Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இந்த 2 பொருள் இருந்தா போதும், இனி சானிடைசர் வாங்குற அவசியமே இருக்காது…
சமீபத்தில் ஜூஹி சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேம்பு மற்றும் மஞ்சள் தூளை வைத்து வீட்டிலேயே ஆயுர்வேத முறையில் காற்று சுத்திகரிப்பான் தயார் செய்வது எப்படி என்பது குறித்து பதிவிட்டிருந்தார்.
நம்மையும் மீறி நம் அன்றாட வாழ்வில் ஒரு அங்கமாக மாறிவிட்ட பொருள் என்றால், அது சானிடைசர் மற்றும் சுத்திகரிப்பான். கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியது முதல் கைகளையும், நம் இருப்பிடத்தையும் சுத்தப்படுத்துங்கள் என்று தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வந்ததால், அன்றாட பணிகளில் அது ஒரு முக்கிய இடத்தை பிடித்து விட்டது. சரி, கைகளை சுத்தம் செய்ய சோப்பு மற்றும் தண்ணீர் உள்ளது. இது வீட்டிற்குள் இருக்கும் போது சரி. வெளியே எங்காவது சென்றால், ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர் உள்ளது. காற்றை சுத்தம் செய்ய எத்தனை சுத்திகரிப்பான்கள் உள்ளன. இவை அனைத்தையும் தொடர்ந்து பயன்படுத்துகிறோமே, இவை உடலுக்கு நல்லது தானா? என்று யோசித்தது உண்டா?

பொதுவாக வீட்டில் இருக்கும் போதாவது ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட சானிடைசரை பயன்படுத்த வேண்டாம் என்றே கூறப்படுகிறது. நம் வீட்டில் இருக்கக்கூடிய சில பொருட்களை வைத்தே ஆயுர்வேத முறையில் நம்மையும், நம் வீட்டையும் சுத்தமாக வைத்துக் கொள்ள முடியும். அது பற்றி தான் இப்போது தெரிந்து கொள்ள போகிறோம். இதற்கு தேவையானவை அனைத்தும் இரண்டே பொருட்கள் தான்.
சமீபத்தில் கூட, ஜூஹி சாவ்லா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், வேம்பு மற்றும் மஞ்சள் தூளை வைத்து வீட்டிலேயே ஆயுர்வேத முறையில் காற்று சுத்திகரிப்பான் தயார் செய்வது எப்படி என்பது குறித்து பதிவிட்டிருந்தார்.

வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆயுர்வேத சுத்திகரிப்பான்
ஒரு சுத்திகரிப்பானால் உங்கள் சுற்றுப்புறத்தை தூய்மையாக்குவதற்கு முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா, கோவிட்-19 இந்த வகையில் மிக மோசமாக தாக்குவதற்கு முன்பு வரை, நாம் அனைவரும் இதை பற்றி மறந்துவிட்டோம். ஆம், நடிகை ஜூஹி சாவ்லா, வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய ஆயுர்வேத காற்று சுத்திகரிப்பானின் செய்முறையை வெளியிட்டதோடு, "வீட்டில் ஒரு சுத்திகரிப்பு இயந்திரத்தை பயன்படுத்தாமல் அறையை சுத்தப்படுத்த முடியும் என்றும், அதற்கு நம் சமூகத்தை ஒரு முறை பார்த்த பின்பாவது, ஆயுர்வேதத்தை நம்ப தொடங்க வேண்டும். கோவிட்-19 ஆயுர்வேதத்தின் மீதான நம்பிக்கையை மீண்டும் நிலைநிறுத்தியுள்ளது என்று கூறியதோடு, மேலும் இது உங்கள் வீட்டையும் கைகளையும் சுத்தப்படுத்தும் ஒரு அற்புத வழிமுறை என்று குறிப்பிட்டுள்ளார்."

நேச்சுரல் சானிடைசர் மற்றும் காற்று சுத்திகரிப்பான் செய்முறை:
கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசரை, வெறும் வேம்பு மற்றும் மஞ்சள் கொண்டு சுலபமாக வீட்டிலேயே தயாரித்திட முடியுமா? ஆம், முடியும். வாருங்கள் இப்போது அதன் செய்முறை பற்றி தெரிந்து கொள்வோம்.
* ஒரு பவுளில் வேப்பிலைகளை எடுத்துக் கொள்ளவும். அவை புதிதாகவும், சுத்தமாகவும் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். ஒருவேளை அவற்றில் அழுக்குகள் ஏதேனும் இருந்தால், ஒரு பாத்திரத்தில் உள்ள சுத்தமாக நீரில் வேப்பிலைகளை நனைத்து, மென்மையாக கைகளால் கழுவிடவும்.
* கழுவி எடுத்து வைத்துள்ள வேப்பிலையுடன், அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
* அடுத்ததாக, அந்த பௌல் நிறைய தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கவும்.
* தயார் செய்த அந்த நீர் கலவை வீட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் வைக்கலாம். இப்படி செய்வதன் மூலம் காற்று சுத்தமாவதோடு, அவற்றை கைகளை சுத்தம் செய்யும் சானிடைசராகவும் உபயோகிக்கலாம்.

மஞ்சளில் உள்ள ஆரோக்கிய பலன்கள்:
* சருமத்திற்கு மிகுந்த நன்மை அளிக்கக்கூடியது. அவற்றில் உள்ள ஆன்டிசெப்டிக் பண்புகள் சருமத்தின் மீதுள்ள புண்கள் மற்றும் காயங்களை குணப்படுத்தக்கூடியது.
* மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைத்திடும்.
* வாய் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
* மூட்டு வலிக்கு சிறந்த தீர்வு வழங்கக்கூடியது.
* நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு நல்ல பலனளிக்கக்கூடியது.
* இன்சோமினியா எனும் தூக்கமின்மை பிரச்சனைக்கு நல்லது.
* இரவு தூங்குவதற்கு முன்பு மஞ்சள் கலந்த பால் குடித்துவிட்டு தூங்குவது, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும்.

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணங்கள்:
வயதான தோற்றத்தை தடுக்கும்
பொதுவாகவே வேப்பிலைகளுக்கு வயதாவதை குறைக்கும் தன்மையுண்டு. அதனால், நீண்ட நாட்களுக்கு சரும சுருக்கமின்றி, இளமை தோற்றத்தை பெற்றிட முடியும்.

தீ காயங்கள்
தீ காயங்களின் மீது வேம்பு எண்ணெயை அல்லது பச்சை வேப்பிலையை அரைத்தோ தடவுவதன் மூலம் விரைந்து குணமடையும். வேம்பில் ஆன்டிசெப்டிக் பண்புகள் உள்ளதால் அவை, சருமத்தின் மீதுள்ள அனைத்து வகையான காயங்களையும் சரிசெய்திடும் ஆற்றல் கொண்டது.

மஞ்சள் காமாலை
மஞ்சள் காமாலையை சரி செய்வதில் வேம்பு அதீத ஆற்றல் கொண்டது. அதற்கு, சுக்கு தூளை கலந்த வேம்பு நீரானது, பித்தம் குடலை சென்றடைவதற்கான தடையை நீக்கிட வல்லது.

வயிறு தொடர்பான பிரச்சனைகள்
வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்கள் தினந்தோறும், வேப்பிலை சாறு குடித்து வந்தால், வயிற்றில் இருந்து தொற்று ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்கள் நீக்கி வயிற்றை சுத்தப்படுத்திடும்.
மேலே கூறிய அனைத்து பலன்களை காட்டிலும், இவற்றில் மற்றொரு பலனும் உள்ளது. வேம்பு மற்றும் மஞ்சள் இரண்டுமே சருமத்திற்கு நன்மை அளிப்பதோடு, எவ்வித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாதவை. அதுமட்டுமல்லாது, அவற்றை அளவிற்கு அதிகமாக உபயோகித்தால் கூட எந்த பக்கவிளைவும் ஏற்படாது. எனவே, இனிமேலாவது ஆல்கஹால் கொண்டு தயாரிக்கப்பட்ட சானிடைசர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வீட்டிலேயே சானிடைசர் மற்றும் காற்று சுத்திகரிப்பானை தயாரித்து, இயற்கையான ஆரோக்கியமான சருமத்தையும், சுத்தமான சுற்றுச்சூழலையும் அனுபவித்திடுங்கள்.



Click it and Unblock the Notifications