காரணமும் இல்லை என்றால் அருகிலுள்ள எலெக்ட்ரீசனை அழைத்துப் பாருங்கள். அப்படியும் சரியாகவில்லை என்றால் அரசு மின்சார ஊழியருக்குத் தகவல் அளியுங்கள்.

குழந்தைகள் பாத்ரூமிற்குள் மாட்டிக் கொள்ளும் போது

குழந்தைகள் பாத்ரூமிற்குள் மாட்டிக் கொள்ளும் போது

சில சமயங்களில் உள்தாழ்ப்பாக்கள் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிடும். அந்த சமயங்களில் பெரியவர்களாக இருந்தால் உடல்திறனால் தாழ்ப்பாளை அழுத்தி திறந்து வெளியே வந்து விடுவார்கள். குழந்தைகளாக இருக்கும் போது அது சாத்தியமற்றது. எனவே சாவி போடும் இடத்தின் மையப்பகுதி துளை வழியே கூறிய நேரான கம்பியை விட்டு தாழ்ப்பாளை விடுவிக்க முயற்சிக்கலாம். அது தோற்கும் பட்சத்தில் தாழ்ப்பாளை திருகுகளை கழட்டி அப்புறப்படுத்தி கதவைத் திறக்கலாம். இது இரண்டும் தோற்கும் பட்சத்தில் கார்பெண்டரை அழைத்து தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

வாணலியில் நெருப்பு பற்றினால்

வாணலியில் நெருப்பு பற்றினால்

சமைத்துக் கொண்டிருக்கும் போது வாணலிலியில் நெருப்பு பற்றிக்கொண்டால் முதலில் அடுப்பை அணைக்க வேண்டும். அதன்பின் வாணொலியை மூடியைக் கொண்டு மூடவும். அது பயனளிக்கவில்லை என்றால், குளியல் துண்டை தண்ணீரில் நனைத்து அதனைக் கொண்டு நெருப்பை அணைக்க வேண்டும். அதைத் தாண்டியும் நெருப்பு விடாமல் எரிகிறது என்றால் முடிந்த வரை அதை வீட்டிற்கு வெளியில் எடுத்து வாருங்கள்.

கைகளை நறுக்கிக் கொள்ளுதல்அல்லது சுட்டுக் கொள்ளுதல்

கைகளை நறுக்கிக் கொள்ளுதல்அல்லது சுட்டுக் கொள்ளுதல்

காய்களை நறுக்கும் போது தவறுதலாக வெட்டிக் கொள்கிறோம். அப்போது சிறிய காயமாக இருந்தால் முதலில் இரத்தத்தை நிறுத்துவதற்கான காரியங்களை செய்ய வேண்டும். பெரிய காயமாக இருந்தால் இரத்தப் போக்கை கட்டுப்படுத்திவிட்டு எவ்வளவு விரைவாக மருத்துவரை அணுக முடியுமோ அவ்வளவு விரைவாக அணுக வேண்டும். சிறிய தீக்காயங்கள் ஏற்படும் போது பாதிக்கப்பட்ட இடங்களை தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பின் ஆயின்மெண்ட்களை அப்ளை செய்ய வேண்டும். பெரிய தீக்காயமாக இருந்தால் மற்ற இடங்களுக்கு தீ பரவுவதைத் தடுத்துவிட்டு மருத்துவமனையை அணுக வேண்டும்.

கால்வாய் ததும்பி வெளியில் வழிகிறதா

கால்வாய் ததும்பி வெளியில் வழிகிறதா

பிளாட்களில் வசிப்பவர்களுக்கு இந்தப் பாதிப்பு இருந்தாலும் சரி செய்வதற்கு மெயிண்டனன்ஸ் என்பதற்காகவே ஒரு நபர் நியமிக்கப்பட்டிருப்பார். எனவே இது போன்ற பிரச்சினைகளை அவர் பார்த்துக் கொள்வார். தனி வீடுகளில் வசிப்பவர்களுக்கு மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றியுள்ள மரங்களின் இலைகள் கால்வாயில் விழுந்து அடைப்பை உருவாக்குகின்றன. அந்த இலைகளை அகற்றுவது என்பது எளிதான வேலை தான். பாதுகாப்பு உபகரணங்களுடன் அதைச் செய்ய வேண்டும். மேலும் குப்பைகள் கால்வாயை சென்றடையாவாறு மூடிகளைக் கொண்டு மூடிவிட வேண்டும்.

எறும்பு, மூட்டைப் பூச்சி உள்ளிட்ட திடீரென வரும் பூச்சிகள்

எறும்பு, மூட்டைப் பூச்சி உள்ளிட்ட திடீரென வரும் பூச்சிகள்

திடீரென்று மூட்டைப்பூச்சிகள், எறும்புகள் உள்ளிட்ட தொந்தரவு அளிக்கும் பூச்சிகள் உங்கள் இருப்பிடத்தை ஆக்கிரமிக்கும். இது உங்களுக்கு மிகப்பெரிய தொந்தரவை அளிக்கும். இதை ஒளிப்பதற்காக பிரத்யேகமான ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் அதற்காக ஆகும் பொருட்செலவும், நேரக் காத்திருப்பும் அதிகம். எனவே எறும்புகள் உட்பட பூச்சிகளை கொல்வதற்கான மருந்துகள் கடைகளில் கிடைக்கின்றன. அந்த மருந்துகளை செயல்படுத்தும் வழிமுறைகளும் அதிலேயே கொடுக்கப்பட்டுள்ளன. எனவே திடீரென்று ஏற்படும் பூச்சித் தொல்லைகளில் இருந்து எளிதில் நீங்கள் விடுபடலாம்.

குழாயில் தண்ணீர் சொட்டுதல்

குழாயில் தண்ணீர் சொட்டுதல்

தண்ணீர் இல்லாத சூழலில் குழாயை அணைத்தும் தண்ணீர் வீணாவதை நாம் ஒரு போதும் விரும்பமாட்டோம். அதே சமயத்தில் ஒவ்வொரு முறையும் பிளம்பரை நாம் அழைக்கிறோம். இதுபோன்ற சிறிய வேலைகளுக்காக அவனது நிரந்தர வேலையை பாதியில் விட்டுவிட்டு வர மாட்டான். ப்ளம்பர் எப்போது வருகிறாரோ அதுவரை தண்ணீர் வீணாகத் தான் போகும். குழாயில் உள்ள நட்டு போல்ட்டுகள் லூசாக இருப்பதே தண்ணீர் சிந்துவதற்கான காரணம் . ஸ்பேனர்களின் துணைக் கொண்டு நாமே இதைச் சரிச் செய்ய முடியும்.

நடுவளியில் காரின் டயர் பஞ்சர்

நடுவளியில் காரின் டயர் பஞ்சர்

எங்காவது செல்லும் போது கார் பஞ்சர் ஆவது மிகுந்த மன வேதனையை அளிக்கும். மேலும் அது நெடுஞ்சாலையாக இருந்தால் நிச்சயம் அது படுமோசமான அனுபவமாக இருக்கும். குறைந்த பட்சம் டயரை கழட்டி மாட்டவாவது தெரிந்திருக்க வேண்டும். அதைக் கற்றுக் கொண்டோம் என்றால் மாற்று டயர்களை மாற்றிவிட்டு பயணத்தை தொடரலாம். அல்லது மாற்று டயர் இல்லாத போதும் டயரை கழட்டிக் கொண்டு மெக்கானிக் கடைக்கு சென்று சரிசெய்துவிட்டு வந்துவிடலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: home improvement oven வீடு
English summary

Everyday Emergencies You Need to Know How to Manage in Home

We have faced lot of emercency situation in our home such as What to do when you get a burn or cut while cooking,When there’s a fire in your skillet or microwave,When you get a flat tire..etc. Here we discuss about 10 everyday emercencies you need know how to manage in home.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more