For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமையலறையில இந்த இடங்கள மட்டும் தினமும் சுத்தம் செய்ய மறந்துடாதீங்க…

ஒரு வீட்டின் சமையறை என்பது அனைத்து அறைகளை காட்டிலும் சற்று முக்கியத்துவம் நிறைந்தது. உணவு இல்லாமல் யாரும் இருக்க முடியாது அல்லவா? எனவே அத்தகைய சமையறையில் கிருமிகள் எனும் பேச்சுக்கே இடம் இருக்க கூடாது.

|

இன்றைய இக்காட்டான சூழ்நிலையில் சுத்தம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். தனி மனித சுகாதாரம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஒவ்வொரு வீட்டின் சுகாதாரமும் முக்கியம். குழந்தைகள், பெரியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலர் நமது வீடுகளில் இருப்பர். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களை எளிதில் நோய் தாக்கும் அபாயம் இருப்பதாலேயே சுகாதாரத்தை பேணுவது அவசியம் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த கட்டுரையில் சமையல் அறை சுத்தம் குறித்து எடுத்துரைக்க போகிறோம்.

7 Things In The Kitchen You Should Clean Everyday

ஒரு வீட்டின் சமையறை என்பது அனைத்து அறைகளை காட்டிலும் சற்று முக்கியத்துவம் நிறைந்தது. உணவு இல்லாமல் யாரும் இருக்க முடியாது அல்லவா? எனவே அத்தகைய சமையறையில் கிருமிகள் எனும் பேச்சுக்கே இடம் இருக்க கூடாது. ஏனென்றால், அவற்றின் மூலம் ஒட்டுமொத்த குடும்பமும் பாதிக்கப்படலாம். அதனால் தான், சமையலறையை தினமும் சுத்தம் செய்ய வேண்டும் என்கின்றனர்.

MOST READ: வீட்டில் செல்வம் பெருகணுமா? அப்ப சமையலறையில் இந்த மாற்றத்தை உடனே செய்யுங்க...

சரி, முழு சமையலைறையையும் தினமும் எவ்வாறு சுத்தம் செய்வது என்று கேட்பது புரிகிறது. முழு சமையலறையும் வேண்டாம். சமையலறையின் சில குறிப்பிட்ட பகுதிகளை மட்டும் தினந்தோறும் சுத்தம் செய்து வந்தால் போதுமானது. ஏனென்றால், சமையலறையின் சில பகுதிகள், கிருமிகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருப்பதால், சால்மோனெல்லா தொற்று, டைபாய்டு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடும். இவை உணவில் பாக்டீரியா மற்றும் பிற தொற்றுநோய்களைத் தூண்டக்கூடும். எனவே, சமையலறையில் தினந்தோறும் சுத்தம் செய்யப்பட வேண்டிய சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத்திரம் கழுவும் தொட்டிக்கு கீழ் பகுதி

பாத்திரம் கழுவும் தொட்டிக்கு கீழ் பகுதி

சமையறையில் உள்ள பாத்திரம் கழுவும் தொட்டிக்கு கீழ் பகுதியில் துவாரங்கள், வடிகால்கள், குழாய்கள் இருப்பதால் அங்கே கிருமிகள் அதிகமாக இருக்கக்கூடும். பெரும்பாலும் ஊர்ந்து செல்லும் பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் வடிகால் வழியாக மேலேறி, உணவு பாத்திரங்கள் மற்றும் சமையலறை பாகங்கள் போன்றவற்றையும் பாதிக்கலாம். எனவே, தொட்டியின் கீழே உள்ள பகுதியை சுத்தம் செய்வது மிகவும் அவசியம். இதன்மூலம், அந்த பகுதியை தொற்றுநோய்கள் மற்றும் நோய்க்கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடமாக மாறாமல் பார்த்துக் கொள்ள முடியும். எனவே, தினமும் இரவு தூங்குவதற்கு முன்பு, ஒரு கிருமிநாசினி கரைசலைக் கொண்டு அந்த பகுதியை சுத்தம் செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் அல்லது ஒரு பகுதியை ஒரு ஃபினைல் கரைசல் கொண்டும் சுத்தம் செய்யலாம்.

சமையலறை அடுக்குகள்

சமையலறை அடுக்குகள்

பொதுவாகவே, சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் பகுதிகளில் ஒன்று சமையலறை அடுக்குகள். அதை தண்ணீரில் துடைக்கும் போது ஸ்லாப் சுத்தமாகத் தோன்றலாம். உண்மையை கூற வேண்டுமென்றால், அவையே பல வியாதிகளுக்கு காரணமாகக்கூடும். இதற்கு ஸ்லாப்பில் இருக்கும் உணவுத் துகள்கள் காரணமாக இருக்கிறது. இது பெரும்பாலும் நுண்ணுயிரிகள் மற்றும் நோய்க்கிருமிகளின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். மேலும், இது உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே, பேக்கிங் சோடா மற்றும் வினிகர் ஆகியவற்றை கொண்டு வீட்டிலே தயாரிக்கும் கிருமிநாசினி கரைசலுடன் உங்கள் ஸ்லாப்பை சுத்தம் செய்வது கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற தொற்றுநோய்களை விரட்டிட உதவும்.

கேஸ் ஸ்டவ்

கேஸ் ஸ்டவ்

சமைக்கும் இடத்தை சுத்தம் செய்வது என்பது இந்திய மரபுகளின் ஒரு முக்கிய பகுதியாகும். ஏனெனில், முதலில் சமைக்கப்படும் உணவு எப்போதும் தெய்வத்திற்கு வழங்கப்படும். சமைக்கும் போது பெரும்பாலும் உணவுத் துகள்கள் அடுப்பின் மேல் விழக்கூடும். இது கிருமிகள் மற்றும் தொற்றுநோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். எனவே, கிருமிநாசினி கரைசல்களுடன் அடுப்பை முறையாக சுத்தம் செய்வது அவசியம். அடுப்பை சுத்தப்படுத்துவதற்கு நீங்கள் வேப்ப இலை தண்ணீரை கூட பயன்படுத்தலாம் அல்லது வினிகர் அல்லது பேக்கிங் சோடாவின் கரைசலையும் பயன்படுத்தலாம். ஆனால் அடுப்பு அணைக்கப்பட்ட பிறகே சுத்தப்படுத்த வேண்டும் என்பதை எந்த நாளும் மறந்துவிடாதீர்கள்.

ஓவன்

ஓவன்

சமையல் துறையில் மிகவும் பயனுள்ள கண்டுபிடிப்புகளில் ஒன்று என்றால் அது மைக்ரோவேவ் ஓவன். பெரும்பாலும் இந்த மைக்ரோவேவ் உணவு சமைக்க அல்லது உணவை சூடாக்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இது நம் அன்றாட வாழ்க்கையை எளிதாக்குகிறது. ஆனால் இத்தகைய ஓவன்களால் உங்களை ஆரோக்கியமற்றதாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கிருமிகள் மற்றும் தொற்றுநோய்கள் உருவாகுவதைத் தடுக்க இந்த உபகரணங்களை தவறாமல் சுத்தம் செய்வது அவசியம். ஒரு கிண்ணம் தண்ணீர் மற்றும் பாதி எலுமிச்சை வைத்து அவற்றை சுத்தம் செய்யலாம். ஓவனை சூடாக்கிய பின், அடுப்பை அணைத்து இந்த எலுமிச்சை நீரில் சுத்தம் செய்யவும். ஆனால் கிருமிநாசினி பயன்படுத்துவது கிருமிகள் இல்லாதவை என்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழியாகும்.

மிக்சர் ஜார்

மிக்சர் ஜார்

மிக்சர் ஜாரானது கிருமிகளுக்கு இனப்பெருக்கம் செய்யும் இடமாக இருக்கக்கூடும் என்பதை உணராமல் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் அதை பயன்படுத்துகின்றோம். பெரும்பாலும் மிக்சர் ஜாரை பாத்திரங்களைக் கழுவும் சோப்புகளால் கழுவுகிறோம். ஆனால் பிளேடுகளுக்குக் கீழே உள்ள பகுதியை மட்டும் திறந்து சுத்தம் செய்ய மறந்து விடுகிறோம். துரதிர்ஷ்டவசமாக, கத்திகளுக்கு கீழே உள்ள இடத்தில் தான் உணவுத் துகள்கள் படிந்துள்ளன. அவை சரியாக சுத்தம் செய்யப்படாவிட்டால், பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். எனவே, உங்கள் மிக்சர் ஜாரில் கிருமிகள் இல்லை என்பதை உறுதி செய்வதற்கான சிறந்த வழி, வழங்கப்பட்ட பாகங்களை பயன்படுத்தி பிளேட்களைத் திறந்து வெதுவெதுப்பான நீரிலும், கிருமிநாசினி கரைசலிலும் கழுவ வேண்டும்.

சமையலறை துண்டு

சமையலறை துண்டு

சமையலறை துண்டுகள் சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் விஷயங்களில் ஒன்றாகும். ஏனெனில் பாத்திரங்களைத் துடைப்பதில் இருந்து, சூடான பாத்திரங்களை வைத்திருப்பது வரை பயன்படுகின்றன. ஆனால் இந்த சாதாரண துண்டுகள் கூட உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஏனென்றால் சமைத்த உணவு மற்றும் பிற பொருட்களின் துகள்கள் துண்டுகளில் ஒட்டிக்கொண்டு கிருமிகளை உருவாக்கக்கூடும். எனவே, அவற்றை கழுவ சிறந்த வழி ஒரு கிருமிநாசினியைப் பயன்படுத்தி வெதுவெதுப்பான நீரில் கழுவுவது தான். அதுமட்டுமில்லாமல், சூரிய ஒளியில் அவற்றை உலர்த்துவது கிருமிகளை ஒழிப்பதற்கு சிறந்த யோசனையாகும்.

சமையலறை பாத்திரம் கழுவும் தொட்டி

சமையலறை பாத்திரம் கழுவும் தொட்டி

காய்கறிகளை கழுவுவது முதல் இறைச்சி வரை, தானியங்கள் முதல் அழுக்கு பாத்திரங்கள் வரை, அனைத்துமே சமையலறையில் உள்ள பாத்திரம் கழுவும் இடத்தில் தான். எனவே, கரப்பான் பூச்சிகள் மற்றும் பிற நோய்தொற்று கிருமிகள் அந்த இடத்தில் சேராமல் தவிர்க்க வேண்டுமென்றால், தினந்தோறும் பாத்திரம் கழுவும் தொட்டியை கழுவ மறந்துவிடாதீர்கள். வெறும் தண்ணீர் மற்றும் சோப்பு மட்டும் போட்டு கழுவினால் போதாது. வெதுவெதுப்பான நீர் மற்றும் கிருமிநாசினி கரைசலை பயன்படுத்தி கழுவ வேண்டும். அப்போது தான், சமைத்த உணவுகளையும், குடும்ப உறுப்பினர்களையும், எந்தவொரு நோய்தொற்றும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

7 Things In The Kitchen You Should Clean Everyday

Here we listed some important things in the kitchen you should clean everyday. Read on...
Story first published: Thursday, May 28, 2020, 19:29 [IST]
Desktop Bottom Promotion