For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சிகளை ஒரே நாளில் அழிக்க இந்த நேச்சுரல் ஸ்ப்ரே யூஸ் பண்ணுங்க!

|

வீட்டுக்குள் எத்தனையோ டெக்னாலஜி நுழைந்த பிறகும் கூட, இந்த மூட்டைப்பூச்சி, கரப்பான்பூச்சி தொல்லையில் இன்னும் ஒழியவில்லை.

கடைகளில் மாதம் ஒரு புதிய ரசாயன மருந்தினை வாங்கி அடித்துவிட்டு, வீட்டை விட்டு அன்றி வெளியேறி மூக்கை பொத்திக் கொண்டு அமர்வது தான் மிச்சம்.

மீண்டும், வீட்டிற்குள் சென்றால், ஓரிரு நாட்கள் வெக்கேஷன் சென்று வந்தது போல, பூச்சிகள் மீண்டும் வந்துவிடும். இந்த தொல்லை உங்கள் வீட்டிலும் இருக்கிறதா?

அப்படியானால், நீங்கள் இந்த முறை ரசாயன மருந்துகளை விட்டொழித்துவிட்டு, இயற்கை முறைக்கு மாறுங்கள். இவை கண்டிப்பாக நல்ல தீர்வளிக்கும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
லாவெண்டர் ரோஸ்மேரி மற்றும் யூக்கலிப்டஸ்!

லாவெண்டர் ரோஸ்மேரி மற்றும் யூக்கலிப்டஸ்!

உங்கள் வீட்டில் மூட்டைப்பூச்சி தொல்லை இருக்கிறதா? கவலையை விடுங்கள். லாவெண்டர் ரோஸ்மேரி மற்றும் யூக்கலிப்டஸ் எண்ணெய்களை வாங்கி, ஒவ்வொன்றிலும் மூன்று துளிகளை எடுத்து, ஒரு கப் நீருடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.

எண்ணெய் சேர்த்த நீரை நன்கு கலக்கிக் கொண்டு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளவும். இந்த நீரை மூட்டைப்பூச்சிகள் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்தால் மூட்டைப்பூச்சி தொல்லையை எளிதில் போக்கிவிடலாம்.

பெப்பர்மின்ட் ஆயில்!

பெப்பர்மின்ட் ஆயில்!

சிலந்தி தொல்லை வீட்டில் இருந்தால், பெப்பர்மின்ட் ஆயில் பயன்படுத்துங்கள். சிலந்திகளுக்கு பெப்பர்மின்ட் வாசனையே ஆகாது. ஒரு சில பெப்பர்மின்ட் ஆயிலை தண்ணீருடன் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். அதை நன்கு கலந்து சிலந்தி இருக்கும் இடங்களில் தெளித்தால் சிலந்தி தொல்லையை தீர்த்துக் கட்டிவிடலாம்.

பேக்கிங் சோடா!

பேக்கிங் சோடா!

பேக்கிங் சோடா பூச்சிகளுக்கு ஆகாதா ஒன்று. உங்கள் வீடுகளில் பூச்சிகள் அண்டியிருக்கும் பிளவுகளில் பேக்கிங் சோடாவை தூவி விடுங்கள். இது பூச்சிகளை அழித்து விடும்.

வினிகர்!

வினிகர்!

தண்ணீருடன் வினிகரை சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கிச்சன் கப்போர்டுகளில் பூச்சி தொல்லை இருந்தால், அங்கு இதை ஸ்ப்ரே செய்யுங்கள். இதன் வாசனை பூச்சிகளை விரட்டிவிடும்.

சிவப்பு மிளகாய் தூள்!

சிவப்பு மிளகாய் தூள்!

சிவப்பு மிளகாய் தூளை பூச்சிகள் இருக்கும் இடத்தில் தூவிவிட்டால் போதுமானது. இது கடினமான தன்மை கொண்டது. ஆனால், சிவப்பு மிளகாய்த்தூள் தூவிய இடத்திற்கு நீங்கள் வளர்க்கும் செல்ல பிராணி செல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

புதினா!

புதினா!

ஓரிரு புதினா இலைகளை பிடுங்கி, அதை உங்கள் வீட்டை சுற்றி பூச்சிகள் இருக்கும் இடத்தில் தூவிவிடுங்கள். புதினாவின் வாசனை பூச்சிகளை தூர விரட்டிவிடும்.

அதேபோல, புதினாவின் இலைகளை காய வைத்து, அதை ஒரு கவரில் பேக் செய்து உங்கள் வீடு மெத்தைக்கு கீழே வைத்து விடுங்கள். இது பூச்சிகள் அண்டாமல் இருக்க செய்யும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Six Simple Remedies That Make Your Home Bugs Free, Without Chemicals

Six Simple Remedies That Make Your Home Bugs Free, Without Chemicals
Story first published: Wednesday, August 24, 2016, 16:12 [IST]
Desktop Bottom Promotion